உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிவிப்பு அதிமுகவுடன் பாஜக கூட்டணி தொடரும்: கோரிக்கை நிராகரிப்பால் அண்ணாமலை ராஜினாமாவா?

புதுடெல்லி: அதிமுகவுடன் கூட்டணி தொடரும் என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறினார். கூட்டணி விவகாரத்தில் அண்ணாமலை கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளதால் அவர் ராஜினாமா செய்வாரா அல்லது மேலிட உத்தரவுக்கு பயந்து, எடப்பாடி பழனிசாமியின் சொல்படி நடப்பாரா என்ற எதிர்பார்ப்பு மக்களிடமும், இரு கட்சிகளின் தொண்டர்களிடமும் எழுந்துள்ளது. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா டெல்லியில் ஆங்கில தொலைக்காட்சி சேனல் நடத்திய நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் பல்வேறு தலைப்புகளில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கும் விடையளித்தார். அப்போது அவர் கூறுகையில், நாடு … Read more

பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் தலைமை நீதிபதியின் அதிகாரத்தை கட்டுப்படுத்தும் சட்டம் நிறைவேறியது

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் தலைமை நீதிபதியின் அதிகாரங்களை கட்டுப்படுத்தும் சட்டம் நேற்று நிறைவேறியது.  பாகிஸ்தான் உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் அதிகாரங்களை கட்டுப்படுத்தும்  சட்ட மசோதாவை அந்நாட்டின் சட்ட அமைச்சர் அசாம் நசீம் தரார் நாடாளுமன்றத்தில் நேற்று தாக்கல் செய்தார்.  அப்போது எதிர்கட்சியான பாகிஸ்தான் தெஹ்ரிக் இ இன்சாப் எம்பி.க்கள் இதற்கு கடும் ஆட்சேபனை தெரிவித்தனர். மேலும், தனிப்பெரும்பான்மை உடன் ஒரு சட்டத்தை நிறைவேற்றுவதன் மூலம் உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் அதிகாரத்தை கட்டுப்படுத்துவது என்பது முறையற்றது. நாடாளுமன்ற விவாதத்துக்கு … Read more

கலைஞர் ஜெயலலிதாவுக்கு புதுவை அரசு சார்பில் விழா

புதுச்சேரி: புதுச்சேரி சட்டசபையில் மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் எம்எல்ஏக்களின் கேள்விகளுக்கு முதல்வர் ரங்கசாமி பதிலளித்து பேசுகையில், ‘நாட்டுக்காகவும், மாநிலத்துக்காகவும், மொழிக்காகவும் பாடுபட்டு மறைந்த தலைவர்களுக்கு அரசு விழா எடுக்கப்படும். அதன்படி, முன்னாள் பிரதமர் வாஜ்பாய், தமிழக முன்னாள் முதல்வர்கள் கலைஞர், ஜெயலலிதா, புதுச்சேரி விடுதலைக்காக பாடுபட்ட செல்லான் நாயகர் ஆகியோருக்கு அரசு சார்பில் விழா எடுக்கப்படும்’ என்று தெரிவித்தார்.

இந்தி படத்துக்கு இளையராஜா இசை

மும்பை: நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் இந்தி படத்துக்கு இசையமைக்கிறார் இளையராஜா. இந்தியில் பல படங்களுக்கு இளையராஜா இசையமைத்துள்ளார். கடைசியாக அமிதாப் பச்சன் நடித்த பா படத்துக்கு அவர் இசையமைத்திருந்தார். இப்போது தமிழில் விடுதலை, …

ராமநவமி விழாவில் சோகம்ம.பியில் படிக்கட்டு கிணறு இடிந்த விபத்தில் 13 பேர் பலி

இந்தூர்: மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் ராமநவமி விழாவில் படிக்கட்டு கிணறு சரிந்து விழுந்த விபத்தில் இதுவரை 13 பேர் பலியாகினர். மத்தியபிரதேச மாநிலம் இந்தூரில் படேல் நகரில் உள்ள பலேஷ்வர் மகாதேவ் ஜுலேலால் என்ற புகழ்பெற்ற பழமையான கோயிலில் ராமநவமி விழாவை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் குவிந்திருந்தனர். விழாவின் ஒருபகுதியாக நடைபெற்ற தீப சடங்கை முன்னிட்டு, அங்கிருந்த படிக்கிணற்றில் குளிக்க பக்தர்கள் முண்டியடித்து கொண்டு உள்ளே இறங்கினர். அப்போது பாரம் தாங்காமல் கிணற்றின் படிக்கட்டுகள் சரிந்து … Read more

