ஓபிஎஸ், மகன் மீதான வழக்கு விசாரணைக்கு இடைக்காலத் தடை!

வேட்புமனுவில் தவறான தகவல்களை அளித்ததாக முன்னாள் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் , அவரது மகன் ரவீந்திரநாத் எம்.பி. மீதான வழக்கின் விசாரணைக்கு இடைக்காலத் தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த சட்டமன்ற தேர்தலில் போடி தொகுதியில் போட்டியிட்ட அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், 2019ஆம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலில் தேனி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்ட அவரது மகன் ரவீந்திரநாத் ஆகியோர், தங்களின் வேட்பு மனுவில் சொத்து விவரங்களை மறைத்தும், தவறான தகவல்களையும் தெரிவித்திருந்ததாகக் குற்றம் … Read more

மூக்கு வழி கொரோனா தடுப்பு மருந்து: அடுத்தக்கட்ட சோதனைக்கு மத்திய அரசு அனுமதி!

இந்தியாவை பொறுத்தவரை, கோவிஷீல்டு, கோவாக்சின், மாடர்னா, ஸ்புட்னிக் V ஜான்சன் அண்டு ஜான்சன் ஆகிய தடுப்பூசிகளை அவசரகால பயன்பாட்டுக்கு பயன்படுத்திக் கொள்ள மத்திய மருந்துகள் தரக் கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி வழங்கியுள்ளது. ஆனாலும், கோவிஷீல்டு, கோவாக்சின் ஆகிய தடுப்பூசிகளே பெரும்பாலும் போடப்பட்டு வருகின்றன. இந்தியாவில் தடுப்பூசி போடும் பணிகள் ஓராண்டை கடந்துள்ள நிலையில், 15 வயதுக்கு மேற்பட்ட சிறார்களுக்கு தடுப்பூசி போடவும், 60 வயதுக்கு மேலுள்ள இணை நோயுள்ள முதியவர்கள், முன்களப் பணியாளர்களுக்கு பூஸ்டர் டோஸ் போடவும் … Read more

கவர்ச்சியில் சமந்தாவை ஓவர்டேக் செய்யும் தமன்னா..என்ன குத்து குத்துறாங்க..!

தமிழ் சினிமாவில் பல ஆண்டுகளாக முன்னணி நடிகையாக வளம் வருபவர் தமன்னா. தற்போது தமிழ் மற்றும் தெலுங்கில் அதிக கவனம் செலுத்தி வரும் தமன்னா வெப் தொடர்களிலும் நடித்து வருகிறார். கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளை தேர்வு செய்து நடிக்கும் தமன்னாவிற்கு தமிழில் அவ்வளவாக படங்கள் இல்லை என்றாலும் தெலுங்கு மற்றும் ஹிந்தியில் அதிகளவில் படங்களில் நடித்து வருகிறார். மேலும் சமீப காலமாக தமன்னா தாராள கவர்ச்சி காட்டிவருவது ரசிகர்களின் வரவேற்பை பெற்றுவருகிறது. இந்நிலையில் தற்போது தமன்னா … Read more

இலங்கையில் மறைக்கப்படும் கோவிட் தரவுகள்! அம்பலப்படுத்தப்பட்ட தகவல்

கோவிட் -19 வைரஸ் தொற்றாளர்கள் தொடர்பிலான உண்மை தரவுகள் வெளிப்படுத்தப்படுவதில்லை. தற்போதைய நிலைமையில் நாடு தழுவிய ரீதியில் தினசரி 2000 ஆயிரம் தொடக்கம் 2500 வரையிலான தொற்றாளர்கள் இனங்காணப்படுகிறார்கள். நிலைமை எல்லை கடந்து சென்றால் பதிவாகும் மரணங்களின் எண்ணிக்கையும் அதிகமாகும் என பொது சுகாதார பரிசோதகர் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்தார். கோவிட்-19 வைரஸ் தாக்கத்தின் நடைமுறை தன்மை குறித்து குறிப்பிடுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் குறிப்பிடுகையில், கோவிட்  -19 தடுப்பூசியின் முதல் மற்றும் … Read more

திமுகவுக்கு ’ரூட்’ போட்ட நவநீதகிருஷ்ணன் – கட்சி பதவியை பறித்த அதிமுக

அதிமுக மாநிலங்களவை உறுப்பினராக இருக்கும் எம்.பி.நவநீதகிருஷ்ணன், திமுக மாநிலங்களவை உறுப்பினர் டி.கே.எஸ் இளங்கோவன் இலலத் திருமண விழாவில் (27.01.2022) வியாழக்கிழமை கலந்து கொண்டார். அந்த விழாவில் மணமக்களை வாழ்த்தி பேசிய அவர், திமுக எம்.பி மற்றும் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினரான கனிமொழியை புகழ்ந்து பேசினார். ALSO READ | நகர்புற உள்ளாட்சி தேர்தலில் அதிமுக – பா.ஜ.க கூட்டணி தொடருமா? டெல்லிக்கு எம்.பியாக சென்றபோது எதுவும் தெரியாமல் இருந்த தனக்கு கனிமொழி மற்றும் டி.கே.ரங்கராஜன் ஆகியோர் பல விஷயங்களை … Read more

உறைய வைக்கும் பனியில் வெளியே பரிதவித்த 63 நாய் குட்டிகள் மீட்பு <!– உறைய வைக்கும் பனியில் வெளியே பரிதவித்த 63 நாய் குட்டிகள் … –>

