தபால் அலுவலகத்தில் துப்பாக்கிச்சூடு: 3 பேர் பலி| Dinamalar

மெம்பிஸ் : அமெரிக்காவில், தபால் அலுவலகத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில், தாக்குதல் நடத்தியவர் உட்பட, மூன்று ஊழியர்கள் உயிரிழந்தனர்.

அமெரிக்காவில், சமீப காலமாக, துப்பாக்கிச்சூடு சம்பவங்கள், தொடர்ந்து நடந்து வருகின்றன. இதையடுத்து, துப்பாக்கி கலாசாரத்திற்கு முடிவுகட்ட நடவடிக்கை எடுக்கக்கோரி, பலரும் குரல் கொடுத்து வருகின்றனர்.இந்நிலையில், டென்னசி மாகாணத்தில் மீண்டும் ஒரு துப்பாக்கிச்சூடு சம்பவம் அரங்கேறி உள்ளது. இங்கு, மெம்பிஸ் நகரில் உள்ள தபால் அலுவலகத்தில், ஊழியர் ஒருவர், தன் சக ஊழியர்களை குறிவைத்து நேற்று முன்தினம் துப்பாக்கிச்சூடு நடத்தினார்.இதில், இரண்டு ஊழியர்கள், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், தாக்குதல் நடத்திய நபரும், தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்துகொண்டார்.இதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து, தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், உயிரிழந்தோரின் உடல்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின், அந்த தபால் அலுவலகம் அமைந்துள்ள சாலை முழுதும் முடக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்த விசாரணையை போலீசார் துவங்கி உள்ளனர்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.