“ஆயுத பூஜை வாழ்த்துகள்”- அனைவர் கையிலும் இருக்கும் உண்மையான ஆயுதம் இதுதான்: இதை வணங்க மறக்காதீங்க!

வளர்ந்து வரும் காலத்தில் தவிர்க்க முடியாத ஆயுதமாக உருவெடுத்து வருவது தொழில்நுட்பம். உலகின் ஆகச்சிறந்த ஆயுதம் என்றால் அது தொழில்நுட்ப சாதனங்களே ஆகும். களம் கண்டு போர் செய்த காலம் மலையேறிவிட்டது. கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளுக்கே மதிப்பு அதிகரித்து வருகிறது. இருந்த இடத்தை இலக்கை நிர்ணயித்து எப்போது எங்கே தாக்க வேண்டும் என முடிவு செய்யும் தொழில்நுட்பங்கள் வந்துவிட்டது.

புகுந்து விளையாடும் தொழில்நுட்பம்

புகுந்து விளையாடும் தொழில்நுட்பம்

தொழில்நுட்பங்கள் என்ற உடன் அது ராணுவ தளவாடங்கள், ஏவுகணைகள், ரோபோட்கள் என்று மட்டும் நினைத்து விட வேண்டாம். உள்ளங்கையில் ஒட்டி உறவாடி கட்டை விரலோடு ஒன்றிக் கொண்டிருக்கும் ஸ்மார்ட்போனும் ஆகச்சிறந்த தொழில்நுட்பமே. அது மலிவு விலை ஸ்மார்ட்போனாகினும் சரி லட்ச ரூபாய்க்கு விற்கப்படும் ஸ்மார்ட்போனாகினும் சரி. அதில் இருக்கும் நன்மைகளும் ஆபத்தும் அலப்பறியது.

தொழில்களின் வளர்ச்சியே தொழில்நுட்பம்தான்

தொழில்களின் வளர்ச்சியே தொழில்நுட்பம்தான்

இந்த காலக்கட்டத்தில் பெரும்பாலானோர் வேலை தொழில்நுட்பங்களை சார்ந்தே இருக்கிறது. ஐடி ஊழியர்கள் மட்டும் கணினியை பயன்படுத்தி தொழில்நுட்பங்களை சார்ந்து பணம் ஈட்டவில்லை. ஒவ்வொரு தொழிலிலும் தொழில்நுட்பங்கள் ஊடுருவி இருக்கிறது. செல்போன்களை பயன்படுத்தி தொடர்பு கொள்ளும் பணியும் தொழில்நுட்ப அணுகலே ஆகும். மேலும் இரும்புத் தொழில் (மெஷின்) தொடங்கி உணவகம் (ஆன்லைன் ஆர்டர்) வரை அனைத்தும் தொழில்நுட்பம் சார்ந்த பயன்பாடாகவே இருக்கிறது. அனைத்து தொழில்களின் வளர்ச்சியும் தொழில்நுட்பத்தை சார்ந்தே இருக்கிறது.

பிரதானமாக பயன்படும் ஸ்மார்ட்போன்கள்

பிரதானமாக பயன்படும் ஸ்மார்ட்போன்கள்

ஸ்மார்ட்போன்களில் தங்களின் தனிப்பட்ட புகைப்படம், வங்கி விவரங்கள் உள்ளிட்ட பல்வேறு முக்கிய விஷயங்கள் புதைத்து வைத்திருக்கிறோம். நம் சாதனத்தை தொடாமலேயே இதை திருடும் மென்பொருள் தொழில்நுட்பங்கள் இருக்கிறது என்பது அனைவரும் அறிந்ததே. ஸ்மார்ட்போன்கள் பல்வேறு வகையில் பிரதானமாக பாதுகாப்பாக இருக்கிறது என்றாலும் அதில் இருக்கும் ஆபத்துகள் தவிர்க்க முடியாத ஒன்று.

ஸ்மார்ட்போன்கள் வெடிப்பு

ஸ்மார்ட்போன்கள் வெடிப்பு

அதுமட்டுமின்றி ஸ்மார்ட்போன்களுக்கு முறையற்று சார்ஜ் செய்வது, பேட்டரி உட்பட்ட பாகங்கள் மாற்றும் போது குறைந்தவிலையில் வாங்கி பொருத்துவது இது அனைத்தும் அந்த சாதனத்தையே வெடித்து சிதற வைக்கும் ஆபத்துகளும் உள்ளது. மறுபுறம் ஒரே நேரத்தில் பல செயலிகள் பயன்படுத்தி செல்போனை சூடாக்குவது போன்ற பல்வேறு காரணங்களும் சாதனத்தை விபத்துக்குள்ளாக்கும்.

செல்போன் திருட்டு என்பது மோசமான விஷயம்

செல்போன் திருட்டு என்பது மோசமான விஷயம்

கண் இமைக்கும் நேரத்தில் செல்போன் திருட்டு சம்பவம் ஆங்காங்கே அரங்கேறிக் கொண்டே வருகிறது. அதுவும் கூட்டம் அதிகமாக கூடும் இடத்தில் செல்போன் திருட்டு தவிர்க்க முடியாத ஒன்றாக தற்போது மாறி வருகிறது. பணம், நகை திருட்டு என்பதை விட செல்போன் திருட்டு என்பது மோசமான விஷயம், செல்போன் தானே திருடப்பட்டுள்ளது என்ற சிறு மனஉளைச்சலோடு வேறு செல்போன் வாங்குவதற்கு நாம் சென்று விடுகிறோம்.

சர்வ சாதாரணமாக கடந்துவிட முடியாத விஷயம்

சர்வ சாதாரணமாக கடந்துவிட முடியாத விஷயம்

செல்போன் திருட்டு என்பது சர்வ சாதாரணமாக கடந்துவிட முடியாது. நமது மொத்த தகவல், புகைப்படம் உட்பட வங்கி கணக்கு வரை செல்போனில் தான் இருக்கிறது. செல்போன் திருட்டு என்பது பணத்திற்காக மட்டும் நடக்கவில்லை. அதை தாண்டி பல்வேறு உள்நோக்கத்துடன் அரங்கேறுகிறது. ஸ்மார்ட்போனை பாதுகாப்பாக வைத்திருப்பது என்பது மிக அவசியம் ஆகும்.

பாதுகாப்பாக கையாளுவது மிக அவசியம்

பாதுகாப்பாக கையாளுவது மிக அவசியம்

ஸ்மார்ட்போன்களில் தங்களின் தனிப்பட்ட புகைப்படம், வங்கி விவரங்கள் உள்ளிட்ட பல்வேறு முக்கிய விஷயங்கள் புதைத்து வைத்திருக்கிறோம். நம் சாதனத்தை தொடாமலேயே இதை திருடும் மென்பொருள் தொழில்நுட்பங்கள் இருக்கிறது என்பது அனைவரும் அறிந்ததே. ஸ்மார்ட்போன்கள் பல்வேறு வகையில் பிரதானமாக பாதுகாப்பாக இருக்கிறது என்றாலும் அதில் இருக்கும் ஆபத்துகள் தவிர்க்க முடியாத ஒன்று. இவைகள் அனைத்தையும் பாதுகாப்பாக கையாளுவது மிக அவசியம் ஆகும்.

English summary
Ayudha Pooja Wishes: Technological development that will greatly help in career Development

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.