ஒரே நாளில் 2.43 லட்சம் பேர் சென்னையை காலி செய்தனர்..!

கல்வி, தொழில் உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக சென்னையில் வசித்து வரும் வெளியூர்வாசிகள், பண்டிகை காலங்களின்போது சொந்த ஊர்களுக்குச் சென்று வருவது வழக்கம். அந்த வகையில், இன்று ஆயுதபூஜையும், நாளை விஜயதசமியும் கொண்டாடப்படுகிறது.

ஆயுதபூஜை பண்டிகையையொட்டி தொடர் விடுமுறை ; கோயம்பேடு பேருந்து நிலையத்தில்  அலைமோதிய மக்கள் கூட்டம்
வரும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாட்கள் என்பதால், 4 நாட்கள் தொடர் விடுமுறை வருகிறது. இதனால், சென்னையில் இருந்து ஏராளமானோர் சொந்த ஊர்களுக்கு நேற்று இரவு புறப்பட்டுச் சென்றனர். இதனால், கோயம்பேடு பேருந்து நிலையத்தில் அதிக அளவில் மக்கள் கூட்டம் அலைமோதியது.

இந்நிலையில், ஆயுதபூஜை விடுமுறையை முன்னிட்டு சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு 2.43 லட்சம் பேர் பயணம் செய்துள்ளதாக போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசு போக்குவரத்துத் துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

ஆயுத பூஜைக்காக சொந்த ஊர்களுக்கு சென்ற பொதுமக்கள்: 600 சிறப்பு பேருந்துகள்  இயக்கம் | special buses for ayudha puja - hindutamil.in
‘ஆயுத பூஜை, விஜயதசமி மற்றும் வார இறுதி நாட்கள் என தொடர்ந்து நான்கு நாட்கள் விடுமுறை என்பதால் சென்னையில் இருந்து ஏராளமானோர் சொந்த ஊர்களுக்கு நேற்று புறப்பட்டுச் சென்றனர். அவர்களின் வசதிக்காக  சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு சிறப்புப் பேருந்துகள் உட்பட 5,422 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இதில், நேற்று ஒரே நாளில் மட்டும் சென்னையில் இருந்து 2,43,900 பேர் வெளியூர்களுக்கு பயணம் செய்துள்ளனர்’ எனக் கூறப்பட்டுள்ளது.


Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.