வெறும் ரூ.32,000-க்கு 14-இன்ச் ஹெச்பி டச்-ஸ்க்ரீன் லேப்டாப் அறிமுகம்: விலை, அம்சங்கள்!

ஹைலைட்ஸ்:

இந்தியாவில் புதிய HP லேப்டாப் அறிமுகம்
இது 14 இன்ச் டச் ஸ்க்ரீன் லேப்டாப் ஆகும்
அமேசான் வழியாக வாங்க கிடைக்கும்

ஹெச்பி க்ரோம்புக் எக்ஸ்360 14ஏ மாடல் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த Chromebook ஹெச்பியின் முதல் AMD-எனேபிள்டு Chromebook ஆகும், மேலும் இது “மாணவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்கிறது” என்று ஹெச்பி நிறுவனம் குறிப்பிடப்படுகிறது.

அக்.20 அறிமுகமாகும் புதிய Redmi Smart TV X 2022 மாடல்கள்; என்ன விலைக்கு வரும்?

இது 14 இன்ச் அளவிலான எச்டி டச் ஸ்க்ரீனை – 250 நிட்ஸ்ளுடன் அதிகபட்ச ப்ரைட்னஸை – கொண்டுள்ளது. மேலும் முன்னரே குறிப்பிட்டபடி,
HP Chromebook x360 14a
ஆனது AMD ஆல் இயக்கப்படுகிறது. இது ஒருங்கிணைந்த AMD ரேடியான் கிராபிக்ஸ் கொண்ட 3015Ce ப்ராசஸர் ஆகும்.

இந்த ப்ராசஸர் 4 ஜிபி ரேம் உடன் இணைக்கப்பட்டுள்ளது மற்றும் 64 ஜிபி இஎம்எம்சி இன்டர்னல் ஸ்டோரேஜை கொண்டுள்ளது. நிறுவனத்தின் கூற்றுப்படி,
HP Chromebook
x360 14a-ஐ ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 12.5 மணிநேர பேட்டரி ஆயுளை வழங்கும்.

இந்தியாவில் HP Chromebook x360 14a விலை, விற்பனை:

புதிய HP Chromebook x360 14a லேப்டாப்பின் விலை ரூ.32,999 ஆகும். இந்த லேட்டஸ்ட் ஹெச்பி Chromebook அமேசான் வழியாக ரூ.31,490 க்கு வாங்க கிடைக்கிறது. இது செராமிக் ஒயிட், ஃபாரஸ்ட் டீல் மற்றும் மினரல் சில்வர் வண்ண விருப்பங்களில் வெளியாகி உள்ளது.

HP Chromebook x360 14a லேப்டாப்பின் அம்சங்கள்:

ஹெச்பியின் இந்த லேட்டஸ்ட் Chromebook 4 முதல் 15 வயதுக்குட்பட்ட மாணவர்களை இலக்காகக் கொண்டது. இது Chrome OS மூலம் இயங்குகிறது மற்றும் இது 14 இன்ச் HD (1,366×768 பிக்சல்கள்) டச் ஸ்க்ரீனை 250 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ் மற்றும் 45 % NTSC கவரேஜ் உடன் பேக் செய்கிறது.

– AMD 3015Ce ப்ராசஸர்

– AMD ரேடியான் ஒருங்கிணைந்த கிராபிக்ஸ் மற்றும் 4GB RAM

– 64 ஜிபி இஎம்எம்சி இன்டர்னல் ஸ்டோரேஜ்

– மைக்ரோ எஸ்டி கார்டு (256 ஜிபி வரை) விரிவாக்கலாம்

– ஒரு வருடத்திற்கு 100 ஜிபி இலவச கிளவுட் ஸ்டோரேஜ்

– வீடியோ அழைப்புகளுக்கு, ஒருங்கிணைந்த டூயல் அரே டிஜிட்டல் மைக்ரோஃபோன்ஸ்

– ஒரு 720p HD வைட்-விஷன் வெப்கேம்

– டூயல் ஸ்பீக்கர்ஸ்

– 47Whr பேட்டரி

– முழுமையாக சார்ஜ் செய்தால் 12.5 மணிநேரம் வரை ஆயுளை வழங்கும்

– 45W USB டைப் C போர்ட்

– Wi-Fi 802.11 a/b/g/n/ac, Bluetooth v5, இரண்டு USB Type-C போர்ட்கள், ஒரு USB Type- A போர்ட் மற்றும் 3.5mm ஹெட்ஜாக்

– அளவீட்டில் 326x220x18mm

– எடையில் 1.49 கிலோகிராம்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.