டெல்லியில் ரூ.200 கோடி மதிப்பில் புதிய தமிழ்நாடு இல்லம்!

ஹைலைட்ஸ்:

கட்டடத்தில் அமைக்க வேண்டிய பிற வசதிகள் குறித்து மாண்புமிகு முதலமைச்சர் இறுதி செய்வார்
கட்டடத்தை இடிக்கும் பணி புதிய கட்டடத்திற்கான ஆரம்பக் கட்ட பணிகளை துவக்குதல் ஆகியவை குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை

டெல்லியில் உள்ள
தமிழ்நாடு இல்லம்
வைகை என்ற பெயரில் 1962ஆம் ஆண்டு முதல் கட்டடமும், 1965ஆம் ஆண்டு இரண்டு கட்டடங்களும், 1976ஆம் ஆண்டு மேலும் இரண்டு கட்டடங்களும் கட்டப்பட்டது.

டெல்லியைப் பொறுத்தவரை 50 ஆண்டுகள் முடிந்த கட்டடங்களை அகற்றிவிட்டு புதிதாக கட்டடத்தைக் கட்டிக் கொள்ளலாம் என்ற விதி உள்ளதால் 50 ஆண்டுகள் தாண்டிய தமிழ்நாடு இல்லக் கட்டடங்களை இடிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. 2018 இல் இவற்றில் மூன்று கட்டடங்களை எடுத்துவிட்டு 57 கோடி ரூபாய் மதிப்பில் புதிதாக கட்டடங்கள் கட்ட முடிவு செய்யப்பட்டது.

இதனிடையே, கடந்த ஜூன் மாதம் பிரதமரை சந்திக்க
டெல்லி
சென்ற
முதல்வர் ஸ்டாலின்
இக்கட்டடங்களைப் பார்வையிட்டு பாழடைந்த ஐந்து கட்டடங்களையும் இடித்து விட்டு புதிதாக கட்டடங்கள் கட்ட முடிவு செய்தார். அதன் அடிப்படையில் இக்கட்டடங்களை இடித்து விட்டு புதிதாக கட்டடங்கள் நவீன முறையில் பல்வேறு வசதிகளுடன் தங்கும் அறைகள் கட்ட அரசுக்கு துறை அலுவலர்கள் முன் மொழிவு அனுப்பப்பட்டது.

குழந்தைகள் கொரோனா தடுப்பூசி… முதல்வர் ஸ்டாலின் எடுக்கும் முடிவு!

இந்த நிலையில், டெல்லியில் ரூ.200 கோடி மதிப்பில் புதிதாக தமிழ்நாடு இல்லம் விரைவில் கட்டப்படும் என்று பொதுப்பணித்துறை அமைச்சர்
எ.வ.வேலு
தெரிவித்துள்ளார். டெல்லியில் தமிழ்நாடு வைகை இல்லத்தை ஆய்வு செய்த பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, கட்டடத்தை இடிக்கும் பணி புதிய கட்டடத்திற்கான ஆரம்பக் கட்ட பணிகளை துவக்குதல் ஆகியவை குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை செய்தார்.

கடல் சீற்றத்தால் படகு கவிந்து விபத்து – கடலில் குதித்து உயிர் தப்பிய மீனவர்கள்

அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், கட்டடக் கலை வடிவமைப்பு மற்றும் கட்டடத்தில் அமைக்க வேண்டிய பிற வசதிகள் குறித்து மாண்புமிகு முதலமைச்சர் இறுதி செய்வார். விரைவில் புதிய கட்டடம் கட்டும் பணி துவக்கப்படும் என்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.