சைக்கிளில் ரோந்து சென்ற போது விபத்தில் சிக்கிய தலைமை காவலரை வீட்டிற்கே நேரில் சென்று ஆறுதல் கூறிய காவல் ஆணையாளர்..! Oct 14, …

சென்னையில் சைக்கிளில் ரோந்து சென்றபோது விபத்தில் சிக்கி காயமடைந்த தலைமைக் காவலரின் வீட்டிற்கு நேரில் சென்று ஆறுதல் கூறிய பெருநகர காவல் ஆணையாளர், அவருக்கு ஒரு புதிய சைக்கிளை பரிசளித்தார்.

சைக்கிளிலேயே ரோந்து செல்லும் வழக்கம் கொண்ட தலைமைக் காவலர் செந்தில்குமார், நேற்று அண்ணாசாலையிலிருந்து காவல் நிலையம் நோக்கி சென்று கொண்டிருந்தபோது பின்னால் வேகமாக வந்த இருசக்கர வாகனம், அவரது சைக்கிள் மீது மோதியது.

இதில் செந்தில்குமாரின் இடது தோள்பட்டை அருகே எலும்பு முறிவு ஏற்பட்டது. இந்நிலையில், அவருக்கு ஆறுதல் கூறிய காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால் , விபத்தின்போது சேதமடைந்த சைக்கிளுக்கு பதிலாக புதிய சைக்கிளை பரிசாக வழங்கினார்.

 

 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.