Vijay: அண்ணாவுக்கு என்னாச்சு?: விஜய் முடிவால் ரசிகர்கள் கவலை

ஹைலைட்ஸ்:

தளபதி 67 படத்தை இயக்கும் லோகேஷ் கனகராஜ்?
பீஸ்ட் படத்தில் நடித்து வரும் விஜய்

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் பீஸ்ட் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்
விஜய்
. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் பீஸ்ட் படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். படப்பிடிப்பு நவம்பர் மாதம் முடிந்துவிடுமாம்.

இதையடுத்து தளபதி 66 படத்தை தெலுங்கு இயக்குநர் வம்சி பைடிபல்லி இயக்குகிறார், தில் ராஜு தயாரிக்கிறார். தளபதி 66 தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு அண்மையில் வெளியிடப்பட்டது.

இந்நிலையில்
தளபதி 67
படத்தை
லோகேஷ் கனகராஜ்
தான் இயக்குவார் என்று கோலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகிறது. லோகேஷ் இயக்கத்தில் விஜய் நடித்த மாஸ்டர் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அந்த படத்தை இயக்கியபோதே விஜய்யிடம் ஒரு கதை சொன்னாராம் லோகேஷ். அது விஜய்க்கு பிடித்துப் போகவே நாம் நிச்சயம் மீண்டும் படம் பண்றோம் தம்பி என்றாராம்.

லோகேஷ் இயக்கத்தில் விஜய் மீண்டும் நடிக்கிறார் என்கிற தகவல் அறிந்து தளபதி ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்தாலும் பயத்தில் இருக்கிறார்கள். மாஸ்டர் படத்தில் ஹீரோவை விட வில்லன் விஜய் சேதுபதி ஸ்கோர் செய்துவிட்டார். அந்த தவறு மீண்டும் நடந்துவிடக் கூடாது என்பதே விஜய் ரசிகர்களின் கவலை.

கமலின் இந்தியன் 2 பட நடிகர் திடீர் மரணம்: திரையுலகினர் அதிர்ச்சி

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.