கால்ல கூட விழுறேன்.. அசிங்கமாயிடும்: அதிகாரிகளிடம் கதறிய மதுவந்தி!

பாஜகவின் செயற்குழு உறுப்பினரும், ஒய்.ஜி.மகேந்திரனின் மகளுமான
மதுவந்தி
சென்னை ஆழ்வார்பேட்டை வீனஸ் காலனி 2 வது குறுக்கு தெருவில் உள்ள ஆசியானா அப்பார்ட்மெண்டிலுள்ள சொந்த வீட்டில் கடந்த சில ஆண்டுகளாக வசித்து வருகிறார். இவர் வீடு கட்டுவதற்காக வாங்கிய கடனை திருப்பி செலுத்தாததால் இவரது வீட்டிற்கு அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர்.

மதுவந்தி வீடு வாங்குவதற்காக கடந்த 2016 ம் ஆண்டு இந்துஜா லைலண்ட் ஃபைனான்ஸ் நிறுவனத்தில் ஒரு கோடி ருபாய் கடன் வாங்கியுள்ளார். அதன்பின்னர் சில மாதங்கள் தவணை கட்டியவர் தொடர்ந்து தவணை பணம் கட்டாமல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. அதனை தொடர்ந்து ஃபைனான்ஸ் நிறுவன அதிகாரிகள் பல மாதங்களாக வட்டிப்பணம் கட்ட சொல்லியும் மதுவந்தி பணம் கட்டமால் இழுத்தடித்து வந்ததாக கூறப்படுகிறது.

இதனையடுத்து வங்கி அதிகாரிகள் வட்டிப்பணத்துடன் அசலையும் சேர்த்து ரூ1,21,30,867 பணம் கட்ட சொல்லி நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். ஆனாலும் ஃபைனான்ஸ் நிறுவனத்திடம் உரிய பதில் சொல்லாமல் மதுவந்தி இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் இந்துஜா லைலண்ட் பைனான்ஸ் நிறுவனம் மெட்ரோ பாலிட்டன் அல்லிகுளம் நீதிமன்றத்தில் இது தொடர்பாக வழக்கு தொடர்ந்துள்ளனர்.

நயன்தாராவுக்கு வெங்கட் பிரபு செய்ய போகும் உதவி: எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் மதுவந்தியின் வீட்டிற்கு சீல் வைத்து வீட்டை இந்துஜா லைலண்ட் ஃபைனான்ஸ் நிறுவனத்திடம் ஒப்படைக்க உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து வழக்கறிஞர் கமிஷனர் வினோத் குமார் முன்னிலையில் மதுவந்தியின் வீடு போலீசார் பாதுகாப்போடு சீல் வைக்கப்பட்டு வீட்டுச் சாவி இந்துஜா லைலண்ட் ஃபைனான்ஸ் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தன்னுடைய வீட்டுக்கு சீல் வைக்க வந்த அதிகாரிகளிடம், இப்படி செய்தால் தனக்கு மிகவும் அசிங்கமாக ஆகிவிடும். நாளை ஒரு நாள் மட்டும் அவகாசம் கொடுங்கள் என மதுவந்தி கெஞ்சியுள்ளார். அவர்களின் கால்களில் கூட விழுகிறேன் என்று கூறியும், அதிகாரிகள் தங்களால் இப்போது எதுவும் செய்ய இயலாது என கூறி வீட்டுக்கு சீல் வைத்துள்ளனர். இந்த வீடியோ காட்சிகள் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

பிளீஸ் சார்.. ரொம்ப அசிங்கமா போய்டும் சார்.. Y.G.மதுவந்தி கதறல்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.