10, 12ஆம் வகுப்பு மாணவர்கள் ரெடியா? சிபிஎஸ்இ முக்கிய அறிவிப்பு!

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பள்ளிகள் மூடப்பட்டிருந்தன. இதனால்
ஆன்லைன்
வாயிலாக பாடங்கள் நடத்தப்பட்டு வந்தது. கடந்த ஆண்டு இறுதியில் பொதுத்தேர்வு நடத்துவதற்கு சரியான சூழல் இல்லாததால் 10 மற்றும் 12ஆம் வகுப்பிற்கான
தேர்வுகள்
ரத்து செய்யப்பட்டன. நடப்பாண்டு கொரோனா தொற்று பெரிதும் குறைந்துள்ளது. இதனால் படிப்படியாக பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில்
சிபிஎஸ்இ
10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வரும் நவம்பர், டிசம்பர் மாதங்களில்
முதல் பருவத்தேர்வு
ஆஃப்லைனில்,

பருவத்தேர்வும், டேட்டா ஷீட்டும்

அதாவது வகுப்பறைகளில் நேரடியாக நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான
டேட்டா ஷீட்
வரும் 18ஆம் தேதி வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக கடந்த ஜூலை மாதம் சிபிஎஸ்இ வெளியிட்ட அறிவிப்பில், இம்முறை இரண்டு பருவத்தேர்வுகள் நடத்தப்படும். முதல் பருவத்தேர்விற்கான
பாடத்திட்டம்
மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. அதன்படி கேள்விகள் கேட்கப்படும் என்பதால் மாணவர்கள் தயாராகிக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

சிபிஎஸ்இ முக்கிய அறிவிப்பு

இந்த சூழலில் சிபிஎஸ்இ வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பில், அனைத்து தேர்வுகளும் கொள்குறி வினாக்களாக (Objective Type) கேட்கப்படும். மொத்தம் 90 நிமிடங்களில் MCQ-OMR வினாத்தாள்கள் மூலம் தேர்வுகள் நடைபெறவுள்ளன. பருவமழைக் காலத்தை கருத்தில் கொண்டு காலை 10.30 மணிக்கு பதிலாக 11.30 மணிக்கு தேர்வுகள் தொடங்கும். இரண்டாம் பருவத்தேர்வு எழுத்துத் தேர்வாக நடத்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

மதிப்பெண் விவரங்கள் எப்போது?

இதுதொடர்பாக பேசிய சிபிஎஸ்இ தேர்வு கட்டுப்பாட்டாளர் சன்யம் பரத்வாஜ், முதல் பருவத்தேர்வு நடந்து முடிந்த உடன் மாணவர்கள் எடுத்த மதிப்பெண்கள் பட்டியல் வெளியிடப்படும். எந்தவொரு மாணவரும் தேர்ச்சி என்றோ, மீண்டும் எழுத வேண்டும் என்றோ அறிவுறுத்தப்பட மாட்டாது. இரண்டாம் பருவத்தேர்வு நடந்து முடிந்த பின்னர் இறுதி முடிவுகள் வெளியிடப்படும் என்று கூறினார். இந்த தேர்வுகளை மதிப்பிடும் முறைகள் குறித்து விரிவான திட்டமிடுதலை சிபிஎஸ்இ முன்கூட்டியே தயாரித்து வைத்துள்ளது.

அதன்படி, முதல் பருவத்தேர்வில் கொள்குறி வினாக்களாகவும், இரண்டாம் பருவத்தேர்வில் கட்டுரைகள் மற்றும் செய்முறை அம்சங்களும் இடம்பெற்றிருக்கும். இவை அனைத்திலும் மாணவர்களின் செயல்பாடுகளை ஆராய்ந்து அதன் அடிப்படையில் இறுதியாக மதிப்பெண்கள் தெரிவிக்கப்படும். இந்த இரண்டு பருவத்தேர்வுகள் மட்டுமின்றி அக மதிப்பீட்டு தேர்வுகள், அசெஸ்மெண்ட்ஸ், செயல்திட்டம் ஆகியவற்றையும் 10 மற்றும் 12ஆம் வகுப்பு சிபிஎஸ்இ மாணவர்கள் வெற்றிகரமாக செய்து முடிக்க வேண்டும்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.