மன்மோகன் சிங் விரைவில் குணமடைய பிரதமர் மோடி வாழ்த்து| Dinamalar

புதுடில்லி: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாக பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

காங்., மூத்த தலைவரும், முன்னாள் பிரதமருமான, மன்மோகன் சிங், (வயது 88) உடல்நலக்குறைவால், நேற்று (அக்.,14) டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மூன்று நாட்களாக காய்ச்சல் மற்றும் மூச்சு திணறலால் அவதிப்பட்டு வந்த அவருக்கு திடீரென உடல் சோர்வு ஏற்பட்டதை அடுத்து, டில்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். மன்மோகன்சிங் கடந்த 2009ல், இருதய அறுவை சிகிச்சை செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் மன்மோகன் சிங் குணமடைய பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். அது தொடர்பாக அவரது டுவிட்டர் பதிவில், ‛டாக்டர் மன்மோகன் சிங் நல்ல உடல் நலத்துடன் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்,’ எனப் பதிவிட்டுள்ளார்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.