விவாகரத்தில் முடிந்த திருமணம்! பிக்பாஸ் இசைவாணியின் மற்றொரு சோகக்கதை

பிக்பாஸ் நிகழ்ச்சியில் சக போட்டியாளரான பாவனி தனது திருமண வாழ்வு குறித்து வருத்தத்துடன் பேச, அப்போது இசைவாணி தனது முதல் திருமணம் விவாகரத்தில் முடிந்த கதையை சொல்லி ஆறுதலாக பேசியுள்ளார்.

பிக்பாஸ் நிகழ்ச்சி ஆரம்பித்த முதல் வார எலிமினேஷன் நாமினேஷனில் இசைவாணியின் பெயர் வந்துள்ளது. அந்த அளவிற்கு சக போட்டியாளர்கள் விரும்பாத ஒரு நபராக இசைவாணி மாறியுள்ளார். ஆனால், அதேசமயம் ரசிகர்கள் மத்தியில் இசைவாணிக்கு நல்ல மரியாதையும் ஆதரவும் கிடைத்து வருகிறது.

இந்நிலையில் 'கதை சொல்லட்டுமா' டாஸ்க்கில் இசைவாணி சொல்லாத அவரின் மற்றொரு சோகக்கதையை இப்போது சொல்லியுள்ளார். சக போட்டியாளர்களில் ஒருவரான பாவனி தனது திருமணம் வாழ்க்கை குறித்து கண்ணீர் சிந்த பேசினார். அப்போது இசைவாணி 'நான் ஒரு கானா பாடகரை காதலித்து திருமணம் செய்து கொண்டேன். இருவரும் ஒரே வீட்டில் வசித்து வந்தோம். சில ஆண்டுகளில் நாங்கள் பிரிந்து விட்டோம். நான் இப்போது பெற்றோருடன் வசித்து வருகிறேன்' என இசைவாணி தனது முதல் திருமணம் விவாகரத்தில் முடிந்த கதையை கூறினார்.

இந்த சோகக்கதையை கேட்ட அவரது ரசிகர்கள் இசைவாணியின் வாழ்வில் இவ்வளவு கஷ்டமா? என மிகவும் வருத்தமடைந்து வருகின்றனர். தற்போது நாமினேஷனில் இருக்கும் இசைவாணி போட்டியாளர்களின் ஆதரவை பெறாவிட்டாலும், ரசிகர்களின் மனதை வென்று போட்டியில் தொடர்வாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.