முதலீட்டினை இருமடங்காக்கிய முத்தான 5 பங்குகள்.. நீங்க வாங்கியிருக்கீங்களா..?

பங்குச் சந்தைகளில் நீண்டகால முதலீடு என்பது ஒரு மாமரத்தை வளர்த்து எடுப்பதுபோல் எனலாம். ஏனெனில் அந்த மரத்தை நீங்கள் நல்லபடியாக வளர்த்தெடுத்து, பல வருடங்களுக்குப் பிறகே காய் காய்க்க தொடங்கும். அதன் பின்னரே நாம் அதனால் பயனடைய முடியும்.

ஆனால் இங்கு பலரும் பங்குச் சந்தை முதலீடு என்பது முதலீடு செய்த உடனேயே லாபம் தந்துவிடும். குறுகிய காலத்திலேயே நமக்கு லாபத்தை அள்ளிக் கொடுக்க விடும் என்று எதிர்பார்க்கின்றனர்.

அப்படி நினைத்து முதலீடு செய்வோமேயானால் கண்டிப்பாக நஷ்டத்தையே காண்பார்கள். பங்குச் சந்தையினை பொறுத்தவரையில் நீண்டகால நோக்கில் முதலீடு செய்பவர்கள் தான் லாபத்தில் உள்ளனர்.

ரூ.16 லட்சம் வருமானம்.. மாதம் ரூ.10 ஆயிரம் முதலீடு… அஞ்சலகத்தின் அசத்தல் திட்டம்..!

பொறுமையாக இருங்கள்

பொறுமையாக இருங்கள்

இதனை தெளிவாக சொல்லவேண்டுமானால், கடந்த 30 ஆண்டுகளில் சராசரியாக சந்தையானது, சுமார் 10,000% அதிகமாக வளர்ச்சி கண்டுள்ளது. ஆனால் இந்த ஏற்றம் ஒரேயடியாக ஏற்றம் காணவில்லை. ஏற்றம் இருந்தது. சந்தையில் சரிவும் இருந்தது. இதற்கிடையில் பொறுமையுடன் காத்திருப்பவர்களுக்கு தான், இந்த லாபம் கிடைத்திருக்கும். ஆக பங்கு சந்தையினை பொறுத்தவரையில், பொறுமையான காத்திருந்த நீண்டகால முதலீட்டாளர்களுக்கே நல்ல லாபமே.

பணவீக்கத்தினை விட லாபகரமானது?

பணவீக்கத்தினை விட லாபகரமானது?

பொதுவாக முதலீடு என்றாலே பணவீக்க விகிதத்தை கணக்கிட்டு அதற்கேற்ப முதலீடு செய்ய நிபுணர்கள் பரிந்துரைப்பர். அதோடு பணவீக்கத்தை விட கூடுதலாக வளர்ச்சியைக் காண சிறந்த வழி, பங்குச்சந்தை முதலீடுகள் தான் என நிபுணர்கள் கூறுகின்றனர். உண்மையில் பங்குச்சந்தையை பொருத்தவரைக்கும் நீண்டகால நோக்கில் நல்ல லாபகரமான முதலீடாகவும் இருந்து வருகிறது. அந்த வகையில் நீண்ட கால நோக்கில் லாபம் தந்த, முதலீட்டாளர்களின் முதலீட்டினை இருமடங்காக மாற்றிய 5 நிதித்துறை பங்குகளை பற்றித் தான், இந்த பதிவில் பார்க்கவிருக்கிறோம்.

பஜாஜ் பின்செர்வ் பங்கு வருமானம்
 

பஜாஜ் பின்செர்வ் பங்கு வருமானம்

நாட்டின் முன்னணி நிதி நிறுவனங்களில் ஒன்றான பஜாஜ் பின்செர்வ் நிறுவனம், கடந்த காலாண்டில் 9.34% விற்பனை வீழ்ச்சியை கண்டுள்ளது, இது கடந்த மூன்று ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சரிவாகும். எனினும் இந்த பங்கின் விலையானது கடந்த மூன்று ஆண்டுகளில் 213% மேலாக வருவாயினை கொடுத்துள்ளது. இதே காலகட்டத்தில் நிஃப்டி100 73.21% ஏற்றம் கண்டுள்ளது. கடந்த 2008-ஆம் ஆண்டிலிருந்து பஜாஜ் பின்சர்வ் லிமிடெட் நிறுவனம் 14 முறை டிவிடெண்டுகளை கொடுத்துள்ளது. அதோடு கடந்த 12 மாதங்களில் ஒரு பங்கிற்கு மூன்று ரூபாய் டிவிடென்டினை கொடுத்துள்ளது.

இதற்கிடையில் கடந்த 1 ஆண்டில் இந்த பங்கானது 198% மேலாக வருவாயினை கொடுத்துள்ளது. இன்று இதன் பங்கின் விலையானது 0.94% அதிகரித்து, 17,713.95 ரூபாயாக முடிவடைந்துள்ளது.

