அடுத்தவர்களை நிர்வாணமாக பார்க்க ரூ.1 லட்சத்தை இழந்த நண்பர்கள்..!

கும்பகோணம் பகுதியைச் சேர்ந்தவர் யுவராஜ். இவரிடம், தேனி மாவட்டம் வீரபாண்டி அருகே உள்ள உப்புக்கோட்டையைச் சேர்ந்த அரசமுத்து மற்றும் திவாகர் ஆகியோர், கண்ணில் அணிந்தால் எதிரில் இருப்பவர்கள் நிர்வாணமாக தெரியும் மாயக்கண்ணாடி இருப்பதாகக் கூறி ஒரு லட்சம் ரூபாய்க்கு விலை பேசி உள்ளனர்.

யுவராஜ் தன் நண்பர்களான சீனிவாசன், மதன், வரதராஜன் ஆகிய நான்கு பேருடன் காரில் ஒரு லட்ச ரூபாய் பணத்துடன் மாயக்கண்ணாடி வாங்கும் ஆர்வத்தில் பெரியகுளம் பகுதிக்கு இன்று அதிகாலை சென்றார். அங்கு மாயக்கண்ணாடி இருப்பதாக கூறிய அரசமுத்து மற்றும் திவாகர் மாயக்கண்ணாடி வாங்க வந்த யுவராஜிடம் ஒரு லட்ச ரூபாயை வாங்கி கொண்டு தப்பி ஓடவே யுவராஜ் மற்றும் நண்பர்கள் 4 பேரும் சேர்ந்து அரசமுத்துவை விரட்டிப் பிடித்தனர்.

ஆனால் பணப்பை திவாகர் வசம் இருந்தது. அவர் தப்பி ஓடிவிட்டார். இதனால் யுவராஜ் மற்றும் அவரது நண்பர்கள் பெரியகுளம் வடகரை காவல் நிலையத்தில் அரசமுத்துவை ஒப்படைத்து புகார் கொடுத்தனர். இதனை அடுத்து பெரியகுளம் காவல்துறையினர், இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து ஒரு லட்சம் ரூபாயுடன் தப்பி ஓடிய திவாகரை தேடி வருகின்றனர்.


Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.