அதிமுகவில் பெரிய பதவியை தட்டி தூக்கிய மாஜி அமைச்சர்!

அதிமுக
அமைப்புச் செயலாளராக கரூரைச் சோந்த முன்னாள் அமைச்சா் ம.சின்னசாமியை கட்சியின் ஒருங்கிணைப்பாளா் ஓ.பன்னீா்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளா்
எடப்பாடி பழனிசாமி
ஆகியோா் நியமித்து நேற்று (அக்டோபர் 11) அறிவிப்பு வெளியிட்டுள்ளனா்.

மறைந்த முன்னாள் முதல்வா் ஜெயலலிதா ஆட்சியில் அவருக்கு அடுத்தபடியாக துணைப்பொதுச் செயலாளராக பதவி வகித்தவா்
எம்.சின்னசாமி
.
கரூர்
மாவட்டச் செயலாளர், 1993-96 வரை தொழில்துறை அமைச்சர், 1999-2004 வரை மக்களவை உறுப்பினர் என பல பதவிகளை வகித்தார்.

இந்நிலையில் 2010ஆம் ஆண்டு திமுகவில் இணைந்த சின்னசாமி, திமுக மாநில விவசாய அணிச் செயலாளராக பதவி வகித்து வந்தாா். 2014 மக்களவைத் தோதலில் திமுக வேட்பாளராக களமிறங்கி, முன்னாள் மக்களவைத் துணைத்தலைவா் மு.தம்பிதுரையிடம் தோல்வியடைந்தாா்.

ஸ்டாலின் போடும் சாதி கணக்கு? அதிமுக விட்ட இடத்தை பிடிக்குமா திமுக?

2021 சட்ட மன்றத் தேர்தலின் போது எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் மீண்டும் அதிமுகவில் இணைந்தாா். தற்போது அதிமுகவின் அமைப்புச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளாா். இவருக்கு, கரூா் மாவட்ட அதிமுக நிா்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனா்.

தடுப்பூசி முகாமினை பார்வையிட்ட அமைச்சர்!

அதிமுகவில் அடுத்த அவைத் தலைவர் யார் என்று கேள்விகள் எழுந்துள்ள நிலையில் அமைப்புச் செயலாளராக கருர் எம்.சின்னசாமி நியமிக்கப்பட்டுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.