நாம் தமிழர் கட்சி ஆயுதம் ஏந்தும் : மிரட்டும் தமிழ் தேசியவாதிகள்

நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில் நாம் தமிழர் கட்சி பெரும் பின்னடைவை சந்தித்து உள்ளது. தேர்தலில் இதே நிலை தொடர்ந்தால் ஆயுதம் ஏந்துவோம் என தமிழ் தேசியவாதிகள் மிரட்டல் விடுத்து வருகின்றனர். இலங்கையை சேர்ந்த தமிழ் தேசியவாதி பாலன் தனது டிவிட்டர் பக்கத்தில் இவ்வாறு பதிவிட்டுள்ளார்.  இது தற்போது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளாக தேர்தல் அரசியலில் நாம் தமிழர் கட்சி களம் இறங்கி வருகிறது.  அனைத்து தேர்தல்களிலும் முதல் ஆளாக வேட்பாளர்களை அறிவித்து வருகிறது நாம் தமிழர்.  மேலும் 50% பெண்களுக்கும், 50% ஆண்களுக்கும் என்று பிரித்து தேர்தலை சந்தித்து வருகின்றனர்.  பிரச்சார மேடைகளில் உணர்ச்சி பொங்க சீமான் மற்றும் நாம் தமிழர் கட்சியினர் பேசியும் இன்று வரை எந்த தேர்தல்களிலும் அவர்களால் வெற்றி பெற முடியவில்லை.  ஆனாலும் அதைபற்றி கண்டுகொள்ளாமல் அடுத்த தேர்தலை நோக்கி நகர்ந்து கொண்டு சென்று வருகிறார் சீமான்.  திமுக-வை எதிர்த்தே தொடர்ந்து அரசியல் செய்து வருகிறது நாதக.  மேடைகளில் பல முறை முறையற்று பேசி நாம் தமிழர் கட்சியினர் கைதும் ஆகியுள்ளனர்.  சமீபத்தில் கூட இவ்வாறு பேசி அக்கட்சியைச் சேர்ந்த சாட்டை துரைமுருகன் கைது செய்யப்பட்டார். 

ALSO READ எதிர்த்து போட்டியிட்டவர்களை டெபாசிட் இழக்க செய்த பாட்டி!

நடந்து முடித்த ஊரக உள்ளாட்சித் தேர்தலிலும் சரிவை சந்தித்து உள்ளது நாம் தமிழர் கட்சி.  பல இடங்களில் டெபாசிட் இழந்தாலும், ஓரிரு இடங்களில் சிறிய வெற்றியை பெற்றுள்ளது.  இருப்பினும் பல வருடங்களாக தேர்தலை சந்தித்து வரும் கட்சியாக பார்க்கும்போது இது மிகப்பெரிய பின்னடைவு. இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்,  ஒரே நாளில் செடி பூத்துவிடாது, படிப்படியாக தான் வளரும் என்று கூறினார். மேலும் தேர்தலில் பல இடங்களில் நாம் தமிழர் கட்சி வெற்றிபெற்றுள்ளது, படுதோல்வி அடையவில்லை.  வளரும் கட்சி படிப்படியாகத்தான் வளரும், இன்று இல்லை என்றால் நாளை வெல்வோம் என்று அவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் சீமானின் தீவிர ஆதரவாளரும் லண்டனில் வசித்து வருபவருமான பாலன், “தேர்தல் பாதையில் செல்லும் நாம் தமிழர் கட்சி தோற்கடிக்கப்பட்டால் ஈழத்தில் நடந்ததுபோல் தமிழ்த்தேசியம் அடுத்த கட்டமான ஆயுதப் போராட்டத்திற்கு நகருமேயொழிய ஒருபோதும் இனி அழிந்துவிடாது. எனவே நாம்தமிழர் கட்சி தோல்விக்காக வருத்தப்பட வேண்டியவர்கள் ஆரியமும் திராவிடமுமே”  என்று தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.  இது தற்போது சர்சையை ஏற்படுத்தி உள்ளது.  சில நாட்களுக்கு முன் காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் கேஸ் அழகிரி, ”பிற்காலத்தில் நாம் தமிழர் கட்சி தீவிரவாத இயக்கமாக மாறும்” என்று கூறியிருந்தார். அதனை உறுதிப்படுத்தும் வகையில் பாலனின் பதிவு அமைந்துள்ளது.

 

ALSO READ விஜய் மக்கள் இயக்கம் சார்பில் போட்டியிட்டவர்கள் வெற்றி

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.