நெல்லை அருகே ஆண் யானை மர்மமான முறையில் உயிரிழப்பு

நெல்லை: பணகுடி மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் 14 வயதான ஆண் யானை மர்மமான முறையில் உயிரிழந்தது. ஆண் யானை மர்மமான முறையில் உயிரிழந்தது குறித்து வனத்துறை அதிகாரிகள் விசாரணை

காங்கிரஸ் ஆட்சி அமைத்தால் மாணவர்களுக்கு ஸ்மார்ட் போன், ஸ்கூட்டி வழங்கப்படும்: பிரியங்கா காந்தி அறிவிப்பு

லக்னோ: உத்தரபிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைத்தால் பிளஸ் டூ முடித்த மாணவர்களுக்கு ஸ்மார்ட் போன்களும், பட்டதாரி பெண்களுக்கு பேட்டரியில் இயங்கும் ஸ்கூட்டியும் வழங்கப்படும் என்று கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி அறிவித்துள்ளார். அடுத்தாண்டு தொடக்கத்தில் உத்தர பிரதேச பேரவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், காங்கிரஸ் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி தீவிரமாக தேர்தல் பணிகளை மேற்கொண்டு வருகிறார். உத்தரபிரதேசத்தை சேர்ந்த சில மாணவிகள் சிலர் செய்தியாளர் ஒருவரிடம் தங்கள் கோரிக்கைகளை வைக்கும் … Read more காங்கிரஸ் ஆட்சி அமைத்தால் மாணவர்களுக்கு ஸ்மார்ட் போன், ஸ்கூட்டி வழங்கப்படும்: பிரியங்கா காந்தி அறிவிப்பு

கோவை: சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் ஓட்டுநருக்கு 20 ஆண்டுகள் சிறை

கோவையில் 16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய ஓட்டுநருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து போக்சோ நீதிமன்றம் உத்தரவிட்டது. பெரியநாயக்கன்பாளையம், நாயக்கனூர் பகுதியைச் சேர்ந்த ஓட்டுநரான ஆனந்தகுமார், கடந்த 2017 ஆம் ஆண்டு 16 வயது சிறுமிக்கு திருமண ஆசை காட்டி பாலியல் வன்கொடுமை செய்தார். சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் தொடுக்கப்பட்ட இவ்வழக்கு, கோவை போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி குலசேகரன் ஆனந்தகுமாருக்கு 20 ஆண்டுகள் சிறை … Read more கோவை: சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் ஓட்டுநருக்கு 20 ஆண்டுகள் சிறை

சபரிமலை தொடர்பாக உத்தரவு பிறப்பிக்கும் அதிகாரம்: கேரளா அரசுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி

சபரிமலை யாத்திரைக்கு விர்ச்சுவல் க்யூ என்ற முன்பதிவு திட்டத்தை அமல்படுத்தும் அதிகாரம் கேரள அரசுக்கும், காவல்துறைக்கும் இருக்கிறதா என கேரள உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.   சபரிமலையில் பக்தர்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் விர்ச்சுவல் க்யூ என்ற முன்பதிவு திட்டத்தை கேரள அரசும், காவல் துறையும் இணைந்து செயல்படுத்தி வருகிறது. இந்நிலையில், சபரிமலை தொடர்பாக எந்தவொரு விதியையும், உத்தரவையும் பிறப்பிக்கும் அதிகாரம் திருவிதாங்கூர் தேவஸ்வம் வாரியத்திற்கு மட்டுமே இருக்கிறது என்றும், … Read more சபரிமலை தொடர்பாக உத்தரவு பிறப்பிக்கும் அதிகாரம்: கேரளா அரசுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி

பேய்மழை.. திணறும் உத்தரகாண்ட்.. பனிச்சிகரத்தில் 5 சுற்றுலா பயணிகள் உயிரிழப்பு.. ஒருவர் மாயம்

பேய்மழை.. திணறும் உத்தரகாண்ட்.. பனிச்சிகரத்தில் 5 சுற்றுலா பயணிகள் உயிரிழப்பு.. ஒருவர் மாயம் India oi-Hemavandhana By Hemavandhana Published: Friday, October 22, 2021, 8:43 [IST] காட்மண்டு: வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவு காரணமாக போக்குவரத்து துண்டிக்கப்பட்டதால் உத்தரகாண்ட்டில் சுற்றுலா பயணிகள் வெளியேற முடியாமல் சிக்கித் தவித்து வருகின்றனர்.. இதில், சுந்தர்துங்கா பனிச்சிகரத்தில் சுற்றுலா பயணிகளில் 5 பேர் உயிரிழந்ததாகவும், ஒருவரை காணவில்லை என்றும் செய்திகள் வெளியாகி உள்ளன. உத்தரகாண்ட்டில் இந்த வார துவக்கத்தில் இருந்தே கனமழை … Read more பேய்மழை.. திணறும் உத்தரகாண்ட்.. பனிச்சிகரத்தில் 5 சுற்றுலா பயணிகள் உயிரிழப்பு.. ஒருவர் மாயம்

முன்னேறும் நித்தி அகர்வால்

தெலுங்கில் பிசியான நடிகையாக உள்ள நித்தி அகர்வால் தமிழிலும் பூமி, ஈஸ்வரன் படங்களில் நடித்தார். முன்னனி நடிகையாகும் ஆர்வத்தில் உள்ள இவர் போட்டோ ஷூட்டிலும் கவனம் செலுத்தி வருகிறார். சமீபத்தில் இவரது கவர்ச்சி போட்டோ ஷூட் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனிடையே இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இவரை பின்தொடர்வோர் எண்ணிக்கை 1.3 கோடி பேரை நெருங்கி உள்ளது.

