வருவாய் மீட்பு சட்டத்தில் அசல் ஆவணங்களை விடுவித்து கிரையதாரர்களிடம் ரூ.6 லட்சம் வசூல்

திருவொற்றியூர்: சார் பதிவாளர் அலுவலகங்களில் பத்திரப்பதிவு நடைபெறும்போது, குறிப்பிட்ட தொகை முத்திரைதாள் கட்டணமாக செலுத்த வேண்டும். ஆனால் ஒரு சில உரிமையாளர்கள் பதிவின்போது முத்திரை தாள் நிர்ணய கட்டணத்தை குறைவாக செலுத்தி, ஆவண பதிவு செய்து விடுவார்கள். இவ்வாறு குறைவான கட்டணம் செலுத்தி பதிவு செய்யப்பட்ட ஆவணம் சம்பந்தப்பட்ட உரிமையாளருக்கு விடுவிக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்படும். இந்நிலையில், தமிழ்நாடு அரசு பதிவுத்துறை வாயிலாக இந்திய முத்திரை சட்டம் மற்றும் வருவாய் மீட்பு சட்டத்தின் கீழ், நிலுவையில் உள்ள ஆவணங்கள் … Read more

ஓராண்டு சிறை தண்டனை சித்து இன்று விடுதலை

பாட்டியாலா: ஓராண்டு சிறை தண்டனை காலத்திற்கு முன்னதாகவே நன்னடத்தை அடிப்படையில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சித்து இன்று விடுதலையாகிறார்.  கடந்த  1988ம் ஆண்டு நடந்த சாலை  விபத்து வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட  முன்னாள் கிரிக்கெட் வீரரும், பஞ்சாப் காங்கிரஸ் முன்னாள் தலைவருமான  சித்து, உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி கடந்தாண்டு மே 20ம் தேதி முதல்  பாட்டியாலா சிறையில் அடைக்கப்பட்டார். ஓராண்டு சிறை தண்டனை வரும் மே 16ம்  தேதியுடன் நிறைவு பெறவுள்ள நிலையில், கிட்டத்தட்ட 45 நாட்கள் முன்னதாக … Read more

சோழவரம் ஏரியில் வாலிபர் சடலம் மீட்பு

புழல்: செங்குன்றம் அருகே எடப்பாளையம் பகுதியில் உள்ள சோழவரம் ஏரியில் நேற்று காலை சுமார் 32 வயது மதிக்கத்தக்க வாலிபரின் சடலம் மிதந்து கொண்டிருந்தது. தகவலறிந்த சோழவரம் போலீசார், சம்பவ இடத்துக்கு விரைந்து, சடலத்தை மீட்டு விசாரித்தனர்.அதில், சடலமாக கிடந்தவர், அதே பகுதியில் உள்ள பிள்ளையார் கோயில் தெருவை சேர்ந்த பார்த்திபன் (32) என்பதும், இவருக்கு மனைவி மற்றும் 2 குழந்தைகள் இருப்பதும், சரக்கு வேன் ஓட்டி வந்ததும்,  கடந்த சில நாட்களுக்கு முன் லோடு ஏற்றிச் … Read more

பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு தேர்தல் ஆணையத்திடம் ஆவணங்கள் தாக்கல்

புதுடெல்லி: அதிமுகவின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டதற்கான ஆவணங்களதேர்தல் ஆணையத்திடம் சமர்பிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அதனை ஆணையம் விரைவில் பரிசீலிக்க உள்ளது. கடந்த ஆண்டு ஜூலை 11ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தில், ஒற்றைத்தலைமையை கொண்டுவருவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.  இதைஎதிர்த்துதாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின்படி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஓ.பன்னீர்செல்வம், வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், ஜே.சி.டி.பிரபாகர் ஆகியோர் தாக்கல் செய்த மனுக்களை விசாரித்த தனிநீதிபதி குமரேஷ் பாபு,‘‘கடந்த ஆண்டு ஜூலை 11ம் … Read more

அத்திப்பட்டு முதல் நிலை ஊராட்சியில் கலைஞர் அரங்க கட்டிடம் திறப்பு

பொன்னேரி:  மீஞ்சூர் அடுத்த அத்திப்பட்டு முதல் நிலை ஊராட்சியில் கலைஞர் அரங்கம் கட்டிடம் திறப்பு விழா நடைபெற்றது. மீஞ்சூர் அடுத்த, அத்திப்பட்டு முதல்நிலை ஊராட்சியில் சுமார் 5000க்கும் மேற்பட்ட குடும்பத்தைச் சேர்ந்த பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இதில் ஏராளமான ஏழ்மை நிலையில் உள்ள குடும்பத்தினர் இங்கு வசிப்பதால் இவர்களுக்கென்று விசேஷ நிகழ்ச்சிகளுக்காக சமுதாயக்கூடம் வேண்டி ஜுவாரி சிமெண்ட் கம்பெனியிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. அதன்படி, இந்த நிறுவனத்தின் மூலம் ஒப்பந்த அடிப்படையில் கட்டப்பட்ட கலைஞர் அரங்கம், சமுதாய  கூட … Read more

