#ஒத்த_ஓட்டு_பாஜக: ஒத்த ஓட்டு வாங்கிய பாஜக நிர்வாகியை கலாய்த்த பிக் பாஸ் பிரபலம்

ஹைலைட்ஸ்:

உள்ளாட்சி தேர்தலில் ஒரு ஓட்டு வாங்கிய பாஜக நிர்வாகி
ட்விட்டரில் டிரெண்டாகும் #ஒத்த_ஓட்டு_பாஜக

உள்ளாட்சி தேர்தலில் கோவையில் போட்டியிட்ட
பாஜக
நிர்வாகியான
கார்த்திக்
ஒரேயொரு ஓட்டு வாங்கியிருக்கிறார். அவர் குடும்பத்தில் 5 உறுப்பினர்கள் இருந்தும் அவர்கள் அனைவரும் வேறு வார்டை சேர்ந்தவர்களாம்.

எனவே, தன் வீட்டிலேயே 5 ஓட்டு இருந்தும் பெற முடியாமல் போய்விட்டார். கார்த்திக்கிற்கு ஒரேயொரு ஓட்டு கிடைத்த விஷயம் அறிந்த சமூக வலைதளவாசிகள் #ஒத்த_ஓட்டு_பாஜக, #Single_Vote_BJP ஆகிய ஹேஷ்டேகுகளை உருவாக்கி ட்விட்டரில் தேசிய அளவில் டிரெண்டாக்கவிட்டுள்ளனர்.

இந்நிலையில் நடிகையும், பிக் பாஸ் பிரபலமுமான காஜல் பசுபதி ட்விட்டரில் ஒரு மீமை வெளியிட்டு ரொம்ப பெருமையா இருக்கி என்று கலாய்த்துள்ளார்.

மேலும் #ஒத்த_ஓட்டு_பாஜக தொடர்பான ட்வீட்டுகளை ரீட்வீட் செய்து கொண்டிருக்கிறார். அதை பார்த்த ரசிகர்களோ, டான் இன்று ரொம்ப பிசியாகிவிட்டார் என்று தெரிவித்துள்ளனர். காஜலை அவரது ரசிகர்கள் டான் என்று தான் அழைப்பார்கள்.

இதற்கிடையே தேர்தலில் பாஜக வேட்பாளர் தான் தோல்வி அடைந்திருக்கிறாரே தவிர கட்சி அல்ல என்றும் மீம்ஸ் போட்டு மரண கலாய் கலாய்த்துள்ளனர்.

முதல்முறையாக அப்பா, அம்மாவை தனி விமானத்தில் அழைத்துச் சென்ற ‘விஜய்’: வைரல் வீடியோ

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.