மீண்டும் தள்ளிப்போகும் ‘தள்ளிபோகாதே’ ரிலீஸ்….!

தெலுங்கில் வெளியாகி ஹிட்டான நின்னு கோரி படத்தின் தமிழ் ரீமேக் தள்ளிப் போகாதே படத்தை இயக்குனர் ஆர்.கண்ணன் இயக்கியுள்ளார். அதர்வா நாயகனாக நடிக்கிறார் .அதர்வாவிற்கு ஜோடியாக அனுபமா பரமேஸ்வரன் நடித்துள்ளார். முக்கிய ரோலில் அமிதாஷ் பிரதான் நடித்துள்ளார். ஆடுகளம் நரேன், ஜெகன், காலி வெங்கட் ஆகியோரும் நடித்துள்ளனர்.

அஜர்பைஜான் நாட்டில் ஜிசி என்ற சிகரத்தின் மீது 70 அடி உயரத்திற்கு மலையேற்றம் செய்து இந்த படத்தின் சில காட்சிகளை படமாக்கினார்களாம்.

மசாலா பிக்ஸ் மற்றும் எம்.கே.ஆர்.பி புரொடக்‌ஷன்ஸ் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு ஷண்முக சுந்தரம் காட்சிகள் அமைத்துள்ளார். கபிலன் வைரமுத்து வசனம் எழுதியுள்ளார். கோபி சுந்தர் இசையமைக்கும் இந்த படத்திற்கு எடிட்டர் ஆர்கே செல்வா எடிட்டிங் செய்கிறார்.

பலமுறை வெளியீட்டுத் தேதி முடிவு செய்யப்பட்டு தள்ளி வைக்கப்பட்டுக் கொண்டே இருந்தது.

ஒரு வழியாக அனைத்து பிரச்சனைகளையும் தற்போது நிறைவுசெய்துள்ள படக்குழு, ஆயுதபூஜை தினமான அக்டோபர் 14ஆம் தேதி ‘தள்ளிப்போகாதே’ திரைப்படம் வெளியாகும் என சமீபத்தில் அறிவித்திருந்தது.

இந்த நிலையில், தற்போது மீண்டும் ரிலீஸில் சிக்கல் எழுந்துள்ளது. ஏற்கனவே வெளியான டாக்டர் திரைப்படத்திற்கு கிடைத்துள்ள நல்ல வரவேற்பு மற்றும் அரண்மனை 3 படத்திற்கு கிடைத்த திரையரங்குகள் எண்ணிக்கை ஆகியவற்றை கவனத்தில் எடுத்த படக்குழு, படத்தின் ரிலீஸில் இருந்து பின்வாங்கியுள்ளது. இதனால் ‘தள்ளிப்போகாதே’ படத்தின் ரிலீஸை எதிர்பார்த்திருந்த ரசிகர்களுக்கு இந்த முறையும் ஏமாற்றமே மிஞ்சியுள்ளது.

 

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.