மீண்டும் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு; ஊரடங்கு கட்டுப்பாடுகள் கடுமையாகுமா?

நாடு முழுவதும்
கொரோனா
வைரஸ் பாதிப்பு படிப்படியாக குறைந்து கொண்டிருக்கிறது. இரண்டாவது அலையின் சீற்றம் பெரிதும் தணிந்து, தினசரி தொற்று 20 ஆயிரத்திற்கும் கீழ் சரிந்துள்ளது. நாட்டிலேயே அதிகபட்ச தினசரி பாதிப்புகளை பதிவு செய்து வரும் மாநிலமாக
கேரளா
இருக்கிறது. இருப்பினும் கடந்த செப்டம்பர் 10ஆம் தேதி 25 ஆயிரத்திற்கும் மேல் நோய்த்தொற்று பதிவான நிலையில், தற்போது 14 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்துள்ளது. நடப்பு மாதம் தொடங்கியதில் இருந்தே இறங்குமுகமாக இருந்த கொரோனா தொற்று திடீரென அதிகரித்து 10 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

கொரோனா பாதிப்பு நிலவரம்

நேற்று 81,914 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டன. அதில் 10,691 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. புதிய பாதிப்புகள் பதிவானவர்களில்
தடுப்பூசி
போட்டுக் கொண்ட 8,969 பேர் அடங்குவர். அதில் 3,321 பேர் இரண்டு டோஸ் தடுப்பூசிகளையும் போட்டுக் கொண்டனர். 2,666 பேர் ஒரு டோஸ் மட்டும் போட்டிருக்கின்றனர். 12,655 பேர் குணமடைந்துள்ளனர். 85 பேர் பலியாகி இருக்கின்றனர். இதன்மூலம் மாநிலத்தின் மொத்த பலி எண்ணிக்கை 26,259ஆக அதிகரித்துள்ளது. 13,891 கொரோனா தடுப்பூசி டோஸ்கள் போடப்பட்டுள்ளன. கொரோனா பரிசோதனையின் பாசிடிவ் விகிதம் 13.1 சதவீதமாக அதிகரித்துள்ளது.

சமூகப் பரவல் பாதிப்பு

மாநிலத்தின் மொத்த பாதிப்பு 48,07,416ஆக உயர்ந்துள்ளது. தற்போது 1,11,083 பேர் கொரோனா நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் 10.1 சதவீதம் பேர் மட்டும் மருத்துவமனைகள் அல்லது சிகிச்சை மையங்களில் தங்கி சிகிச்சை பெறுகின்றனர். நேற்றைய தினம் கண்டறியப்பட்ட புதிய பாதிப்புகளில் 10,196 பேருக்கு சமூகப் பரவல் மூலம் தொற்று ஏற்பட்டுள்ளது. 393 பேருக்கு எப்படி நோய்த்தொற்று பரவியது என்று கண்டறிய முடியவில்லை. புதிதாக பாதிக்கப்பட்டவர்களில் 52 பேர் மருத்துவத்துறையை சேர்ந்தவர்கள். 50 பேர் வெளிமாநிலங்களில் இருந்து வருகை புரிந்தவர்கள்.

மீண்டும் ஊரடங்கு அமலாகுமா?

கேரள மாநிலத்தில் அதிகபட்சமாக
எர்ணாகுளம்
மாவட்டத்தில் 1,639 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து திருச்சூர் 1,378 பேரும்,
திருவனந்தபுரம்
1,197 பேரும், கோழிக்கோடு 976 பேரும், கோட்டயம் 872 பேரும், கொல்லம் 739 பேரும், மலப்புரம் 687 பேரும், கண்ணூர் 602 பேரும், பத்தினம்திட்டா 584 பேரும், பாலக்காடு 575 பேரும்,
இடுக்கி
558 பேரும், ஆலப்புழா 466 பேரும், வயநாடு 263 பேரும், காசர்கோடு 155 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேசமயம் பல்வேறு மாவட்டங்களில் 3,61,495 பேர் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.

அதில், 3,48,743 பேர் வீடுகள் அல்லது நிறுவன தனிமைப்படுத்தும் மையங்களிலும், 12,752 பேர் மருத்துவமனைகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். 227 உள்ளாட்சி அமைப்புகளின் 332 வார்டுகளில் வாராந்திர தொற்று விகிதம் 10 சதவீதத்திற்கும் அதிகமாக காணப்படுகிறது. இப்பகுதிகளில் கடுமையான ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. அதேசமயம் மாநிலம் தழுவிய ஊரடங்கை அமல்படுத்த வாய்ப்பில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. விரைவில் நிலைமை கட்டுக்குள் வரும் என்று மாநில அரசு நம்பிக்கை தெரிவித்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.