மாணவிகள் போராட்டம் நடத்தும் நிலையில் ஆன்லைனில் பின்னர் தேர்வு நடத்தப்படும்: கலாஷேத்ரா நிர்வாகம்

சென்னை: மாணவிகள் போராட்டம் நடத்தும் நிலையில் ஆன்லைனில் பின்னர் தேர்வு நடத்தப்படும் என  கலாஷேத்ரா நிர்வாகம் தெரிவித்துள்ளது. புகார்களை எழுத்துப்பூர்வமாக வழங்க மாணவிகளிடம் கூறியுள்ளோம் என கல்லூரி இயக்குநர் ரேவதி ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

மத்திய பிரதேசத்தில் ராம நவமி கொண்டாட்டத்தின் போது கோயில் படிக்கிணற்றின் ஒரு பகுதி இடிந்து விழுந்து 12 பேர் பலி..!!

போபால்: மத்திய பிரதேசத்தில் ராம நவமி கொண்டாட்டத்தின் போது கூட்ட நெரிசல் காரணமாக கோயில் கிணறு இடிந்து 12 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மத்திய பிரதேசத்தின் இந்தூர் பட்டேல் நகரில் உள்ள கோயில் ஒன்றில் ராமநவமி கொண்டாட்டம் நடைபெற்றது. அளவுக்கு அதிகமாக கூட்டம் காரணமாக அந்த கோயிலில் உள்ள பழமையான படிக்கட்டின் மேற்கூரை இடிந்து விழுந்தது. இதனால் பக்தர்கள் கிணற்றுக்குள் விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக தீயணைப்புத்துறை அங்கு மீட்பு பணிகளை தொடங்கிய நிலையில் 12 பேர் … Read more

உலகப் பிரசித்தி பெற்ற மதுரை சித்திரை திருவிழா ஏப்.23ல் துவக்கம்: மே 5ல் அழகர் வைகையில் இறங்கும் வைபவம்

மதுரை: மதுரையில் சித்திரை திருவிழா ஏப். 23ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது. மே 2ம் தேதி மீனாட்சி திருக்கல்யாணம், மே 5ம் தேதி அழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் பிரசித்தி பெற்ற சித்திரை திருவிழா, ஏப். 23ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அன்றைய தினம் காலை 10.35 மணிக்கு மேல் 10.59 மணிக்குள் மிதுன லக்னத்தில் சுவாமி சன்னதியில் உள்ள கொடிமரத்தில் கொடியேற்றப்படுகிறது. அன்றைய தினத்தில் இருந்து மீனாட்சி, சுந்தரேஸ்வரர் … Read more

13 ஏஎஸ்பிக்கள் உட்பட 20 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு

சென்னை: தமிழ்நாட்டில் 14 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு மற்றும் 6 அதிகாரிகளை இடமாற்றம் செய்தும் தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. கொளத்தூர் காவல் மாவட்டத்தின் துணை ஆணையராக சக்திவேல் நியமிக்கப்பட்டுள்ளார். மதுரை காவல் தலைமையகத்தின் துணை ஆணையர் கவுதம் கோயல், சேலம் நகர வடக்கு துணை ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

வைக்கம் நூற்றாண்டு விழா, காந்தி, பெரியார், ஸ்ரீநாராயணகுரு போதனைகளை மீண்டும் பின்பற்ற பொருத்தமான தருணம்: ராகுல் காந்தி டிவீட்

டெல்லி: வைக்கம் நூற்றாண்டு விழா, காந்தி, பெரியார், ஸ்ரீநாராயணகுரு போதனைகளை மீண்டும் பின்பற்ற பொருத்தமான தருணம் என வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழாவை ஒட்டி காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி டிவீட் செய்துள்ளார். பாகுபாட்டுக்கு எதிராகப் போராடி, சமத்துவம், நீதியின் பாதையில் நாட்டை வழிநடத்திய அனைவருக்கும் அஞ்சலிகள் என ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

நெல்லை, அம்பையில் விசாரணைக்கு அழைத்து சென்றவர்களின் பல்லை பிடுங்கிய விவகாரம்!