எஸ்பிஐ வங்கி

எஸ்பிஐ வங்கி

எஸ்பிஐ கடந்த நான்கு ஆண்டுகளில் இந்த வங்கிகள் பொதுத்துறை வங்கியின், மொத்த செயல்படாத சொத்துக்களின் மதிப்பு மற்றும் நிகர செயல்படாத சொத்துக்களின் மதிப்பானது, முறையே 4.98% மற்றும் 1.5% வலுவான நிலையிலேயே குறைந்து காணப்படுகிறது. மூன்று ஆண்டுகளில் இவ்வங்கி பங்கானது, 74.71% லாபத்தைக் கொடுத்துள்ளது. இதே காலகட்டத்தில் நிஃப்டி100 73.21% லாபத்தினை கொடுத்துள்ளது. பேங்க் நிஃப்டி இதே கால கட்டத்தில் 54.01% வருவாயினை கொடுத்துள்ளது. கடந்த ஜூலை 2, 2001 முதல் எஸ்பிஐ வங்கியானது 20 டிவிடெண்ட்களையும், கடந்த 12 மாதங்களில் ஒரு பங்கிற்கு நான்கு ரூபாய் டிவிடெண்டாகவும் கொடுத்துள்ளது.

இதற்கிடையில் கடந்த 1 ஆண்டில் இந்த பங்கானது 139.16% வருவாயினை கொடுத்துள்ளது. இன்று இந்த பங்கின் விலையானது 2.46% அதிகரித்து, 469.25 ரூபாயாக முடிவடைந்துள்ளது.

பஜாஜ் ஃபைனான்ஸ் பங்கு

பஜாஜ் ஃபைனான்ஸ் பங்கு

நாட்டின் முன்னணி நிதி நிறுவனமான பஜாஜ் ஃபைனான்ஸ் நிறுவனத்தின் சந்தை மூலதனம் 4,70,359.95 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளில் இந்த பங்கானது 257.62% வருவாயினை கொடுத்துள்ளது. கடந்த 12 மாதங்களில் இந்த நிறுவனமானது, ஒரு பங்குகிற்கு 10 ரூபாய் டிவிடெண்டினை அறிவித்துள்ளது. இதுவே கடந்த ஜூன் 29 2001க்குப் பிறகு 22 முறை அறிவித்துள்ளது.

இதற்கிடையில் கடந்த 1 ஆண்டில் இந்த பங்கானது 132.45% வருவாயினை கொடுத்துள்ளது. இன்று இந்த பங்கின் விலையானது 1.10% அதிகரித்து, 7,817.10 ரூபாயாக முடிவடைந்துள்ளது.

சோழமண்டலம் இன்வெஸ்ட்மெண்ட் & பைனான்ஸ்

சோழமண்டலம் இன்வெஸ்ட்மெண்ட் & பைனான்ஸ்

சோழமண்டலம் முதலீடு மற்றும் நிதி நிறுவனமான இது, 1978ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு லார்ஜ் கேப் நிறுவனமாகும். இதன் சந்தை மூலதனம் 47,173.46 கோடி ரூபாய் ஆகும். கடந்த மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக இந்த நிறுவனத்தின் பங்கு 156.42% மேலாக வருவாயினை கொடுத்துள்ளது. இதே காலகட்டத்தில் நிப்டி 100 73.21% வருவாயினை கொடுத்துள்ளது.

இதற்கிடையில் கடந்த 1 ஆண்டில் இந்த பங்கானது 126.33% வருவாயினை கொடுத்துள்ளது. இன்று இதன் பங்கின் விலையானது சற்று அதிகரித்து, 570.35 ரூபாயாக முடிவடைந்துள்ளது.

ஸ்ரீராம் டிரான்ஸ்போர்ட் பங்கு

ஸ்ரீராம் டிரான்ஸ்போர்ட் பங்கு

ஸ்ரீராம் டிரான்ஸ்போர்ட் பைனான்ஸ் நிறுவனம் 1979 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட ஒரு நிறுவனம் ஆகும். இதன் சந்தை மூலதனம் 35,609.45 கோடி ரூபாயாக உள்ளது. இந்த பங்கானது கடந்த 3 ஆண்டுகளில் 27.2% லாபத்தைக் கொடுத்துள்ளது. இதே காலகட்டத்தில் நிஃப்டி100 73.21% ஏற்றத்தினை கண்டுள்ளது.

கடந்த 1 ஆண்டில் இந்த பங்கானது 108.27% வருவாயினை கொடுத்துள்ளது. இன்று இதன் பங்கின் விலையானது சற்று அதிகரித்து, 1,334.90 ரூபாயாக முடிவடைந்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

5 financial stocks that doubled investor’s money in just one year

Stocks updates.. 5 financial stocks that doubled investor’s money in just one year

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.