நார்வேயில் 5 பேர் பலி| Dinamalar

கோங்ஸ்பெர்க்: நார்வேயின் தென்கிழக்கு பகுதியில், மர்ம நபர் ஒருவர் வில் அம்பு மூலம் தாக்குதல் நடத்தினார். இதில் 5 பேர் உயிரிழந்த நிலையில், 2 பேர் காயமடைந்துள்ளனர்.

கோங்ஸ்பெர்க் நகரில் பல இடங்களில் நடந்த இந்த தாக்குதலுக்கான காரணம் குறித்து தெரியவில்லை. பயங்கரவாதம் காரணமாக இருக்கலாம் என்பதை மறுக்க முடியாது என போலீசார் தெரிவித்துள்ளார்.

தாக்குதலில் ஈடுபட்டதாக, கோங்ஸ்பெர்க் நகரில் வசிக்கும் 37 வயதான டென்மார்க்கை சேர்ந்தவரை கைது செய்துள்ளனர்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.