மிட்டாய் என நினைத்து மாத்திரையை சாப்பிட்ட சிறுவன் உயிரிழப்பு!!

திருச்சி அருகே மிட்டாய் என நினைத்து மாத்திரையை சாப்பிட்ட சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

எடமலைப்பட்டிபுதூர் பகுதியைச் சேர்ந்த சுரேஷ் – தனபாக்கியம் தம்பதியின் 5 வயது மகன் வர்ஷன் வீட்டில் வைக்கப்பட்டிருந்த சத்து மாத்திரையை மிட்டாய் என நினைத்து அதிக அளவு சாப்பிட்டுள்ளார். இதுகுறித்து பெற்றோருக்கு தெரியவில்லை.

இதனையடுத்து சிறுவன் மயக்கமடைந்தார். பதறிப்போன பெற்றோர் சிறுவனை உடனடியாக திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அதனைத் தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக எழும்பூரில் உள்ள குழந்தைகள் நல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

tablets

ஆனாலும் சிகிச்சை பலன் அளிக்காமல் சிறுவன் உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து எடமலைப்பட்டிபுதூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இது போன்ற சம்பவத்தை தவிர்க்க மாத்திரைகளை குழந்தைகள் கை படாத தூரத்தில் வைக்க வேண்டும் என்றும், குழந்தைகளை பெற்றோர் தொடர்ந்த கண்காணிக்க வேண்டும் எனவும் மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

newstm.in


Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.