திமுக.வுக்கு வாக்களித்த மக்கள் அனைவருக்கும் நன்றி – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் Oct 13, 2021

ஊரக உள்ளாட்சித் தேர்தலில் திமுகவுக்கு வாக்களித்த மக்கள் அனைவருக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த ஐந்துமாத திமுக ஆட்சிக்கு கிடைத்த நற்சான்றாகவும், மக்களின் அங்கீகாரமாகவும் ஊரக உள்ளாட்சித் தேர்தலின் வெற்றியை பார்ப்பதாக கூறியுள்ளார்.

கொரோனா காலத்தில் பொருளாதார நெருக்கடி, மருத்துவ நெருக்கடியை சமாளித்து அனைத்து தரப்பினரின் தேவைகளையும் நிறைவேற்றிக் கொடுத்ததாகவும் அவர் கூறியுள்ளார். மேலும், வெற்றிக்கு உழைத்த அனைத்து திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் கூட்டணி கட்சியினருக்கும் நன்றி தெரிவிப்பதாக கூறியுள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.