மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் முதன்முறையாக 61,000 வரம்பைத் தாண்டியது Oct 14, 2021

மும்பை பங்குச்சந்தையில் வணிகம் ஏற்றமடைந்ததால் சென்செக்ஸ் நானூறு புள்ளிகளுக்கு மேல் உயர்ந்து முதன்முறையாக 61 ஆயிரம் என்னும் வரம்பைத் தாண்டியது.

இன்றைய வணிகநேரத் தொடக்கத்தில் மும்பை பங்குச்சந்தைப் பங்குவிலைக் குறியீடு சென்செக்ஸ் 388 புள்ளிகள் உயர்ந்து 61 ஆயிரத்து 125 ஆக இருந்தது. நண்பகல் 12 மணியளவில் சென்செக்ஸ் 464 புள்ளிகள் உயர்ந்து 61 ஆயிரத்து 201 ஆக இருந்தது.

தேசியப் பங்குச்சந்தைப் பங்குவிலைக் குறியீடு நிப்டி 158 புள்ளிகள் உயர்ந்து 18 ஆயிரத்து 320 ஆக இருந்தது. அரசுத் துறையைச் சேர்ந்த ஐஆர்சிடிசி நிறுவனப் பங்குகள் விலை 8 விழுக்காடு உயர்ந்தது.

 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.