போன சீசன் பாலா.. இந்த சீசன் நிரூப்பா.. எல்லாமே யாஷிகா ஆனந்த் சிபாரிசு தான் போல.. ரசிகர்கள் கலாய்!

By Mari S

|

சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 2ல் போட்டியாளராக கலந்து கொண்ட யாஷிகா ஆனந்த்தின் நண்பர் பாலாஜி முருகதாஸ் போன சீசனில் கலந்து கொண்ட நிலையில், இந்த சீசனில் அவருடைய முன்னாள் காதலர் பங்கேற்றுள்ளது ரசிகர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு ஆட்களை பிடித்து தரும் சிபாரிசு வேலையை யாஷிகா ஆனந்த் செய்து வருகிறாரா? என்கிற கேள்வியையும் நெட்டிசன்கள் எழுப்பி உள்ளனர்.

மேலும், இந்த சீசனில் பாலாஜி முருகதாஸை போலவே நிரூப் ரன்னர் அப்பாக ஆகி விடுவார் என்றும் ட்ரோல் செய்து வருகின்றனர்.

எக்ஸ் ஆர்மி மாதிரி

நான் ஒரு எக்ஸ் ஆர்மி மேன் மாதிரி நான் யாஷிகாவின் எக்ஸ் பாய் ஃபிரண்ட் என பிக் பாஸ் தமிழ் சீசன் 5ன் போட்டியாளர் நிரூப் இன்றைய முதல் புரமோவில் சொன்னதை ஏகப்பட்ட பிக் பாஸ் ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர். நெட்டிசன்களிடையே நிரூப் நல்லா வசமா மாட்டிக்கிட்டாரு என்றும் கமெண்ட்டுகள் குவிகின்றன.

பாறாங்கல்லுக்குள் ஈரம்

பாறாங்கல்லுக்குள் ஈரம்

பாறாங்கல்லுக்குள் இப்படி ஒரு சோக ஈரமா? என நிரூப்பின் கதையை பிக் பாஸ் புரமோவில் கேட்ட நெட்டிசன்கள் கிண்டல் செய்து வருகின்றனர். பார்க்க பாகுபலி பட வில்லன் மாதிரி இருக்காரு என்றும் பாறாங்கல் என்றும் நிரூப்பை ட்ரோல் செய்து வருகின்றனர்.

காசு கொடுத்து வந்துருக்காரு

காசு கொடுத்து வந்துருக்காரு

“இவன் கை காசு போட்டுத்தான் ஷோக்குள்ள வந்துருக்கான் 2வது சீசன்ல ஐஸ்வர்யா தத்தா எப்டி PR Team வச்சி 2nd Place வந்தாங்களோ அப்டி தான் இவரும் வருவார் என்று தோணுது” என இந்த நெட்டிசன் நிரூப் சொன்ன யாஷிகா கதையை கேட்ட பிறகு கமெண்ட் செய்துள்ளார்.

பெரிய மனதைரியம் வேணும்

பெரிய மனதைரியம் வேணும்

ஒரு பொண்ணால பையன் வளர முடியாதா? என நிரூப் யாஷிகா ஆனந்த் தான் தனது இந்த வெற்றிக்கு எல்லாம் காரணம் என கூறியதை கேட்ட பிக் பாஸ் ரசிகர்கள் இவ்வளவு வெளிப்படையா பேச ஒரு பெரிய மனதைரியம் வேண்டும் நிரூப் என அவருக்கு ஆதரவு தெரிவித்து ஹார்ட்டீன்களை பறக்கவிட்டு வருகின்றனர்.

ஹானஸ்டி பிடிச்சிருக்கு

ஹானஸ்டி பிடிச்சிருக்கு

“நிரூப் ஹேட்ஸ் ஆஃப் யூ டா.. உன்னோட ஹானஸ்ட்டி ரொம்ப பிடிச்சிருக்கு.. இவ்வளவு ஓப்பனா சொன்ன பாரு அங்க நிக்கிறடா நீ” என பெண் ரசிகை ஒருவர் போட்ட கமெண்ட்டும் நிரூப் ரசிகர்களின் லைக்குகளை அள்ளி உள்ளது.

லிப் கீஸ் ஏன்?

லிப் கீஸ் ஏன்?

நடிகையும் முன்னாள் பிக் பாஸ் போட்டியாளருமான யாஷிகா ஆனந்த் மற்றும் நிரூப் இருவரும் லிப் கிஸ் அடித்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதனை பார்த்த சில நெட்டிசன்கள், ” அதெல்லாம் சரி..ஏன் சரக்கடிச்சிட்டு இரண்டு பேரும் lips kiss குடுத்தீங்க?” என கேள்வி எழுப்பி உள்ளார்.

பிபி2வுக்கு முன்னாடியா?

பிபி2வுக்கு முன்னாடியா?

யாஷிகா ஆனந்த் எக்ஸ் பாய் ஃபிரண்ட்னு நிரூப் பகிரங்கமாக சொல்லி உள்ள நிலையில், பிக் பாஸ் சீசன் 2வுக்கு முன்னாடியா? இல்லை அதற்கு பிறகா? என்கிற கேள்வியையும் நெட்டிசன்கள் எழுப்பி நிரூப்பை கலாய்த்து வருகின்றனர்.

யாஷிகா நிலைமை

யாஷிகா நிலைமை

போன சீசனில் யாஷிகா ஆனந்தின் நண்பர் பாலாஜி முருகதாஸ் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இந்த சீசனில் யாஷிகாவின் முன்னாள் காதலர் நிரூப் பங்கேற்றுள்ளார். மேலும், சர்வைவர் தமிழ் நிகழ்ச்சியில் யாஷிகாவின் நண்பரான உமாபதி பங்கேற்றுள்ள நிலையில், விஜய் டிவிக்கும் ஜீ தமிழ் டிவிக்கும் ரீமோட்டை மாற்றி மாற்றி யாஷிகா பார்ப்பார் என கிண்டல் அடித்து மீம் போட்டுள்ளனர்.

அண்டர்டேக்கர் மண்டையா

அண்டர்டேக்கர் மண்டையா

“எவிக்‌ஷனில் இருந்து பெண் ரசிகர்கள் உன்னை சேவ் பண்ண என்னம்மா ஆக்டிங் போடுற நிரூப்.. நீயாருன்னு எனக்கு தெரியும் ஈவில் அண்டர்டேக்கர் மண்டையா” என நிரூப்பின் ஹேட்டர் இப்படியொரு கமெண்ட்டை போட்டுள்ளார்.

போன சீசனில் பாலா

போன சீசனில் பாலா

பிக் பாஸ் சீசன் 2வில் யாஷிகா ஆனந்த் போட்டியாளராக பங்கேற்ற நிலையில், பிக் பாஸ் சீசன் 4ல் அவரது நண்பர் பாலாஜி முருகதாஸ் கலந்து கொண்டு ரன்னர் அப் ஆனார். அதே போல இந்த சீசனில் யாஷிகாவின் எக்ஸ் பாய் ஃபிரண்ட் நிரூப் பங்கேற்றுள்ள நிலையில், இவரும் ரன்னர் அப் ஆவார் என கமெண்ட்டுகள் குவிந்து வருகின்றன.

English summary
Netizens trolls Bigg Boss Tamil season 5 contesant Niroop and compares him with Balaji Murugadoss of this season

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.