இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கி வேலைக்கு விண்ணப்பிப்பது எப்படி? 

இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கியில் காலியாக உள்ள மேலாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள பொறியியல் மற்றும் எம்பிஏ முடித்தவர்களிடம்  இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

விளம்பர எண் : IPPB/HR/CO/REC/2021-22/01

நிர்வாகம் : இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கி

மொத்த காலியிடங்கள் : 23

பணி : Manager
பணி : Senior Manager
பணி : Chief Manager 
பணி : Assistant General Manager
பணி : Deputy General Manager 
பணி : General Manager

வயது வரம்பு: 01.09.2021 தேதியின்படி 23 முதல் 58 வயதிற்குள் இருக்க வேண்டும். அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு வழங்கப்படும். 

தகுதி: பொறியியல் துறையில் சம்மந்தப்பட்ட பிரிவில் பட்டம் பெற்றவர்கள், எம்பிஏ, ஏதாவதொரு துறையில் பட்டம், சிஏ முடித்தவர்கள் மற்றும் குறைந்தபட்சம் 3 முதல் 12 ஆண்டுகள் பணி அனுபவம் உள்ளவர்கள் சம்மந்தபட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள். 

இதற்கும் விண்ணப்பிக்கலாம்எஸ்பிஐ வங்கியில் 2056 காலியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு: விண்ணப்பிப்பது எப்படி?

சம்பளம் : மாதம் ரூ.94,000 – ரூ.2,92,000

தேர்வு செய்யப்படும் முறை : ஆன்லைன் எழுத்துத்தேர்வு, குழு விவாதம் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். 

விண்ணப்பிக்கும் முறை : http://www.ippbonline.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

விண்ணப்பக் கட்டணம்: பொது பிரிவைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள் ரூ.750, எஸ்சி, எஸ்டி மற்றும் பிற்படுத்தப்பட்ட பிரிவைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள் ரூ.150 கட்டணமாக செலுத்த வேண்டும். கட்டணத்தை ஆன்லைன் முறையில் செலுத்தலாம். 

இதற்கும் விண்ணப்பிக்கலாம் | எஸ்பிஐ வங்கியில் வேலை: தேர்வு இல்லை… உடனே விண்ணப்பிக்கவும்!

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 22.10.2021 

மேலும் விபரங்கள் அறிய www.ippbonline.com அல்லது https://www.ippbonline.com/documents/20133/133019/1633693460640.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும். 


Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.