700 பயங்கரவாத ஆதரவாளர்கள் வன்முறை செயல்களில் ஈடுபடாமல் தடுப்பு| Dinamalar

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான ஜமாத் இ இஸ்லாமி உடன் தொடர்புடைய 700 பேர் மேற்கொண்டு வன்முறை சம்பவங்களில் செயல்களில் ஈடுபடாமல் தடுக்கப்பட்டுள்ளனர்.

முன்னதாக பயங்கரவாதத் தாக்குதலில் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் இரண்டு ஆசிரியர்கள் உட்பட 7 பேர் துப்பாக்கிச் சூட்டுக்கு பலியாகினர். இதனை அடுத்து பயங்கரவாதத்திற்கு எதிராக அந்த மாகாணத்தில் பலர் பதாகைகள் ஏந்தி பேரணி நடத்தினர். ஜம்மு-காஷ்மீர் மாகாணத்தில் பயங்கரவாதத்தை ஒழிக்க மத்திய அரசு தீவிர நடவடிக்கை மேற்கொள்ள முன்னதாக காங்கிரஸ் எம்பி ராகுல் வலியுறுத்தி இருந்தார்.


latest tamil news

இந்நிலையில் தற்போது இந்திய அரசால் பயங்கரவாத அமைப்பு என்று அறிவிக்கப்பட்ட ஜமாத் இ இஸ்லாமி அமைப்பின் ஆதரவாளர்களை வன்முறையில் ஈடுபடாமல் போலீசார் தடுத்துவுள்ளனர். மேலும் இவர்களிடம் தற்போதைய விசாரணை நடைபெற்றுவருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.