பூமி தாங்குமா… ஆபத்தில் 85 சதவீத மக்கள்| Dinamalar

பருவநிலை மாற்றத்தால் உலக மக்கள்தொகையில் 85 சதவீத மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக ஜெர்மனி விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பருவநிலை மாறுபாடு, வெப்பநிலை உயர்வு போன்றவை உலக விஞ்ஞானிகளுக்கு மிகப்பெரிய சவாலாக உருவெடுத்துள்ளது. இதை கட்டுப்படுத்துவதற்கு ‘பாரிஸ் ஒப்பந்தம்’ போன்ற சர்வதேச நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.இந்நிலையில் வெப்பநிலை உயர்வால் ஏற்படும் உயிரிழப்புகள் (ஹீட் டெத்) முதல் காடுகளின் பரப்பளவில் ஏற்பட்ட மாற்றம் வரையிலான பல்வேறு ஆய்வுகளை செயற்கை நுண்ணறிவு மூலம் விஞ்ஞானிகள் ஆய்வு செய்தனர்.

இதில் உலக வரைபடங்களை இரு பிரிவாக பிரித்து வெப்பநிலை, குளிர்ச்சி, வெள்ளம் என பருவநிலை மாற்றத்தின் பல பகுதிகளை பொருத்தி ஆய்வு செய்தனர். இதில் 1951 முதல் 2018 வரை உலகில் எடுக்கப்பட்ட ஒரு லட்சத்துக்கு மேற்பட்ட ஆய்வு தரவுகளை, பகுப்பாய்வு செய்ததில் உலக மக்கள்தொகையில் 85 சதவீத மக்கள், பருவநிலை மாற்றத்தால் ஏற்கனவே பாதிப்பில் உள்ளது கண்டறியப்பட்டது.

இதில் குறைந்த வருமானம் உடைய நாடுகளை விட, அதிக வருமானம் உடைய நாடுகளில் இதன் பாதிப்பு அதிகமாக உள்ளது.
வாழ்வியல் மாற்றம்

உணவு, எரிசக்தி தயாரிப்பு, குப்பை, கழிவுகளை கையாளும் விதம், பருவநிலை மாற்றத்தை
கட்டுப்படுத்துவதற்கானநடவடிக்கை போன்ற நமது வாழ்வியலில்மாற்றத்தை ஏற்படுத்தினால், பல்லுயிரினங்கள் அழிவை சந்திப்பதை தடுக்கலாம்.

3

உலகின் மீன்வளத்தில் மூன்றில் ஒரு பங்கு அளவுக்கு மீன் பிடிக்கப்படுகிறது.

10

மனித வரலாற்றில் எப்போதும் இல்லாத அளவுக்கு தற்போது இயற்கை, கடினமான சூழலை
சந்திக்கிறது. தாவரங்கள்,விலங்குகள் உட்பட 10 லட்சம்உயிரினங்கள் அழியும் நிலையில்
உள்ளன என பல்லுயிர் தொடர்பான ஐ.நா., அறிக்கை தெரிவிக்கிறது. உயிரினங்களின் அழியும் நிலை என்பது முன்பை விட 100 மடங்கு அதிகமான வேகத்தில் செல்கிறது.

70

ஆக்கிரமிப்பு இனங்கள் உள்நாட்டுதாவரம், விலங்கினங்களைவெளியேற்றுகிறது. இது
ஒவ்வொருநாட்டிலும் 1970ல் இருந்து 70 சதவீதம்அதிகரித்துள்ளது. ஒரு வகை பாக்டீரியா,

400 வகையான நீர், நில வள உயிரினங்களை அச்சுறுத்துகிறது.

85

நகரமயமாக்குதலுக்காக காடுகள்,புல்வெளி, விவசாய நிலங்கள்குடியிருப்பு பகுதிகளாக மாற்றப்படுகின்றன. இதனால் தாவரங்கள், விலங்குகளுக்குவாழ்விடம் இல்லாமல் போகிறது. 85 சதவீத ஈர நிலங்கள் உயிரினங்கள் வாழ்வதற்கு கடினமான சூழ்நிலையை உருவாக்குகிறது.

300

ஆண்டுதோறும் 300 முதல் 400 டன் அளவிலான கன உலோகம்,கரைப்பான், நச்சு ரசாயனங்கள் நீர், நிலப்பகுதிகளில் கொட்டப்படுகிறது. இதனால் நீர், நிலவளம் பாதிக்கப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.