உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில் அதிகாலை பயங்கர தீ விபத்து : சுமார் 500 கடைகள் தீயில் எரிந்து சேதம்!!

லக்னோ : உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில் அதிகாலை ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் லட்சக்கணக்கான ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாகின. கான்பூரின் பாஸ்மண்டி பகுதியில் உள்ள ஹம்ராஜ் மார்க்கெட்டில் அதிகாலை 3 மணி அளவில் தீ பிடித்து எரிய தொடங்கியது. அந்த நேரத்தில் காற்று பலமாக வீசிக் கொண்டு இருந்ததால் அடுத்தடுத்த கட்டிடங்களுக்கு தீப் பரவியது. இதனால் அருகில் இருந்த மசூத் டவரின் 2 கட்டிடங்கள் உள்ளிட்ட வணிக வளாகங்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டன. இந்த … Read more

விகேபுரம் அருகே கரும்பு தோட்டத்துக்குள் புகுந்து யானைகள் மீண்டும் அட்டகாசம்: விவசாயிகள் கவலை

விகேபுரம்: விகேபுரம் அருகே கரும்பு தோட்டத்துக்குள் யானைகள் கூட்டம் புகுந்து கரும்புகளை தின்றும், காலால் மிதித்தும் சேதப்படுத்தியிருப்பது விவசாயிகள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை மாவட்டம் விகேபுரம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் புலி, சிறுத்தை, காட்டு யானை, காட்டு எருமை, காட்டுப்பன்றி, கரடி, மான், மிளா உள்ளிட்ட பல்வேறு வகையான வனவிலங்குகள் வசித்து வருகிறது. இந்த வனவிலங்குகள் அவ்வப்போது வனப்பகுதியில் இருந்து வெளியேறி ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வருகிறது. குறிப்பாக யானைகள் கூட்டம் சமீபகாலமாக அனவன் … Read more

உதகை மாவட்டத்தில் நரிக்குழியாடா கிராமத்துக்கு செல்லும் குடிநீரில் மனித கழிவு கலக்க காரணமான 2 பேர் கைது

உதகை: உதகை மாவட்டம் நாஞ்சநாடு அருகே நரிக்குழியாடா கிராமத்துக்கு செல்லும் குடிநீரில் மனித கழிவு கலக்க காரணமான 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மனித கழிவு அகற்றும் வாகனத்தில் கொண்டு சென்ற தடுப்பணையில் கழிவுகள் கொட்டப்பட்டதை கண்டறிந்த கிராம மக்கள் ஊராட்சி மன்ற தலைவருக்கு தகவல் அளித்தனர்.  

டெல்லி சாஸ்திரி பூங்கா அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் உயிரிழப்பு

டெல்லி: டெல்லி சாஸ்திரி பூங்கா அருகே கொசுவத்தி சுருளில் இருந்து வந்த நச்சு புகையை சுவாசித்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் உயிரிழந்தனர். சென்னை சாஸ்திரி பூங்கா பகுதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் கொசு விரட்டி மருந்தில் இருந்த நச்சு வாயுவை சுவாசித்ததின் காரணமாக உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேற்று இரவு கொசு விரட்டியை எரியவிட்டு தூங்கிய நிலையில் கொசு விரட்டியின் சுருள் மெத்தையின் மீது விழுந்ததில் தீ பற்றி … Read more

களக்காட்டில் வாட்டி வதைக்கும் வெயில் காரணமாக பச்சையாறு அணை நீர்மட்டம் சரிந்தது: குடிநீர் தட்டுப்பாடு அபாயம்

களக்காடு: களக்காட்டில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் பச்சையாறு அணையின் நீர்மட்டம் 6.75 அடியாக சரிந்தது. இதனால், குடிநீர் தட்டுப்பாடு அபாயம் ஏற்பட்டுள்ளது. களக்காடு அருகே மஞ்சுவிளை மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் பச்சையாறு அணை அமைந்துள்ளது. இந்த அணையின் மூலம் களக்காடு, நாங்குநேரி பகுதிகளில் உள்ள 110 குளங்களும், 10 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்களும் பாசன வசதி பெற்று வருகின்றன. இந்நிலையில் கடந்தாண்டு தென்மேற்கு பருவமழையும் கை கொடுக்கவில்லை. அதே நேரத்தில் வடகிழக்கு பருவமழையும் ஏமாற்றியது. இதன் … Read more

தமிழ்நாட்டில் 5 நாட்கள் மிதமான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்

சென்னை: தமிழ்நாட்டில் 5 நாட்கள் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. வளி மண்டல கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திப்பதால் மழைக்கு வாய்ப்பு இருக்கிறது. நாளை தமிழ்நாடு, புதுச்சேரி பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. சென்னையில் 2 நாட்களுக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்; சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அரியானாவில் கோபுர ஓட்டலில் தீ விபத்து..!!

அரியானா: அரியானா மாநிலம் பஞ்ச்குலாவில் உள்ள அமராவதி அங்காடியில் கட்டிடத்தின் உச்சியில் உள்ள வட்டவடிவ ஓட்டலில் தீ விபத்து ஏற்பட்டது. பல அடி உயரத்தில் உள்ள ஓட்டலில் பிடித்த தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர்.

தேக்கடியில் 15வது மலர் கண்காட்சி: நாளை ஆரம்பம்

கூடலூர்: தேக்கடியில் 15வது மலர் கண்காட்சி நாளை முதல் நடைபெறுகிறது. கேரள மாநிலம், தேக்கடி வேளாண் தோட்டக்கலை சங்கம், குமுளி பஞ்சாயத்து நிர்வாகம், மன்னாரத்தரை கார்டன் இணைந்து நடத்தும் தேக்கடி 15வது மலர் கண்காட்சி தேக்கடி – குமுளி ரோட்டில் கல்லறைக்கல் மைதானத்தில், நாளை முதல் 30 நாட்கள் நடைபெறுகிறது. இந்த மலர் கண்காட்சியில் பல்லாயிரக்கணக்கான மலர்கள், நூற்றுக்கணக்கான மருத்துவ மூலிகைச்செடிகள், அலங்காரச்செடிகள், தோட்டச் செடிகள், சமையலறை தோட்டம் அமைக்க தேவையான செடி, நாற்றுகள் அனைத்தும் பார்வையாளர்களை … Read more

தியேட்டர் என்பது அனைவருக்கும் சமமான இடம். தியேட்டர் செல்ல அனைவருக்கும் உரிமை உள்ளது: நடிகர் சூரி கண்டனம்

சென்னை: தியேட்டர் என்பது அனைவருக்கும் சமமான இடம். தியேட்டர் செல்ல அனைவருக்கும் உரிமை உள்ளது என நடிகர் சூரி தெரிவித்துள்ளார். ரோகிணி தியேட்டரில் நரிக்குறவர்களை அனுமதிக்க மறுத்ததற்கு நடிகர் சூரி கண்டனம் தெரிவித்துள்ளார்.

சுதந்திரமாக பேச போராட வேண்டியுள்ளது: காங்கிரஸ் பொதுச்செயலாளர் முகுல் வாஸ்னிக் பேச்சு

டெல்லி: ஆங்கிலேயரிடம் சுதந்திரத்திற்கு போராடினோம்; தற்போது சுதந்திரமாக பேச போராட வேண்டியுள்ளது என காங்கிரஸ் பொதுச்செயலாளர் முகுல் வாஸ்னிக் தெரிவித்துள்ளார். முக்கிய பிரச்சனைகள் குறித்து நாடாளுமன்றத்தில் பேச அனுமதிக்கப்படவில்லை என அவர் தெரிவித்தார்.