நாளை முதல் தியேட்டர்களுக்கு 100 சதவீதம் அனுமதி: ரசிகர்கள் உற்சாகம்!

கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டு வரும் நடவடிக்கையாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் தியேட்டர்கள் மூடப்பட்டன. அதன் விளைவாக புதிய படங்களை ரிலீஸ் செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்தச் சிக்கலுக்கு தீர்வுகாணும் நோக்கில் சில படங்கள் ஓடிடி தொழில்நுட்பத்தில் ஆன்-லைனில் ரிலீஸ் செய்யப்பட்டன.

இதையடுத்து, அளிக்கப்பட்ட தளர்வுகளின் அடிப்படையில், தியேட்டர்கள் திறக்கப்பட்டன முதலில் 50 சதவீத இருக்கைகளுக்கு அனுமதியளிக்கப்பட்ட நிலையில், பின்னர் 100 சதவீத பார்வையாளர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. இதனிடையே, கொரோனா இரண்டாவது அலை பரவல் காரணமாக நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் தியேட்டர்கள் மீண்டும் மூடப்பட்டன.

தற்போது கொரோனா பரவல் குறைந்து வருவதால் அதற்கேற்ப படிப்படியாக பல்வேறு மாநிலங்கள் தளர்வுகளை அளித்து வருகின்றன. அந்த வகையில், நாளை முதல் தியேட்டர்களில் 100 சதவீத இருக்கைகளுக்கு அனுமதி அளித்து ஆந்திர மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. அண்டை மாநிலமான தெலங்கானாவில் கடந்த ஜூன் மாதம் முதல் 100 சதவீத பார்வையாளர்களுடன் தியேட்டர்கள் இயங்கி வரும் நிலையில், ஆந்திராவில் ஜூலை 8ஆம் தேதி முதல் 50 சதவீத பார்வையாளர்களுடன் மட்டுமே தியேட்டர்கள் இயங்க அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

ஆனால், தியேட்டர்களை 100 சதவீத பார்வையாளர்களுடன் இயக்க அனுமதி வழங்க வேண்டும் என்று திரையரங்க உரிமையாளர்கள், தயாரிப்பாளர்கள் உள்ளிட்டோர் தொடர்ந்து ஆந்திர அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த நிலையில், நாளை முதல் தியேட்டர்களில் 100 சதவீத இருக்கைகளுக்கு அனுமதி அளித்து ஆந்திர மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை தியேட்டர்களை 100 சதவீத பார்வையாளர்களுடன் இயக்கிக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

விஜயதசமி
பண்டிகையையொட்டி, புதுப் படங்கள் ரிலீசாக உள்ள நிலையில், மாநில அரசின் இந்த அறிவிப்பு ரசிகர்களையும், டோலிவுட் திரையுலகையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கையான, முகக்கவசம், கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்வது, சரீர விலகல் உள்ளிட்டவற்றை தியேட்டர்களில் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்றும் ஆந்திர அரசு உத்தரவிட்டுள்ளது.

மேலும், தியேட்டர்களின் படம் பார்த்து திரும்பும்
ரசிகர்கள்
பிரச்சினைக்கு ஆளாகாத வண்ணம், இரவு நேர ஊரடங்கின் நேரத்தை நள்ளிரவு 12 மணி முதல் அதிகாலை 5 மணி வரை என்று மாற்றியும் ஆந்திர மாநில அரசு உத்தரவிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.