மகளை பாலியல் பலாத்காரம் செய்து, அரசியல் பிரமுகர்களுக்கு விருந்தாக்கிய கொடூர தந்தை

லக்னோ
உத்தரபிரதேசம்  லலித்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர்  11ம் வகுப்பு  படிக்கும்  17 வயது மாணவி   ஒருவர் போலீசில் புகார் ஒன்று அளித்துள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-
என் தந்தை லாரி டிரைவராக பணியாற்றி வருகிறார்.நான் 6ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போது, ‘டிவி’யில் ஆபாச படங்களை போட்டுக் காட்டி என்னிடம் தவறாக நடக்க முயன்றார்.

அதற்கு நான் எதிர்ப்பு தெரிவித்ததும் என்னை வெளியே அழைத்து சென்று புது ஆடைகள் வாங்கி கொடுத்து, ஆள் நடமாட்டம் இல்லாத இடத்திற்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்தார்.இது பற்றி வெளியே சொன்னால், என் தாயை கொன்றுவிடுவேன் என்று மிரட்டினார்.
இந்த சம்பவத்துக்கு பின், என்னை அடிக்கடி வெளியே அழைத்து செல்வார். ஓட்டலில் அறை எடுத்து தங்க வைப்பார். உணவில் மயக்க மருந்து கலந்து கொடுப்பார். அதை சாப்பிட்டதும் அரை மயக்கத்தில் இருப்பேன்.அப்போது யார் யாரோ வந்து என்னை பலாத்காரம் செய்வர்; வயிற்று வலியில் துடிப்பேன் .பல ஆண்டுகளாக இந்த கொடுமையை அனுபவித்து வருகிறேன் என கூறி உள்ளார்.
மாணவி புகாரில்  சமாஜ்வாதி கட்சியை சேர்ந்த மாவட்ட தலைவர் திலக் யாதவ் அவரது 3 தம்பிகள் , அக்கட்சியின் நகர தலைவர் ராஜேஷ் ஜெயின் ஜோஜியா, பகுஜன் சமாஜ் மாவட்ட தலைவர் தீபக் ஆகிர்வர்  மற்றொரு தலைவர் நீரஜ் திவாரி உட்பட 28 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.
 புகாரின் அடிப்படையில், 354 (தாக்குதல்), 376 டி (கற்பழிப்பு), 323 (தானாக முன்வந்து காயப்படுத்துதல்), 328, 506 (குற்றவியல் மிரட்டல்), 120 பி மற்றும் பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் ‘போக்சோ’  சட்டம் ஆகிய பிரிவுகளின் கீழ் போலீசார் தந்தை உள்பட 28 பேர் மீது வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.