தற்கொலை எண்ணத்தை மாற்ற ராகுல் காந்திதான் காரணம்: ரம்யா உருக்கம்

மாண்டியா: எனது தந்தையின் மரணத்திற்குப் பிறகு தற்கொலை செய்து கொள்ள நினைத்தேன் என்று கன்னட நடிகை ரம்யா ஸ்பந்தனா தெரிவித்தார். கர்நாடகா சட்டசபை தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், மக்களவை முன்னாள் உறுப்பினரும், காங்கிரஸ் செய்தி தொடர்பாளரும், கன்னட நடிகையுமான ரம்யா ஸ்பந்தனா, தனியார் சேனலுக்கு அளித்த பேட்டியில், ‘எனது தந்தையின் மரணத்திற்குப் பிறகு தற்கொலை செய்து கொள்ள நினைத்தேன். நாடாளுமன்ற நிகழ்ச்சிகளில் தொடர்ந்து பங்கேற்றேன். அந்த நேரத்தில், ராகுல் காந்தி எனக்கு தைரியம் அளித்தார். அதன்பின் … Read more

விளாப்பாக்கம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆண்டு விழா

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம், திருவள்ளூர் ஒன்றியத்திற்குட்பட்ட விளாப்பாக்கம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இந்தப் பள்ளியில் 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை 67 மாணவர்கள் பயின்று வருகின்றனர்.  இந்நிலையில் அரசுப் பள்ளியில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்கவும், கிராமத்தில் உள்ள அனைத்து குழந்தைகளும் இந்த பள்ளியில் சேர்ந்து படிக்க வேண்டும் என்கிற நோக்கத்தில் பள்ளியின் தலைமை ஆசிரியர் ஞான சௌந்தரி ஊராட்சி ஒன்றிய குழு துணைத் தலைவர் பர்க்கத்துல்லாகானிடம் கோரிக்கை விடுத்திருந்தார்.   இதனையடுத்து … Read more

கொசுவர்த்தி சுருளால் தீ பற்றி 6 பேர் பலி

புதுடெல்லி:  வடகிழக்கு டெல்லியின் சாஸ்திரி பூங்கா பகுதியில்,  ஒரு வீட்டில் தீ விபத்து ஏற்பட்டது அங்கு  9 பேர் மயக்கமடைந்து உயிருக்கு போராடினர்.  இதில் 6 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.  மற்ற மூன்று பேருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டது.  போலீசார் நடத்திய விசாரணையில் இரவில் தூங்கும்போது கொசுவை விரட்டுவதற்காக ஏற்றி வைத்த கொசுவர்த்தி சுருள் படுக்கையின் மீது கவிழ்ந்து விழுந்து தீ பற்றியது தெரியவந்தது.

நகராட்சி நிர்வாகத் துறையின் மானிய கோரிக்கையில் 19 நகராட்சிகளின் தரம் உயர்த்தப்பட்டது: சுகாதார அலுவலர் சங்கம் முதல்வருக்கு நன்றி அறிவிப்பு

ஆவடி:  தமிழ்நாடு நகராட்சி, மாநகராட்சி சுகாதார ஆய்வாளர் மற்றும் சுகாதார அலுவலர் மாநில சங்கம் சார்பாக  முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துள்ளனர். சுகாதார அலுவலர் சங்கம் மாநிலத் தலைவர் ஆல்பர்ட் அருள்ராஜ்  வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சட்டசபை கூட்டத்தொடரில் நேற்று முன்தினம் நகராட்சி நிர்வாகத் துறையின் மானிய கோரிக்கையில், மொத்தம் 19 நகராட்சிகளின் தரம் உயர்த்தப்பட்டுள்ளது என வெளியாகியது. இதில், பெரம்பலூர், திருவள்ளூர், விழுப்புரம். திருவேற்காடு, பூந்தமல்லி, தென்காசி, நந்திவரம் கூடுவாஞ்சேரி, திருவாரூர் திருத்தணி போன்ற நகராட்சிகளின் … Read more

நுபுர் சனோன் படத்துக்கு 5 ஏக்கர் நிலத்தில் கிராமம் செட்

ஐதராபாத்: வம்சி இயக்கத்தில் ரவி தேஜா நடிக்கும், படம் ‘டைகர் நாகேஸ்வரராவ்’. இது பான் இந்தியா படமாக உருவாகி வருகிறது. ஹீரோயினாக நுபுர் சனோன், காயத்ரி பரத்வாஜ் நடிக்கின்றனர். ஆர்.மதி ஒளிப்பதிவு செய்கிறார். ஜி.வி.பிரகாஷ் …