பிக்பாஸ் ஹவுஸ்மேட்டுகளிடம் பொய் சொன்னாரா தாமரை செல்வி… எதற்காக அப்படி சொன்னார்?

|

சென்னை: பிக்பாஸ் ஹவுஸ்மேட்டுகளிடம் தாமரை செல்வி பொய் சொன்னாரா என சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் விவாதித்து வருகின்றன.

பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி கடந்த 3ஆம் தேதி முதல் விஜய் டிவியில் தொடங்கி ஒளிபரப்பாகி வருகிறது.

இதில் முதல் வாரத்தில் பிக்பாஸ் வீட்டில் கேப்டன் யாரும் இல்லாமல் டீம் கேப்டன்களுடன் டீம்கள் பிரிக்கப்பட்டிருந்தது.

பிக்பாஸ் வீட்டி முதல் கேப்டன்

இந்நிலையில் இந்த வாரத்திற்கான கேப்டனை தேர்வு செய்வதற்கான டாஸ்க் கடந்த திங்கள் கிழமை நடைபெற்றது. இந்த கேப்டன் டாஸ்க்கில் தாமரை செல்வி வெற்றி பெற்றார். இதன் மூலம் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் பிக்பாஸ் வீட்டின் முதல் கேப்டன் ஆனார் தாமரை செல்வி.

கன்ஃபெஷன் ரூமுக்குள் அழைத்த பிக்பாஸ்

கன்ஃபெஷன் ரூமுக்குள் அழைத்த பிக்பாஸ்

அவரது தலைமையில் பிக்பாஸ் வீட்டில் குக்கிங் டீம், ஹவுஸ் கீப்பிங் டீம், வெஸல் வாஷிங் டீம், பாத்ரூம் க்ளீனிங் டீம் என பிரிக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றனர். இந்நிலையில் நேற்றைய எபிசோடில் தாமரையை கன்ஃபெஷன் ரூம்முக்குள் அழைத்தார் பிக்பாஸ்.

எல்லோரும் காத்துகிட்டு இருக்காங்க

எல்லோரும் காத்துகிட்டு இருக்காங்க

கன்ஃபெஷன் ரூமுக்குள் சென்ற தாமரையிடம், இந்த வீட்டின் தலைவர் யார் என்று கேட்டார் பிக்பாஸ். அதற்கு நான்தான் ஐயா என்றார் தாமரை. பின்னர் பேசிய பிக்பாஸ், உங்கள் நிர்வாகத்தை காண எல்லோரும் ஆர்வமா காத்துக்கிட்டு இருக்காங்க. கொடுக்கப்பட்டுள்ள விதிமுறைகளை தாண்டி வேறு விதிமுறைகள் வேண்டும் என்றால் கேளுங்கள் என்றார்.

மைக்கை யாரும் சரியாக மாட்டுவதில்லை

மைக்கை யாரும் சரியாக மாட்டுவதில்லை

மேலும் யாரும் விதிமுறைகளை சரியாக பின்பற்றுவதில்லை என்று கூறிய பிக்பாஸ் மைக்கை யாரும் சரியாக மாட்டுவதில்லை என்றார். மேலும் ஹவுஸ்மேட்ஸ் எழுந்து பல மணி நேரம் கழித்துதான் தயாராகிறார்கள் என்றும் கூறினார். இதையெல்லாம் சரி செய்ய வேண்டும் என்றும் பிக்பாஸ் வீட்டின் கேப்டனான தாமரை செல்வியிடம் கூறினார்.

இன்னொரு விஷயம் இருக்கு

இன்னொரு விஷயம் இருக்கு

கன்ஃபெஷன் ரூமில் இருந்து வெளியே வந்த தாமரை செல்வி, எல்லாரும் மைக்கை சரியாக மாட்டணும். சீக்கிரம் எழுந்து குளித்துவிட்டு ரெடியாக வேண்டும் என்று பிக்பாஸ் கூறியதாக கூறினார். மேலும் இன்னொரு விஷயம் இருக்கு, அதை இன்னொரு நாள் பேசிக் கொள்ளலாம் என்றார்.

ரசிகர்கள் குழப்பம்

ரசிகர்கள் குழப்பம்

அதனைக் கேட்ட ஹவுஸ்மேட்ஸ் என்ன விஷயம் என்று கேட்டனர். அதற்கு இன்னொரு நாள் பேசலாம் என்று பிக்பாஸ் சொன்னார். ஆகையால் இன்னொரு நாள் பேசிக்கொள்ளலாம் என்றார். பிக்பாஸ் அப்படி எதுவும் சொன்னதாக தெரியவில்லை. ஆனால் தாமரை அப்படி கூறியது ரசிகர்களை குழப்பமடைய செய்துள்ளது.

பொய் சொன்னாரா தாமரை?

பொய் சொன்னாரா தாமரை?

இதனை பார்த்த நெட்டிசன்கள் ஏன் தாமரை செல்வி ஹவுஸ்மேட்டுகளிடம் பொய் சொல்கிறார் என கேட்டு வருகின்றனர். மேலும் தாமரை செல்வி இப்படி சொல்ல காரணம் என்ன என்றும் கேட்டு வருகின்றனர். பிக்பாஸ் என்ன சொன்னார் என்று இன்னொரு நாள் சொல்வார் என்றும் கேட்டு வருகின்றனர்.

English summary
Biggboss Tamil 5: Did Thamarai Selvi lied to house mates? Thamarai selvi told house mates Biggboss told something in confession room but asked to do not talk about it today.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.