தெற்கு தைவானில் பயங்கர தீ விபத்து: 46 பேர் பலி, பலர் காயமடைந்தனர்

தைபே: தைவானின் தெற்கு நகரமான காவ்ஸியூங்கில் ஒரு குடியிருப்பு கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 46 பேர் கொல்லப்பட்டனர், 41 பேர் காயமடைந்தனர். 

காஹ்சியூங்கின் யாஞ்செங் மாவட்டத்தில் உள்ள 40 ஆண்டுகள் பழமையான கட்டிடத்தில் நள்ளிரவு கடந்து அதிகாலையில் தீ விபத்து ஏற்பட்டது. விடிந்து சில மணி நேரத்திற்குப் பிறகு தீ (Fire Accident) கட்டுக்குள் கொண்டு வரப்பட்டு அணைக்கப்பட்டது.

காவோஷியங் தீயணைப்புத் துறை ஒரு அறிக்கையில், கட்டிடத்தில் மெற்கொள்ளப்பட்ட தெடுதல் நடவடிக்கையில், 46 பேர் இறந்ததை உறுதிப்படுத்த முடிந்ததாகக் கூறியுள்ளது. 

இப்பகுதியின் மேயர் சென் சி-மாய் இந்த கட்டிடத்தின் பெரும் பகுதிகளில் பலர் வசிக்கவில்லை என்று கூறினார். அதனால் பெரிய அளவிலான உயிர்சேதம் தவிர்க்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். 

ALSO READ: பெங்களூரு அபார்ட்மெண்டில் கேஸ் வெடித்து தாயும் மகளும் பலி

இந்த கட்டிடத்தில் முன்னர் உணவகங்கள், கரோக்கி ஓய்வறைகள் மற்றும் ஒரு திரையரங்கம் ஆகியவை இருந்ததாக வட்டாரங்கள் தெரிவித்தன. 

பலரது உயிர்களை பலிவாங்கிய இந்த தீ விபத்துக்கான காரணம் குறித்து குழு அமைத்து தைவான் (Taiwan) அரசு ஆராய்ந்து வருவதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

ALSO READ: Watch: துபாய் துறைமுகத்தில் குண்டுவெடிப்பு: தீவிரவாத தாக்குதலா? போலீஸ் தீவிர விசாரணை

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.