நிதியியல் முறைமை உறுதிப்பாட்டு ஆலோசனைக் குழுவினை மீளமைத்தல்

நிதியியல் முறைமை உறுதிப்பாட்டு ஆலோசனைக் குழுவானது 2021 ஒத்தோபர் 6ஆம் திகதி தொடக்கம் நடைமுறைக்கு வரும் விதத்தில் நிதியியல் துறையில் புகழ்பெற்ற ஆளணியினரைக் கொண்டு மீளமைக்கப்பட்டுள்ளது.

நிதியியல் முறைமை உறுதிப்பாட்டு ஆலோசனைக் குழுவின் தலைவராக வரையறுக்கப்பட்ட லங்கா கிளியர் (பிறைவேட்) லிமிடெட்டின் தலைவர் முனைவர் கென்னத் டி சில்வா நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், இலங்கை நிதி நிறுவனங்கள் அமைப்பின் தலைவர் திரு. நிரோஷன் உதகே, கொடுகடன் தகவல் பணியகத்தின் பணிப்பாளர் / பொது முகாமையாளர் திரு. சி என் எஸ் என் அந்தோனி, வரையறுக்கப்பட்ட இலங்கை வங்கிகள் அமைப்பின் (உத்தரவாத) தலைவர் திரு. எல் எச் ஏ லக்ஷ்மன் சில்வா, பிரைஸ்வோட்டர்ஹவுஸ்கூப்பர்ஸின் முகாமைத்துவப் பங்காளர் திரு. சுஜீவ முதலிகே, இலங்கை பட்டயக் கணக்காளர் நிறுவனத்தின் துணைத் தலைவர் திரு. சஞ்ஜய பண்டார, இலங்கை வர்த்தக சம்மேளனத்தின் தலைவர் திரு. விஷகோவிந்தசாமி, சனாதிபதி சட்டத்தரணி திரு. குஷான் டி அல்விஸ், கொழும்பு துறைமுக நகரப் பொருளாதார ஆணைக்குழுவின் பதில் பணிப்பாளர் நாயகம் திரு. சாலிய விக்ரமசூரிய, எல்ஓஎல்சி ஹோல்டிங்ஸ் பிஎல்சி இன் குழும முகாமைத்துவப் பணிப்பாளர் திரு. கபில ஜயவர்த்தன மற்றும் ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் பிஎல்சி இன் தலைவர் திரு. கிரிஷான் பாலேந்திரன் ஆகியோர் மீளமைக்கப்பட்ட நிதியியல் முறைமை உறுதிப்பாட்டு ஆலோசனைக்குழுவின் உறுப்பினர்களாவர். நிதியியல் முறைமை உறுதிப்பாடு மற்றும் நிதியியல் துறை அபிவிருத்தி மீதான கொள்கைகளை வகுப்பதில் மத்திய வங்கிக்கு உதவும் பொருட்டு கருத்துக்களையும் ஆலோசனைகiயும் வழங்குவதற்கு வழிவகுக்கின்ற கலந்துரையாடல்களை வசதிபடுத்தும் நோக்கத்திற்காக தாபிக்கப்பட்ட நிதியியல் முறைமை உறுதிப்பாட்டு ஆலோசனைக்குழுவானது இலங்கை மத்திய வங்கியில் தொழிற்படுகின்ற உயர் மட்ட குழுவொன்றாகும். இலங்கை மத்திய வங்கியின் பேரண்ட முன்மதியுடைய கண்காணிப்பு திணைக்களம் நிதியியல் முறைமை உறுதிப்பாட்டு ஆலோசனைக்குழுவின் செயலகமாக தொழிற்படுகின்றது.

முழுவடிவம்
https://www.cbsl.gov.lk/sites/default/files/cbslweb_documents/press/pr/press_20211014_reconstitution_of_the_financial_system_stability_consultative_committee_t.pdf

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.