ஒன்பிளஸ் 9RT அறிமுகமானது: என்ன விலை? எப்போது இந்திய அறிமுகம்?

ஹைலைட்ஸ்:

ஒன்பிளஸ் நிறுவனத்தின் புதிய போன்
ஒன்பிளஸ் 9 ஆர்டி மாடல் அறிமுகம்
50 எம்பி ட்ரிபிள் ரியர் கேமராக்களுடன் வருகிறது

ஒன்பிளஸ்
9 சீரீஸின் கீழ் நிறுவனத்தின் லேட்டஸ்ட் மாடலாக ஒன்பிளஸ் 9 ஆர்டி நேற்று (அக்டோபர் 13) சீனாவில் அறிமுகமானது. OnePlus 9R மாடலின் மேம்பட்ட பதிப்பாக வரும் இந்த ஸ்மார்ட்போன் 50 எம்பி மெயின் சென்சாரை கொண்ட ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பு, 120Hz AMOLED டிஸ்ப்ளே மற்றும் ஆக்டா-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 888 SoC போன்றவற்றுடன் வருகிறது.

சினிமாப்ளஸ் OTT சேவை இப்போது முற்றிலும் இலவசம்; BSNL அதிரடி அறிவிப்பு!

ஒன்பிளஸ் 9 ஆர்டி – விலை, விற்பனை:

8GB ரேம் + 128GB – தோராயமாக ரூ.38,600

8GB ரேம் + 256GB – தோராயமாக ரூ.40,900

12GB ரேம் + 256GB – தோராயமாக ரூ. 44,400

ஒன்பிளஸ் 9RT ஆனது அக்டோபர் 19 முதல் சீனாவில் விற்பனைக்கு வரும் மற்றும் முதல் விற்பனை நாளில் தோராயமாக ரூ.1,200 என்கிற தள்ளுபடியுடன் வாங்க கிடைக்கும். தற்போது வரை
OnePlus 9RT
ஸ்மார்ட்போனின் இந்திய அறிமுகம் பற்றிய விவரங்கள் இன்னும் அறிவிக்கப்படவில்லை.

OnePlus 9RT ஸ்மார்ட்போனின் அம்சங்கள்:

– டூயல் சிம் (நானோ)

– ஆண்ட்ராய்டு 11 ஓஎஸ் அடிப்படையிலான ஓப்போவின் கலர்ஓஎஸ்

– 6.62-இன்ச் full எச்டி+ (1,080×2,400 பிக்சல்கள்) சாம்சங் இ 4 அமோலெட் டிஸ்ப்ளே

– 20: 9 ஸ்க்ரீன் ரேஷியோ

– 1300 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ்

– 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்

– 100 சதவீத டிசிஐ-பி 3 கலர் கேமட்

– 1300 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட்

– ஆக்டா-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 888 SoC

– 12GB வரை LPDDR5 ரேம்

– ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பு

– 50 மெகாபிக்சல் சோனி IMX766 முதன்மை சென்சார்

– f/1.8 லென்ஸுடன் பொருத்தப்பட்டுள்ளது

– இது ஆப்டிகல் இமேஜ் ஸ்டேபிலைசேஷன் (OIS) கொண்டது

– உடன் 16 மெகாபிக்சல் இரண்டாம் நிலை சென்சார் (f/2.2 அல்ட்ரா-வைட் லென்ஸ்)

– 2 மெகாபிக்சல் மேக்ரோ ஷூட்டர்

– டூவயல் எல்இடி ஃபிளாஷ்

– 4K வீடியோ பதிவை வழங்கும்

– ஹைபிரிட் ஃபோகஸுடன் இணைக்கப்பட்டுள்ளது

– 16 மெகாபிக்சல் சோனி IMX471 செல்ஃபி கேமரா

– 1-மைக்ரான் பிக்சல் அளவு

– f/2.4 லென்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது

– செல்பீ கேமராவில் EIS ஆதரவு

– 256 ஜிபி வரை யுஎஃப்எஸ் 3.1 ஸ்டோரேஜ்

– 5ஜி, 4G LTE, Wi-Fi 6, Bluetooth v5.2, GPS/ A-GPS, NFC

– USB Type-C போர்ட்

– ஆக்ஸிலரோமீட்டர், ஆம்பியண்ட் லைட் சென்சார், கைரோஸ்கோப், மேக்னடோமீட்டர் மற்றும் ப்ராக்ஸிமிட்டி சென்சார்

– டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கர்ஸ்

– டால்பி அட்மோஸ் ஆதரவு

– 4,500mAh டூயல் செல் பேட்டரி

– 65T வார்ப் சார்ஜ் பாஸ்ட் சார்ஜிங்

– அளவீட்டில் 162.2×74.6×8.29 மிமீ

– எடையில் 198.5 கிராம்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.