விவேக் சாருடைய கடைசிப் படமாக இருக்கும்ன்னு நினைக்கலை: சுந்தர் சி வேதனை..

கடந்த 2014ஆம் ஆண்டு
சுந்தர் சி
இயக்கத்தில் வெளியான அரண்மனை திரைப்படம் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றதால் அதனை தொடர்ந்து அரண்மனைதிரைப்படத்தின் தொடர்ச்சியாக அதன் இரண்டாம் பாகம் வெளியானது. இந்நிலையில் தற்போது இந்தப்படத்தின் மூன்றாம் பாகத்தை உருவாக்கியுள்ளார் சுந்தர் சி. வரும் அக்டோபர் 14-ம் தேதி வெளியாக உள்ள இந்தப்படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு நடைபெற்றது.

அப்போது பேசிய அவர், உண்மையில் ஒரு படத்தின் அடுத்தடுத்த பாகங்கள் எடுப்பது மிகவும் கடினம். ஏனென்றால் புதிதாக ஒரு படம் எடுத்தால், எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் ரசிகர்கள் படத்துக்கு வருவார்கள். ஆனால் இரண்டாம் மற்றும் மூன்றாம் பாகம் என எடுக்கும்போது ரசிகர்கள் எதிர்பார்ப்பது இருக்க வேண்டும். ஆனால், அது வேறு மாதிரி இருக்க வேண்டும். அதுதான் எங்களுடைய சவால்.

‘அரண்மனை’ படங்கள் என்பது தயாரிப்பாளராக எனக்கு லாபகரமான படங்கள். ஆனால், நினைத்தவுடன் உடனே இயக்க முடியாது. நல்ல கதை, காமெடி எல்லாம் அமைய வேண்டும். ‘
அரண்மனை 3
‘ படத்துக்கு நல்ல கதை, நடிகர்கள் எல்லாம் அமைந்தார்கள். முதலில் ஆர்யாவுக்குதான் நன்றி சொல்ல வேண்டும். அவர் தயாரிப்பாளர்களின் நடிகர். இப்போது வரை படத்தின் வியாபாரம் உள்ளிட்டவற்றிலும் பக்கபலமாக இருக்கிறார். இந்தப் படத்தின் க்ளைமாக்ஸை மட்டும் 15 நாட்கள் படமாக்கினோம்.
ஆர்யா
– ராஷிகண்ணா இருவருமே கஷ்டப்பட்டு நடித்தார்கள்.

‘டாக்டர்’ படத்திற்கு கிடைத்த வரவேற்பு: மீண்டும் இணையும் நெல்சன் – சிவகார்த்திகேயன் கூட்டணி!

இதில்
விவேக்
சார், யோகி பாபு ஆகியோர் காமெடி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். இது விவேக் சாருடைய கடைசிப் படமாக இருக்கும் என நினைக்கவில்லை. குஜராத்தில் 25 நாட்கள் ஒரு குடும்பமாக இருந்தோம். எங்களுக்கு எல்லாம் உடல்நிலை குறித்து நிறைய அஅறிவுரை செய்வார். இயக்குநராக, நடிகராக விவேக் சாருடன் நிறைய படங்களில் பயணப்பட்டுள்ளேன். ஆகையால், நிறைய நினைவுகள் உள்ளன. விவேக் சாருடைய இழப்பு மிகவும் பெரியது.

‘அரண்மனை’ முதல் பாகத்தை உதயநிதி சார்தான் வெளியிட்டார். படம் எப்படிப் போகுமோ என்ற டென்ஷனில் இருந்தபோது, முதல் நாளில் பூங்கொத்து கொடுத்து படம் சூப்பட் ஹிட் என்று சொன்னவர் உதயநிதி சார். இப்போது ‘அரண்மனை 3’ படத்தையும் உதயநிதி சார்தான் வெளியிடுகிறார். இந்தப் படத்தைப் பார்த்துவிட்டு, ரொம்ப நன்றாகவுள்ளது என்று சொன்னார். ரொம்பவே சந்தோஷப்பட்டேன். இவ்வாறு தெரிவித்துள்ளார் சுந்தர்சி.

மாயோன் படத்தில் நான் அழகாக இருப்பேன் – நடிகர் சிபி சத்யராஜ்!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.