கே.எல்.ராகுல், ரஷீத்கானுக்கு புதிய அணியால் வந்த பிரச்சனை? ஐபிஎல்லில் விளையாட தடை வரலாம்!

ஐபிஎல் தொடருக்கான வீரர்கள் தக்க வைப்பு விஷயத்தில் கே.எல்.ராகுல் மற்றும் ரஷீத்கான் இருவருமே அதற்கு வேண்டாம் கூறிக் கொண்டே நிலையில், அதன் பின்னணி என்ன என்பது தெரியவந்துள்ளது. இந்தியாவில் அடுத்தாண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடரில் புதிதாக லக்னோ மற்றும் அகமதாபாத் ஆகிய அணிகள் சேர்கப்பட்டுள்ளன. இதனால் ஐபிஎல் அணியின் எண்ணிக்கை இப்போது 10-ஆக அதிகரித்துள்ளதால், பழைய அணியில் உள்ள வீரர்கள் கலைக்கப்பட்டு மெகா ஏலம் நடைபெறவுள்ளது. இதில், பழைய அணிகள் தங்கள் அணியில் உள்ள 4 வீரர்களை … Read more கே.எல்.ராகுல், ரஷீத்கானுக்கு புதிய அணியால் வந்த பிரச்சனை? ஐபிஎல்லில் விளையாட தடை வரலாம்!

இடைநீக்கம் செய்யப்பட்ட 12 எம்.பி.க்கள் நாடாளுமன்ற வளாகத்தில் நாளை முதல் தர்ணா போராட்டம்…

டெல்லி: நாடாளுமன்றத்தில் கண்ணியக்குறைவாக நடந்துகொண்டதால் இடைநீக்கம் செய்யப்பட்ட 12 எம்.பி.க்கள், நாளை முதல் நாடாளுமன்ற வளாகத்தில் தர்ணா போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்து உள்ளனர். கடந்த மழைக்கால கூட்டத்தொடரின்போது வேளாண் சட்டங்கள் ரத்து, பெகாசஸ் விவகாரம் உள்ளிட்ட பிரச்னைகள் குறித்து, எதிர்க்கட்சி எம்.பி.க்கள் ராஜ்யசபாவில் கடும் அமளியில் ஈடுபட்டனர். அங்குள்ள டிவியை உடைக்க முயன்றதும், அதை தடுத்த சபை காவலர்களை எட்டி உதைத்த அலங்கோலங்களும் நடந்தேறின.  இதையடுத்து, காங்கிரஸ், திரிணாமுல், கம்யூனிஸ்டு, சிவசேனா கட்சிகளை சேர்ந்த 12 எம்.பி.க்கள் … Read more இடைநீக்கம் செய்யப்பட்ட 12 எம்.பி.க்கள் நாடாளுமன்ற வளாகத்தில் நாளை முதல் தர்ணா போராட்டம்…

முதல் டெஸ்டில் அபித் அலி அபாரம் – வங்காளதேசத்தை வீழ்த்தியது பாகிஸ்தான்

சட்டோகிராம்: பாகிஸ்தான் அணி வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சட்டோகிராமில் நடைபெற்றது. முதலில் பேட் செய்த வங்காளதேசம் முதல் இன்னிங்சில் 330 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தது. லிட்டன் தாஸ் சதமடித்து 114 ரன்னில் வெளியேறினார். அதன்பின் ஆடிய பாகிஸ்தான் முதல் இன்னிங்சில் 286 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. தொடக்க ஆட்டக்காரர் அபித் அலி 133 ரன்கள் எடுத்தார். வங்காளதேசம் சார்பில் தைஜூல் இஸ்லாம் 7 விக்கெட்டுகளை … Read more முதல் டெஸ்டில் அபித் அலி அபாரம் – வங்காளதேசத்தை வீழ்த்தியது பாகிஸ்தான்

டிசம்பர் 10 வரை இரவு ஊரடங்கு நீட்டிப்பு – குஜராத் அரசு அறிவிப்பு

அகமதாபாத்: உலக அளவில் கொரோனா பாதிப்புகளை முன்னிட்டு அந்தந்த நாடுகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதேபோல், இந்தியாவிலும் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் இரவு ஊரடங்கு உத்தரவும் அமல்படுத்தப்பட்டது. இந்நிலையில், குஜராத் மாநில அரசு நேற்று முதல் இரவு நேர ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளது. அதன்படி, குஜராத்தின் 8 பெரிய நகரங்களில் டிசம்பர் 10-ம் தேதி வரை இரவு நேர ஊரடங்கு (அதிகாலை 1 மணி முதல் 5 மணிவரை) நீட்டிக்கப்படுகிறது என அறிவித்துள்ளது. இதையும் … Read more டிசம்பர் 10 வரை இரவு ஊரடங்கு நீட்டிப்பு – குஜராத் அரசு அறிவிப்பு

அமெரிக்காவில் மீண்டும் துப்பாக்கிச் சூடு – 3 பேர் பரிதாப பலி

வாஷிங்டன்: அமெரிக்காவில் துப்பாக்கி கலாச்சாரம் பெருகி வருகிறது. போலீசாரை குறிவைத்தும், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களிலும் தொடர் துப்பாக்கி சூடு சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. இதனால் துப்பாக்கி விநியோகத்தில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.    இதையடுத்து, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் துப்பாக்கிச்சூடு சம்பவங்களைக் கட்டுப்படுத்த பல்வேறு நிர்வாக உத்தரவுகளை பிறப்பித்துள்ளார். ஆனாலும், துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் தொடர்கின்றன.   இந்நிலையில், அமெரிக்காவின் மிச்சிகன் மாகாணத்தில் உள்ள … Read more அமெரிக்காவில் மீண்டும் துப்பாக்கிச் சூடு – 3 பேர் பரிதாப பலி

கீழக்கரை பகுதியில் மர்ம காய்ச்சலுக்கு 2 சிறுமிகள் பலி

கீழக்கரை: ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை பகுதியில் நூற்றுக்கணக்கான குழந்தைகளுக்கு மர்ம காய்ச்சல் ஏற்பட்டு பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் கீழக்கரை வடக்கு மற்றும் புது தெருவை சேர்ந்த 7 மற்றும் 12 வயது சிறுமிகளுக்கு காய்ச்சல் ஏற்பட்டு ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இரண்டு சிறுமிகளும் நேற்று இறந்தனர்.