இந்திய எல்லையில் ஆக்கிரமிப்பு சீனா மீது அமெரிக்கா கடும் தாக்கு| Dinamalar

வாஷிங்டன்:’இந்தியா உட்பட பல நாடுகளின் எல்லையை ஆக்கிரமிக்க சீனா முயற்சிப்பதை அனுமதிக்க முடியாது’ என அமெரிக்கா தெரிவித்துள்ளது. சீனாவிற்கான அமெரிக்க துாதராக முன்னாள் சார்பு செயலர் நிகோலஸ் பர்ன்ஸ் நியமிக்கப் பட்டு உள்ளார்.இப்பொறுப்பை ஏற்க அமெரிக்க பார்லி.யின் செனட் வெளியுறவு குழு முன் நிகோலஸ் பர்ன்ஸ்ஆஜரானார். அப்போது அவர் பேசியதாவது:இந்தியாவின் இமயமலை எல்லையை சீனா ஆக்கிரமிக்க முயற்சிக்கிறது. அதுபோல தென் சீனக் கடலில் வியட்னாம்பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட நாடுகளின் கடல் எல்லைக்கு சீனா சொந்தம்கொண்டாடுகிறது.கிழக்கு சீனக் கடலில் ஜப்பான் … Read more இந்திய எல்லையில் ஆக்கிரமிப்பு சீனா மீது அமெரிக்கா கடும் தாக்கு| Dinamalar

பணத்தை திருப்பிக் கேட்டால் மிரட்டுகிறார்.. நெருங்கிய நண்பர் மீது மோசடி புகார் அளித்த பிரபல நடிகை!

By Kalaimathi | Published: Friday, October 22, 2021, 8:01 [IST] சென்னை: போதை பொருள் வழக்கில் கைதாகி தற்போது ஜாமீனில் வெளிவந்துள்ள நடிகை சஞ்சனா கல்ராணி தனது நண்பர் மீது மோசடி புகார் அளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூரைச் சேர்ந்தவர் நடிகை சஞ்சனா கல்ராணி. இவர் பிரபல நடிகையான நிக்கி கல்கராணியின் சகோதரி ஆவார். தெலுங்கு படத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகமான சஞ்சனா கல்ராணி, ஒரு காதல் செய்வீர் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு … Read more பணத்தை திருப்பிக் கேட்டால் மிரட்டுகிறார்.. நெருங்கிய நண்பர் மீது மோசடி புகார் அளித்த பிரபல நடிகை!

எல்ஐசி கொடுத்த அட்டகாசமான வாய்ப்பு.. இது முதலீட்டுக்கு சரியான தருணம் தான்..!

எல்ஐசி பேலன்ஸ்டு அட்வான்டேஜ் ஃபண்ட் அக்டோபர் 20 அன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஃபண்டானது நவம்பர் 3, 2021 அன்று முடிவடையவுள்ளது. இந்த ஃபண்டினை பற்றி முழுமையாக தெரிந்து கொள்ளும் முன்பு, NFO என்றால் என்ன? இது யாருக்கெல்லாம் ஏற்றது? எல்ஐசி பேலன்ஸ்டு அட்வான்டேஜ் ஃபண்ட் சரியான வாய்ப்பா? வாருங்கள் பார்க்கலாம். சொமேட்டோ: 2 நாளில் 10 ரூபாய் சரிவு.. தமிழும், தமிழர்கள் செய்த சம்பவமும்..! என்.எஃப்.ஓ (NFO – New Fund Offer)என்றால் என்ன? புதியதாக … Read more எல்ஐசி கொடுத்த அட்டகாசமான வாய்ப்பு.. இது முதலீட்டுக்கு சரியான தருணம் தான்..!

2022 ஹூண்டாய் கிரெட்டா ஃபேஸ்லிஃப்ட் டீசர் வெளியானது

முதன்முறையாக இந்தோனேசியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ள 2022 ஹூண்டாய் கிரெட்டா எஸ்யூவி காரின் தோற்ற அமைப்பில் சிறிய அளவிலான மாற்றங்களுடன்,இன்டிரியரில் கூடுதல் வசதிகளை பெற்றதாக விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகின்றது. தெற்காசியாவில் ஹூண்டாய் குழுமத்தின் முதல் தொழிற்சாலை இந்தோனேசியா நாட்டில் துவங்கப்பட்டுள்ளதால் முதல் மாடலாக கிரெட்டாவை விற்பனைக்கு வெளியிட திட்டமிட்டுள்ளது. சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட சான்டா க்ரூஸ் மற்றும் புதிய டூஸான் கார்களில் காணப்படுகின்ற அதே போன்ற கிரில் அமைப்பினை பகிர்ந்து கொள்ளுகின்ற புதிய கிரெட்டா காரில் முன்புற … Read more 2022 ஹூண்டாய் கிரெட்டா ஃபேஸ்லிஃப்ட் டீசர் வெளியானது