#BREAKING:- அரசு அதிரடி அறிவிப்பு.. அனைத்து நாட்களும் ஆலயம் செல்லலாம்..!

தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாடு நடவடிக்கையாக பொதுமக்கள் கூட்டம் கூடுவதை தவிர்க்கும் பொருட்டு வெள்ளி, சனி,ஞாயிற்றுக் கிழமைகளில் அனைத்து வழிபாட்டுத் தலங்களும் மூடப்பட்டிருக்கும் என அரசு அறிவித்தது. இதற்கு, பாஜகவினர் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால், மத்திய அரசின் அறிவுறுத்தல்படியே கோயில்கள் வார இறுதி நாட்களில் மூடப்படுவதாக தமிழக அரசு தெரிவித்தது.

அத்துடன், “சனி, ஞாயிறு விடுமுறை தினங்கள் என்பதால் கோயில்களில் கூட்டம் அதிகமாக கூடும். எனவே, வாரத்தின் கடைசி மூன்று நாட்கள் கோயில்களில் வழிபட தடை விதிக்கப்பட்டுள்ளது. மற்ற நாட்களில் தாராளமாக மக்கள் கோயில்களுக்குச் செல்லலாம்” என்று, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு தெரிவித்திருந்தார். மேலும், கொரோனா தொற்று நம்மை விட்டு நீங்கியவுடன், நிச்சயமாக கோயில்களை திறக்க முதல்வர் அனுமதி அளிப்பார் என்றும் அவர் உறுதி அளித்திருந்தார்.

இதனிடையே, வரும் 15ம் தேதி வெள்ளிக்கிழமை விஜயதசமி நாளன்று கோயில்களைத் திறக்க உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றும் தொடரப்பட்டது. அத்துடன், முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நேற்று நடைபெற்ற ஊரடங்கு தளர்வு தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில் கோயில்கள் திறப்பு பற்றி முக்கிய ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

இந்நிலையில், தமிழகத்தில் வெள்ளி, சனி, ஞாயிறு உள்பட அனைத்து நாட்களிலும் வழிபாட்டுத் தலங்களை திறக்க தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. வெள்ளிக்கிழமை விஜயதசமி பண்டிகை வரவுள்ள நிலையில், கோயில்கள் திறப்புக்கு தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது பொதுமக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.


Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.