உயர் பிரிவினருக்கான 10 சதவீத இடஒதுக்கீட்டை ஆய்வு செய்ய 3 பேர் குழு

புதுடெல்லி: பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் பிரிவினருக்கு கல்வி, வேலை வாய்ப்பில் ஒன்றிய அரசு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கியுள்ளது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்து வரும் உச்ச நீதிமன்றம், ‘பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கான இடஒதுக்கீடு எந்த அடிப்படையில் அளிக்கப்பட்டது? எந்த அடிப்படையில் அவர்களுக்கான வருமான உச்ச வரம்பு (ஆண்டுக்கு ரூ.8 லட்சம்) நிர்ணயம் செய்யப்பட்டது?’ என்று கேள்வி எழுப்பியது. இது பற்றி மறுஆய்வு செய்வதாக உச்ச நீதிமன்றத்தில் கடந்த வாரம் ஒன்றிய அரசு தெரிவித்தது. இந்நிலையில், … Read more உயர் பிரிவினருக்கான 10 சதவீத இடஒதுக்கீட்டை ஆய்வு செய்ய 3 பேர் குழு

இடஒதுக்கீட்டுக்கான அளவுகோல் நிர்ணயிக்க குழு அமைத்தது அரசு| Dinamalar

புதுடில்லி : பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்கு இடஒதுக்கீடு வழங்குவதற்கான அளவுகோல்களை மறுபரிசீலனை செய்ய மத்திய அரசு குழு அமைத்துள்ளது. பொருளாதாரத்தில் பின்தங்கிய பொது பிரிவினருக்கு கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் இடஒதுக்கீடு வழங்கி மத்திய அரசு உத்தரவிட்டது. ஆண்டுக்கு 8 லட்சம் ரூபாய் வரை வருமானம் உள்ளவர்கள் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களாக அளவுகோல் நிர்ணயிக்கப்பட்டது. ‘எந்த அடிப்படையில் இந்த அளவுகோல் நிர்ணயிக்கப்பட்டது’ என, உச்ச நீதிமன்றம் சமீபத்தில் கேள்வி எழுப்பியது. இதையடுத்து இடஒதுக்கீட்டுக்கான அளவுகோலை மறு பரிசீலனை செய்ய … Read more இடஒதுக்கீட்டுக்கான அளவுகோல் நிர்ணயிக்க குழு அமைத்தது அரசு| Dinamalar

துளசிதீர்த்தம் : ராம்கோபால் வர்மா 2ஆம் பாகம் எடுக்க காரணம் என்ன?

பாலிவுட் சர்ச்சை இயக்குனரான ராம்கோபால் வர்மா கடந்த இரண்டு வருடங்களாக சராசரிக்கும் கீழான படங்களை இயக்கிய வந்தவர், தற்போது மீண்டும் சீரியஸாக டைரக்சனுக்கு திரும்பியுள்ளார் என்றே தெரிகிறது. அதன் அச்சாரமாகத்தான் பிரபல தெலுங்கு நாவலாசிரியரான எண்டமூரி வீரேந்திரநாத்தின் நாவலை துளசி தீர்த்தம் என்கிற பெயரில் படம் எடுக்க இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். அதேசமயம் எண்டமூரி வீரேந்திரநாத் எழுதிய நாவலின் இரண்டாம் பாகமான மீண்டும் துளசி என்கிற நாவலைத்தான் துளசி தீர்த்தமாக எடுக்கப்போகிறார் ராம்கோபால் வர்மா. அப்படியானால் முதல் … Read more துளசிதீர்த்தம் : ராம்கோபால் வர்மா 2ஆம் பாகம் எடுக்க காரணம் என்ன?

அதிக ஆபத்தானது ஒமைக்ரான் சுகாதார நிறுவனம் எச்சரிக்கை| Dinamalar

ஜெனீவா:’உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் ‘ஒமைக்ரான்’ கொரோனா வைரஸ் அதிகபட்ச ஆபத்தை ஏற்படுத்தக் கூடியது’ என, உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்து.தென் ஆப்ரிக்காவில் உருமாறிய ஒமைக்ரான் கொரோனா வைரஸ் பரவியுள்ளதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இது குறித்து உலக சுகாதார நிறுவனம் அனைத்து நாடுகளுக்கும் அனுப்பியுள்ள அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:முதற்கட்ட ஆய்வில் ஒமைக்ரான் வைரஸ் குறித்து உறுதியான தகவல்கள் எதுவும் தெரிய வில்லை. இருந்தபோதிலும் இந்த வைரஸ் விரைந்து பெருகி, வேகமாக பரவக் கூடியது என்பது தெரியவந்துள்ளது.மனிதர்களின் நோய் … Read more அதிக ஆபத்தானது ஒமைக்ரான் சுகாதார நிறுவனம் எச்சரிக்கை| Dinamalar