கடுப்பேத்துறார் மை லார்ட்…அபிஷேக்கை வச்சு செஞ்ச பிக்பாஸ் பிரபலம்

|

சென்னை : கமல் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் சீசன் 5 அக்டோபர் 3 ம் தேதி துவங்கியது. இதில் 18 போட்டியாளர்களை கமல் அறிமுகம் செய்து வைத்தார். மிக பிரம்மாண்டமாக இந்த நிகழ்ச்சியின் துவக்க விழா நடைபெற்றது.

இதில் நடிகர்கள், டிவி தொகுப்பாளர், பாடகர்கள், மாடல் என பல துறைகளைச் சேர்ந்தவர்களும் போட்டியாளர்களாக கலந்து கொண்டுள்ளனர். ஒரு சில முகங்களைத் தவிர பெரும்பாலானவர்கள் தெரியாத முகங்களே இந்த முறை போட்டியாளர்களாக பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றுள்ளனர்.

இந்த நிகழ்ச்சி வெற்றிகரமாக இரண்டாவது வாரத்தில் அடியெடுத்து வைத்துள்ளது. முதல் வாரத்திலேயே நமீதா மாரிமுத்து, மருத்துவ காரணங்களால் வெளியேறி உள்ளார். இதனால் எவிக்ஷன் மூலம் முதல் ஆளாக பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற போவது யார் என்பதை தெரிந்து கொள்ள ரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்கிறார்கள்.

முதல் வாரம் கலகலப்பாக ஜாலியாக சென்ற நிலையில் இரண்டாவது வாரத்தில் சிறு சிறு உரசல்கள், அழுகை, சென்டிமென்ட் என சென்று கொண்டிருக்கிறது. போட்டியாளர்கள் ஒவ்வொருவராக தங்களின் கதைகளை சொல்லி வருகிறார்கள். இதில் பலரின் கதை, அனைவரையும் கண்கலங்க வைத்துள்ளது. இதுவரை நமீதா மாரிமுத்து தவிர வேறு எவரும், அனைவரும் மனதையும் கவர்ந்து அதிகபட்ச ஹார்ட்களை பெறவில்லை.

இந்நிலையில் பிக்பாஸ் சீசன் 4 ல் போட்டியாளராக கலந்து கொண்ட கேப்ரியாலா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த ஆண்டு போட்டியாளர்கள் பற்றி ரெவ்யூ கொடுத்துள்ளார். ரசிகர்களுடன் லைவில் பேசிய கேப்ரியாலா, பிரியங்கா ஜாலியாக, ஃபன்னாக விளையாடுகிறார். ஆனால் அபிஷேக் கொஞ்சம் கடுப்பேற்றுகிறார் என தெரிவித்துள்ளார்.

பிக்பாஸ் சீசன் 4 ல் போட்டியாளராக கலந்து கொண்ட கேப்ரியாலா, கவின் பிக்பாஸ் சீசன் 3 ல் சென்றதை போல், ரூ.5 லட்சத்தை எடுத்துக் கொண்டு போட்டி முடிவதற்கு சில நாட்களுக்கு முன் வெளியேறினார். அதைத் தொடர்ந்து பிக்பாஸ் ஜோடிகள் உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளில் கேப்ரியாலா கலந்து கொண்டார். பிக்பாஸ் ஜோடிகள் டான்ஸ் ஷோவில் ஆஜீத்துடன் இணைந்து பங்கேற்று ரன்னர் அப்பை வென்றார்.

இன்ஸ்டாகிராமிலும் தொடர்ந்து ஃபோட்டோஷுட் ஃபோட்டோக்களை வெளியிட்டும், தனது டான்ஸ் வீடியோக்களை வெளியிட்டும் ரசிகர்களை கவர்ந்து வருகிறார் கேப்ரியாலா. இதனால் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சோஷியல் மீடியாக்களில் இவரை பின் தொடர்வோர் அதிகம்.

பிக்பாஸ் சீசன் 5 விற்கான எவிக்ஷன் இந்த வாரம் நடைபெற உள்ளது. ஏற்கனவே மிகக் குறைவாக ஓட்டு வாங்கி, முதல் ஆளாக அபிஷேக் தான் வெளியேற போவதாக தகவல்கள் பரவி வருகிறது. இந்நிலையில் பிக்பாஸ் மூலம் பிரபலமான கேப்ரியாலா இப்படி ஒரு ரெவ்யூ கொடுத்திருப்பது இது மக்கள் மனதில் தாக்கல் ஏற்படுத்தலாம் என கூறப்படுகிறது.

English summary
Bigg boss season 4 fame gabriollla talking with fans in instagram live. she says that this year bigg boss show contestant priyanka playing with fun and abishek raaj little irritating.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.