‘இந்த’ வகுப்புகளுக்கு காலாண்டு, அரையாண்டு தேர்வுகள் கிடையாது: அன்பில் மகேஷ்

தமிழகத்தில்,  கொரோனா பரவல்  குறைந்ததை அடுத்து 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் தற்போது நடைபெற்று வருகின்றன. மேலும் வரும் 1ம் தேதி முதல் 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கும் பள்ளிகள் திறக்கப்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளன. 

இது குறித்து கருத்து தெரிவித்த அன்பில் மகேஷ், பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை பள்ளிக்கு அழைத்து வந்து அவர்களுடன் வகுப்பறையில் அமரலாம் என கூறிய கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ், பள்ளிகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகளில்,  மாணவர்கள் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிந்து இருக்க வேண்டும் என கூறப்படும் நிலையில்,  குழந்தைகளால் நீண்ட நேரம் மாஸ்க் அணிய முடியவில்லை என்றால் குழந்தைகளை வீட்டிற்கு அழைத்துச் சென்று விடலாம் என்றார்.

ALSO READ | உள்நாட்டு விமான போக்குவரத்துக்கான கட்டுபாடுகள் நீக்கம்: மத்திய அரசு

நேரடி வகுப்புகளுக்கு வருவது கட்டாயம் அல்ல என தெளிவுபடுத்திய, கல்வி அமைச்சர் மாணவர்களின் நலனுக்காகவே பள்ளிகள் திறக்கப் படுகின்றன என்றும் தெரிவித்திருந்தார்.

ALSO READ |  அடுத்த 3 மாதங்களுக்கு கவனம் தேவை: எச்சரிக்கும் சுகாதாரச் செயலர்

இந்த நிலையில் 10, 11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கான காலாண்டு, அரையாண்டு தேர்வுகள் கிடையாது என அமைச்சர் தமிழக கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார். எனினும் மார்ச், ஏப்ரல் மாதங்களில் பொதுத்தேர்வுகள் நடைபெறும் என்று அவர் தெரிவித்துள்ளார். 

கடந்த 24 மணி நேரத்தில், தமிழ்நாட்டில் 1,303 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதனுடன் தமிழகத்தில் இதுவரை தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 26,79,568 ஆக உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 13 பேர் உயிரிழந்தனர். இதனுடன் சேர்த்து தமிழகத்தில் கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை 35,796 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் தற்போது சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை 35,796 ஆக உள்ளது.

ALSO READ | தமிழகத்தில் திரையரங்குகளில் 100% இருக்கைக்கு அனுமதி விரைவில்?

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.