வடமாநில தொழிலாளர் வழக்கில் கைதான மதுரை நீதிமன்றத்தில் பீகார் யூடியூபர் ஆஜர்: விமானத்தில் போலீசார் அழைத்து வந்தனர்

மதுரை: வடமாநில தொழிலாளர்கள் குறித்து, அவதூறு பரப்பிய பீகார் யூடியூபர், மதுரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். வடமாநில தொழிலாளர்களின் உயிருக்கு தமிழ்நாட்டில் அச்சுறுத்தல் உள்ளதாக கூறி பொய்யான கருத்துக்களையும், போலி வீடியோக்களையும் வெளியிட்டதாக பீகார் மாநிலத்திலுள்ள சச்தக் நியூஸ் என்ற யூடியூப் சேனலின் நிர்வாகி மனீஷ் காஷ்யப் (எ) டி.கே.திவாரி (32) மீது மதுரை சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிந்துள்ளனர்.  இதுதொடர்பான வழக்கில் ஏற்கனவே பீகார் மாநிலம், சாம்பவார் மாவட்டத்திலுள்ள ஜக்தீஷ்பூர் போலீசார், மனீஷ் காஷ்யப் உள்ளிட்ட 4 … Read more

சென்னை திருவான்மியூரில் உள்ள கலாஷேத்ராவுக்கு ஏப்.6-ம் தேதி வரை விடுமுறை

சென்னை: சென்னை திருவான்மியூரில் உள்ள கலாஷேத்ராவுக்கு ஏப்.6-ம் தேதி வரை விடுமுறை என கல்லூரி முதல்வர் அறிவித்துள்ளார். பாலியல் தொல்லை அளித்த பேராசிரியர் ஹரி பத்மன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாணவிகளின் போராட்டத்தை தொடர்ந்து கலாஷேத்ராவுக்கு ஏப்.6-ம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

ராம நவமியை முன்னிட்டு ஆதிபுருஷ் புது போஸ்டர் வெளியீடு

மும்பை: ராம நவமியை முன்னிட்டு ‘ஆதி புருஷ்’ படக்குழு புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளது. ராமரின் பிறந்த நாள் ராம நவமி விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. நன்மையின் தொடக்கத்தை குறிப்பிடும் இந்நன்னாளில் ராமாயண காவியத்தை தழுவி …

அரிய வகை நோய் மருந்துகள் இறக்குமதிக்கு வரிவிலக்கு

புதுடெல்லி: அரிய நோய்களுக்கான மருந்துகள் மற்றும் சிறப்பு மருத்துவ தேவைகளுக்கான உணவுகளுக்கு இறக்குமதி வரி விலக்கு அளித்து ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது. இறக்குமதி வரி விலக்கு  ஏப்ரல் 1ம் தேதி(நாளை) முதல் அமலுக்கு வரும் என  தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஒன்றிய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், பொதுவாக மருந்துகளுக்கு அடிப்படையாக 10% இறக்குமதி வரி விதிக்கப்படுகிறது. சில உயிர் காக்கும் நோய்களுக்கும், தடுப்பூசிகளுக்கும் சலுகை விகிதத்தில் 5% இறக்குமதி வரி அல்லது 0% இறக்குமதி வரி விதிக்கப்படுகிறது. இந்நிலையில், … Read more

ஆந்திரா கோயிலில் தீ

திருமலை: ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டம் துவா கிராமத்தில் வேணுகோபால சுவாமி கோயில் உள்ளது. இந்த கோயிலில் நேற்று ராம நவமியையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.  கோயிலில் ராம நவமி பூஜைகள் நடைபெற்று கொண்டு இருந்தது. இதனை காண நூற்றுக்கணக்கான பக்தர்கள் கோயில் வளாகத்தில் திரண்டு இருந்தனர். இந்நிலையில், நிழலுக்காக போடப்பட்டிருந்த பனை ஓலை பந்தல் திடீரென தீப்பிடித்து எரிய தொடங்கியது. பக்தர்கள் அனைவரும் பாதுகாப்பாக வெளியேறினர். உயிர் சேதம் ஏற்படவில்லை.