பதவிக்காலம் முடிவதற்கு முன்பாகவே மீண்டும் தமிழக அரசுப் பணிக்கு திரும்பும் அமுதா ஐஏஎஸ்

பிரதமர் அலுவலகத்தில் இணைச் செயலாளராக பணியாற்றி வரும் அமுதா ஐஏஎஸ் மீண்டும் தமிழக அரசுப் பணிக்கு திரும்புகிறார்.
1994ஆம் ஆண்டு ஐஏஎஸ் அதிகாரியான பி.அமுதா கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில் பிரதமர் அலுவலக இணைச் செயலாளராக நியமிக்கப்பட்டார். இந்நிலையில் பதவிக்காலம் முடிவதற்கு முன்பாகவே மீண்டும் தமிழக அரசுப் பணிக்கு திரும்ப மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரியாக பணியாற்றிய காலத்தில் தடைகளை தகர்த்து சாதித்தவர் என பெயர் பெற்றவர் அமுதா.
Women's Day Special: Exclusive interview with P Amutha, IAS - DTNext.in
சந்தனக் கடத்தல் வீரப்பன் சுதந்திரமாக உலவிய காலகட்டத்தில் கோபிச்செட்டிபாளையத்தில் சார் ஆட்சியராக இருந்த அமுதா அடர்ந்த காடுகளுக்குள் சென்று உள்ளூர் மக்களை சந்தித்ததன் மூலம் கவனம் ஈர்த்தவர். மதுரையை சேர்ந்த அமுதா ஐஏஎஸ் சென்னையில் பெருவெள்ளம் ஏற்பட்டபோது நீர்நிலைகளில் ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுத்து பலரது பாராட்டையும் பெற்றார். முன்னாள் முதல்வர்கள் ஜெயலலிதா மற்றும் கருணாநிதி மறைந்தபோது இறுதிச் சடங்கை கையாளும் பொறுப்பு அமுதாவிடம் வழங்கப்பட்டிருந்தது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.