நெல்லை: நெல்லை, அம்பையில் விசாரணைக்கு அழைத்து சென்றவர்களின் பல்லை பிடுங்கிய விவகாரத்தில் பாதிக்கப்பட்ட நபர்கள் வேறு யாரேனும் இருப்பின், ஏப்ரல் 10ம் தேதிக்குள் நேரில் எழுத்துப்பூர்வமாக புகார் மனு அளிக்கலாம் என்று சம்பவம் குறித்து விசாரித்து வரும் ஆட்சியர் அறிவித்துள்ளார்.

இலங்கை கடற்படையால் சிறை பிடிக்கப்பட்ட தமிழ்நாட்டைச் சேர்ந்த 16 மீனவர்கள் சென்னை வந்தனர்

சென்னை: இலங்கை கடற்படையால் சிறை பிடிக்கப்பட்ட தமிழ்நாட்டைச் சேர்ந்த 16 மீனவர்கள் சென்னை வந்தனர். 16 மீனவர்களும் கொழும்பு நகரில் இருந்து புறப்பட்டு இன்று மாலை 3.15 மணிக்கு சென்னை வந்தனர். சென்னை வந்த 16 மீனவர்களும் தமிழ்நாடு அரசு ஏற்பாடு செய்த வாகனங்களில் அவரவர் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். நாகை, புதுக்கோட்டை மீனவர்கள் 16 பேர் எல்லை தாண்டி மீன்பிடித்தாக இலங்கை கடற்படையால் மார்ச் 12-ல் கைது செய்யப்பட்டனர். ஒன்றிய, மாநில அரசுகளின் முயற்சியால் … Read more

2 ஆண்டு தண்டனையை எதிர்த்து ராகுல் காந்தி அப்பீல் செய்ய முடிவு: சட்டவல்லுநர்களுடன் ஆலோசனை

புதுடெல்லி: காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்திக்கு விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து அப்பீல் செய்வது குறித்து சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. 2019-ம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலின் போது கர்நாடகா மாநிலத்தில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, மோடி சமூகத்தினரை அவமதித்ததாக சூரத்தில் உள்ள கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இந்த வழக்கில் மேல்முறையீடு செய்ய … Read more

கொலையா… தற்கொலையா…! சாத்தூரில் திகில் ஏற்படுத்திய மண்டை ஓடு: போலீசார் மீட்டு விசாரணை

சாத்தூர்: சாத்தூர் அருகே, சாலையோரம் மண்டை ஓட்டுடன் எலும்புக்கூடு கிடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த எலும்புக்கூட்டை மீட்ட போலீசார், கொலை செய்து புதைக்கப்பட்டவரின் எலும்புக்கூடா அல்லது தற்கொலை செய்தவரின் எலும்புக்கூடா என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சாத்தூர்-நெல்லை நான்கு வழிச்சாலையில் எட்டூர்வட்டம் அருகே, சுங்கச்சாவடி செயல்பட்டு வருகிறது. இதன் அருகே கிழக்கு பகுதியில் சாலையோரம் நேற்று மனித மண்டை ஓடு மற்றும் எலும்பு கூடு கிடந்தன. அந்த வழியாக இருசக்கர … Read more

வாடிக்கையாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய தங்க நகைகளின் மீது HUID 6 இலக்க எண் கட்டாயம்

சென்னை: வாடிக்கையாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய தங்க நகைகளின் மீது HUID 6 இலக்க எண் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்திய தர நிர்ணய அமைவன சென்னை பிரிவு தலைவர் பவானி செய்தியாளர்களிடம் தகவல் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் 170 ஹால்மார்க் முத்திரை மையங்கள் உள்ளது. 13341 தங்க நகை விற்பனையாளர்கள் உள்ளனர்.