சென்னை கோயம்பேட்டில் பட்டாக்கத்திகளுடன் சிக்கிய பச்சையப்பன் கல்லூரி மாணவரிடம் போலீஸ் விசாரணை..!!

சென்னை: சென்னை கோயம்பேட்டில் பட்டாக்கத்திகளுடன் சிக்கிய பச்சையப்பன் கல்லூரி மாணவரிடம் போலீஸ் விசாரணை நடத்தி வருகிறது. போலீசாரின் ரோந்து வாகனத்தை கண்டதும் தப்பியோடிய மாணவர்கள் 9 பேருக்கு வலைவீசியுள்ளது. பிடிபட்ட மாணவன் வெற்றிவேலின் பையில் இருந்து 4 பட்டாக் கத்திகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

பெங்களூருவில் 19 வயது பெண்ணை காரில் கடத்தி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த 4 இளைஞர்கள் கைது

பெங்களுரு: பெங்களூருவில் 19 வயது பெண்ணை காரில் கடத்தி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த 4 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பிப்ரவரி 25-ம் தேதி 19 வயது இளம்பெண் தனது நண்பருடன் புகைபிடித்துக் கொண்டிருந்தபோது 4 இளைஞர்கள் தகராறு செய்துள்ளனர். தகராறில் ஈடுப்பட்ட 4 இளைஞர்கள் இளம்பெண்ணை தங்களது காரில் கடத்திச் சென்று பலாத்காரம் செய்துள்ளனர்.

2ம் நிலை மோட்டார் வாகன ஆய்வாளர் பணிக்கான இறுதி முடிவுகள் நீதிமன்ற ஆணைக்கு கட்டுப்பட்டது: ஐகோர்ட் கிளை ஆணை

மதுரை: 2ம் நிலை மோட்டார் வாகன ஆய்வாளர் பணிக்கான இறுதி முடிவுகள் நீதிமன்ற ஆணைக்கு கட்டுப்பட்டது என்று ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. விண்ணப்பதாரர்களின் நேர்முகத் தேர்வு முடிவுகளை ஏப்ரல் 11 வரை ஒத்தி வைக்கவும் ஐகோர்ட் கிளை ஆணையிட்டுள்ளது. மனுதாரர்களை நேர்முகத் தேர்வுக்கு அழைக்கவும், அதன் முடிவுகளை சீலிட்ட கவரில் தாக்கல் செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது.  தேர்வில் வென்றும் நேர்முக தேர்வுக்கு அழைக்கவில்லை என சுமதி, துர்காசுதா, பிரவீன், பார்த்திபன் ஆகியோர் வழக்கு தொடர்ந்திருந்தனர். நேர்முக தேர்வு பய்யியலில் … Read more

திருச்சி அருகே பட்டா பெயர் மாற்றத்துக்கு ரூ.5,000 லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ.விடம் விசாரணை

திருச்சி: திருச்சி மண்ணச்சநல்லூர் அருகே பட்டா பெயர் மாற்றத்துக்கு ரூ.5,000 லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் சிக்கினார். கிராம நிர்வாக அலுவலர் பழனியம்மாள் (44) லஞ்சம் பெற்றபோது லஞ்ச ஒழிப்பு போலீஸ் அவரை கையும் களவுமாக பிடித்தது. 

புதிய நாடாளுமன்றத்தின் கட்டுமான பணிகள்: திடீர் ஆய்வு செய்த பிரதமர் நரேந்திர மோடி!

டெல்லி: புதிய நாடாளுமன்றத்தின் கட்டுமான பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டி உள்ள நிலையில், திடீரென அங்கு சென்ற பிரதமர் மோடி, அங்கு மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டதுடன், தொழிலாளிகளிடம் கலந்துரையாடினார். இந்தியாவின் வரலாற்று சின்னங்களில் மிக முக்கியமான ஒன்று நாடாளுமன்றம். தற்போது பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நமது நாடாளுமன்றம் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. இந்த பழைய நாடாளுமன்ற கட்டிடத்தில் புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எந்த மாற்றமும் செய்ய முடியாது என்பதால், அதற்கு பதிலாக … Read more

உதகையில் கோடை சீசன் தொடங்கியதை அடுத்து சுற்றுலா தலங்களில் சினிமா படப்பிடிப்பிற்கு தடை

உதகை: நீலகிரி மாவட்டம் உதகையில் உள்ள அரசு தாவரவியல் பூங்கா மற்றும் முக்கிய சுற்றுலா தளங்களில் வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் சினிமா படப்பிடிப்பிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் கோடை சீசன் தொடங்கியதை அடுத்து தாவரவியல் பூங்கா உள்பட 7 முக்கிய சுற்றுலா தலங்களில் நாளை முதல் 3 மாதங்களுக்கு தடை விதித்து தோட்டக்கலைத்துறை அறிவித்துள்ளது. நீலகிரி மாவட்டத்தில் கோடை சீசன் தொடங்கி உள்ளது. இதனால் இதமான காலநிலை நிலவுகிறது. ஏப்ரல், மே மற்றும் … Read more

நிதி நிலையை பொறுத்து கவுரவ விரிவுரையாளர்களுக்கு ஊதியத்தை உயர்த்த நடவடிக்கை: பேரவையில் அமைச்சர் பொன்முடி பதிலுரை

சென்னை: நிதி நிலையை பொறுத்து கவுரவ விரிவுரையாளர்களுக்கு ஊதியத்தை உயர்த்தி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.  சட்டப்பேரவையில் உயர்கல்வித்துறை மானியக் கோரிக்கையில் அமைச்சர் பொன்முடி பதிலுரை  அளித்து வருகிறார். கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2022-ல் 4.38 லட்சம் பேர் சேர்ந்த நிலையில் இவ்வாண்டு 5.33 லட்சம் பேர் சேர்ந்துள்ளனர் என்றும் அமைச்சர் கூறினார்.

காரைக்காலில் வரும் திங்கட்கிழமை உள்ளூர் விடுமுறை: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

காரைக்கால்: காரைக்காலில் வரும் திங்கட்கிழமை உள்ளூர் விடுமுறை என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். ஸ்ரீ கைலாசநாதர் தேர் திருவிழாவை முன்னிட்டு அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

சேலம் மாவட்டம் அதிகாரிப்பட்டியில் கழிவுநீர் கால்வாயில் தவறி விழுந்து கர்ப்பிணி உயிரிழப்பு

சேலம்: சேலம் மாவட்டம் அதிகாரிப்பட்டியில் கழிவுநீர் கால்வாயில் தவறி விழுந்து கர்ப்பிணி சந்தியா உயிரிழந்தார். வீட்டின் அருகே திறந்திருந்த கழிவுநீர் கால்வாயில் விழுந்த 4 மாத கர்ப்பிணி சந்தியா உயிரிழந்தார்.

பள்ளிக்கு ஒருநாள் விடுமுறை விட்டால் சமுதாயத்துக்கு ஐந்துநாள் இழப்பு: அமைச்சர் அன்பில் மகேஸ் சாடல்

சென்னை: பள்ளிக்கு ஒருநாள் விடுமுறை விட்டால் சமுதாயத்துக்கு ஐந்துநாள் இழப்பு என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். விரைவில் ஆசிரியர் காலி பணியிடங்கள் நிரப்பப்படும். 6 முதல் 8ம் வகுப்புகளில் ஒவ்வொரு பாடத்திற்கும் ஒன்று என 5 பட்டதாரி ஆசிரியர் பணியிடம் ஏற்படுத்தப்படும் என்று சட்டப்பேரவையில் அமைச்சர் அன்பில் மகேஸ் அறிவித்தார்.