கிழக்கு துருக்கியில் பூஜ்ஜியத்துக்கும் குறைவான தட்பவெட்பம் பதிவாகி வரும் நிலையில், உறைய வைக்கும் பனியில் வெளியே பரிதவித்த 63 நாய் குட்டிகள் மீட்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டன. Erzurum மாகாணத்தில் பகல் நேர வெப்பநிலை மைனஸ் 6 டிகிரி செல்சியஸ் ஆகவும் இரவு நேர வெப்பநிலை மைனஸ் 16 டிகிரி செல்சியஸ் ஆகவும் பதிவாகி வருகிறது. இந்நிலையில் மீட்கப்பட்ட நாய்க்குட்டிகள் அனைத்தும் அரசு கால்நடை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டபின் நலமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். Source … Read more

ஒயின் என்பது மதுபானம் அல்ல.. ஒயின் விற்பனை அதிகரித்தால் விவசாயிகள் பயன் பெறுவார்கள் – சஞ்சய் ராவத் <!– ஒயின் என்பது மதுபானம் அல்ல.. ஒயின் விற்பனை அதிகரித்தால் … –>

ஒயின் என்பது மதுபானம் அல்ல என குறிப்பிட்ட சிவசேனா கட்சியின் மூத்த தலைவரான சஞ்சய் ராவத், ஒயின் விற்பனை அதிகரித்தால் விவசாயிகள் அதிக பலன்களை பெறுவார்கள் என்றும் அவர்களின் வருவாய் இரட்டிப்பாகும் என்றும் தெரிவித்துள்ளார். மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள சூப்பர் மார்க்கெட்டுகளில் ஒயின்களை விற்க அம்மாநில அமைச்சரவை வியாழக்கிழமையன்று ஒப்புதல் அளித்தது. மேலும், வழிபாட்டு தலங்கள், கல்வி நிறுவனங்களுக்கு அருகில் உள்ள சூப்பர் மார்க்கெட்டுகளில் ஒயின் விற்பனைக்கு அனுமதி கிடையாது என்றும் அறிவித்தது. மகாராஷ்டிர அரசின் இந்த … Read more

போல்ட்,இண்டிபென்டன்ட் ஆர்டிஸ்ட்; ரசிகர்களின் கண்ணம்மா – ஸ்ருதி ஹாசன் ஸ்பெஷல் ஆல்பம் #HBDShrutiHaasan

தன்னைப் பற்றி வரும் கிசுகிசுக்களை பெரிதாக எடுத்து கொள்வதில்லை . எனக்கு பயன்படாததை நான் கேர் செய்வதில்லை என்கிறார் ஸ்ருதி. இசையமைப்பாளர், பாடகர் எனப் பல திறமைகளை கொண்ட ஸ்ருதியின் குரலில் முதன் முதலாக வந்த பாடல் தேவர்மகன் படத்தின் ‘போற்றிப் பாடடி பெண்ணே’. அப்போது அவருக்கு வயது 6. தான் நடிகர், இசையமைப்பாளர், பாடகர் என்பதையெல்லாம் தாண்டி என்டர்டெய்னராக இருக்க வேண்டும் என்பது தான் ஸ்ருதியின் ஆசை. ஸ்ருதிக்கு மிகவும் பிடித்த படம் மகாநதி. நடிகர் … Read more

திருமண நிகழ்ச்சியில் சைவ பிரியர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி! வைரலாகும் புகைப்படம்

திருமண நிகழ்ச்சிகளில் வரும் விருந்தினருக்கு அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப விருந்து அளிப்பதே உலக கலாச்சாரம். அப்படி இருக்கையில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் சைவ உணவு உண்பவர்களுக்கு ராக்கெட் இலைகள் மற்றும் சில முலாம்பழம் துண்டுகள் கொடுத்து அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளனர் அந்த திருமண வீட்டுக்காரர்கள். அந்த திருமண நிகழ்ச்சியில் வழங்கப்பட்ட அந்த உணவை புகைப்படம் எடுத்து இணையதளத்தில் பதிவிட்டதை தொடர்ந்து, அது தற்போது சமூக வலைத்தளத்தில் 4k லைக்குகளை தாண்டி வைரல் ஆகிவருகிறது. அந்த பதிவில் தற்போது பலரும் … Read more

முன்னாள் கர்நாடக முதல்வர் எடியூரப்பா பேத்தி தூக்கிட்டு தற்கொலை

பெங்களூரு கர்நாடக மாநில முன்னாள் முதல்வர் எடியூரப்பாவின் பேத்தி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். பாஜக மூத்த தலைவரும் கர்நாடக மாநில முன்னாள் முதல்வருமான பி.எஸ் .எடியூரப்பாவின் மூத்த மகள் பத்மாவதி  பத்மாவதியின் மகள்  சவுந்தர்யா ( வயது 30)  ஒரு பயிற்சி மருத்துவர் ஆவார்.  சவுந்தர்யாவின் கணவர் மீரஜும் டாக்டராவார்.   இருவரும் பெங்களூருவில் உள்ள வசந்த்நகர் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தனர். இன்று காலை சவுந்தர்யாவின் வீட்டுக்கு வேலை செய்யும் பணி பெண் சென்றுள்ளார்.   அவர் கதவைத் திறக்க கூறி … Read more