’முதல்வன்’ படம்போல் அரசியல் கதைக்களத்தில் உருவாகும் ஷங்கரின் ‘ராம் சரண் 15’ படம்?

இயக்குநர் ஷங்கர் – ராம் சரண் இணையும் ’ராம் சரண் 15’ படம் அரசியல் பின்னணி கதைக்களத்தைக் கொண்டது என்று தகவல் வெளியாகியுள்ளது.

இயக்குநர் ஷங்கர் ‘ராம் சரண் 15’ படத்தை இயக்கவிருக்கிறார். இந்தப் படத்தை பிரபல தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்கிறார். ஜானி மாஸ்டர் கொரியோகிராஃபி செய்கிறார். தமன் இசையமைக்கிறார். ராம் சரண் இரட்டை கதாப்பாத்திரங்களில் நடிக்கும் இப்படத்திற்கு நாயகியாக கியாரா அத்வானி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். கடந்த செப்டம்பர் 8 ஆம் தேதி நடந்த இப்படத்தின் பூஜையில் பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங், இயக்குநர் ராஜமெளலி, சு.வெங்கடேசன் எம்.பி உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்துகொண்டனர். 170 கோடியில் இப்படம் உருவாகும், இப்படத்தின் முதற்கட்டப் படப்பிடிப்பு வரும் அக்டோபர் 21 ஆம் தேதி புனேவில் தொடங்கவிருக்கிறது.

image

இந்த நிலையில், கடந்த 1999 ஆம் ஆண்டு ஷங்கர் இயக்கத்தில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த ’முதல்வன்’ படம்போல் ‘ராம் சரண் 15’ படமும் பவர்ஃபுல்லான அரசியல் கதைக்களத்தைக் கொண்டது என்றும் ஆழமான அரசியல் கருத்துக்களை சமூகத்திற்குச் சொல்வதோடு ராம் சரண் இரட்டைக் கதாபாத்திரங்களில் நடிக்கிறார் என்றும் தகவல் வெளியாகி இருக்கிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.