இரண்டு தலை, 6 கால் கொண்ட அதிசய ஆமைக்குட்டி!

ஹைலைட்ஸ்:

இரட்டைத் தலை, ஆறு கால் கொண்ட ஆமைக்குட்டி
இந்த ஆமைக்குட்டி நலமாக இருப்பதாக தகவல்

அமெரிக்காவில் மாசசூசட்ஸ் மாகாணத்தில் உள்ள பேர்ட்ஸீ கேப் வனவிலங்கு பூங்காவில் இரண்டு தலை கொண்ட அதிசய ஆமைக்குட்டி நடக்கத் தொடங்கியுள்ளது. இது diamondback terrpin இனத்தைச் சேர்ந்த அரிய ஆமைக்குட்டியாகும். இது ஏற்கெனவே அழிந்து வரும் உயிரினம் என்பது குறிப்பிடத்தக்கது.

இரண்டு வாரங்களுக்கு முன் பிறந்த இந்த ஆமைக்குட்டி தற்போது நலமாக இருப்பதாகவும், நடக்கத் தொடங்கிவிட்டதாகவும் பூங்கா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த ஆமைக்குட்டிக்கு ஆறு கால்கள் உள்ளன. தற்போது இரத்தப் புழுக்களும், உணவு உருண்டைகளும் இந்த ஆமைக்கு உணவாக வழங்கப்படுகிறது.

இந்த ஆமைக்கு இரண்டு தலைகள் இருக்கும் நிலையில் ஒவ்வொரு தலையும் சுதந்திரமாகவே செயல்படுகின்றன. இதுமட்டுமல்லாமல், இந்த ஆமைக்குட்டியின் உடலில் இரண்டு இரைப்பை குடல் அமைப்புகள் உள்ளன.

தண்டவாளத்தில் உறங்கியவர்கள் மீது ஏறிய ரயில் – 3 பேர் பலி!

இந்த
ஆமை
வெஸ்ட் பார்ன்ஸ்டேபிள் பகுதியில் உள்ள கூட்டில் கண்டெடுக்கப்பட்டது. பின்னர் அங்கிருந்து எடுத்துவரப்பட்டு பேர்ட்ஸீ கேப் வனவிலங்கு பூங்காவில் பாதுகாப்பாக வளர்க்கப்படுகிறது. இந்த ஆமையின் ரத்த ஓட்ட அமைப்புகளை அறிந்துகொள்ள சிடி ஸ்கேன் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.