படப்பிடிப்பு தளத்தில் இயக்குநரை திட்டி வீடியோ வெளியிட்ட ரோபோ சங்கர்

நடிகர் ரோபோ சங்கர் திரைப்பட சூட்டிங்கிற்காக ஊட்டி சென்றுள்ளார். அங்கே சூட்டிங் ஸ்பாட்டில் தான் படும் கஷ்டங்களை வீடியோவாக வெளியிட்டுள்ள ரோபோ சங்கர், 'ஊட்டில காலையில 6 மணிக்கு சூட்டிங் கூப்பிடுறார் ஆடம்ஸ். நான் இங்க ஊசி போட்டு வந்து உட்கார்ந்து இருக்கேன். இங்க என்னடனா காலையில் 6 மணியிலிருந்து மறுநாள் காலை 6 மணி வரை சூட்டிங் எடுக்கனுமாம். படத்தோட டைட்டில கேட்டாலும் சொல்ல மாட்றான். சாப்பாட்ட வாயில வைக்கும் போது தான் கூப்பிடுறான். ஏன் … Read more

ராஜமவுலிக்கு பரிசு கொடுத்து வாழ்த்திய 83 வயது ஜப்பான் ரசிகை

ராஜமவுலி இயக்கத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வெளியான ஆர்ஆர்ஆர் திரைப்படம் கடந்தாண்டு ஆஸ்கர் விருது போட்டியில் கலந்து கொண்டு சிறந்த ஒரிஜினல் பாடலுக்கான ஆஸ்கர் விருதை இசையமைப்பாளர் மரகதமணிக்கு பெற்று தந்தது. அதுமட்டுமல்ல உலக அளவில் அங்கே வருகை தந்திருந்த பல நாட்டு பிரபலங்கள் அனைவரையும் அந்த படம் வசீகரித்தது. மேலும் அதைத் தொடர்ந்து பல நாடுகளில் அந்த படம் மொழிமாற்றம் செய்தும் திரையிடப்பட்டது. குறிப்பாக ஜப்பானில் அந்த படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் … Read more

'மரியான்' மாதிரி இருக்குமா 'ஆடுஜீவிதம்' ?

பிளஸ்ஸி இயக்கத்தில், ஏஆர் ரஹ்மான் இசையமைப்பில், பிருத்விராஜ், அமலா பால் மற்றும் பலர் நடித்துள்ள மலையாளப் படம் ‛தி கோட் லைப் – ஆடுஜீவிதம்'. இப்படம் தமிழ், கன்னடம், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளிலும் டப்பிங் செய்யப்பட்டு பான் இந்தியா படமாக மார்ச் 29ம் தேதி வெளியாகிறது. இப்படத்தின் கதை, பரத்பாலா இயக்கத்தில், ஏஆர் ரஹ்மான் இசையமைப்பில், தனுஷ், பார்வதி மற்றும் பலர் நடிப்பில் 2013ல் வெளிவந்த 'மரியான்' படம் போல இருக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. … Read more

10-day bad to open sand quarry, lorry owner warns government | மணல் குவாரியை திறக்க 10 நாள் கெடு அரசுக்கு லாரி உரிமையாளர் எச்சரிக்கை

சேலம், சேலம் மாவட்ட ஒருங்கிணைந்த மணல் லாரி உரிமையாளர் சங்க செயலர் கண்ணையன் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி:தமிழகத்தில் மணல் குவாரிகளை திறக்காவிட்டால் லோக்சபா தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்திருந்தோம். அதன் எதிரொலியாக சேலம் கனிம வள உதவி இயக்குனர் பன்னீர்செல்வம் நடத்திய பேச்சில், செம்மண், மொரம்பு மண் எடுத்துச்செல்ல விண்ணப்பித்தால், ‘பர்மிட்’ தருவதாக உறுதி அளிக்கப்பட்டது. அத்துடன் எம்.சாண்ட் மணல் விலையை குறைக்கவும் நடவடிக்கை எடுப்பதாக தெரிவிக்கப்பட்டது.அதிலுள்ள நடைமுறை சிக்கல்களை களைந்து விரைந்து நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதால், … Read more

காந்தாரா இரண்டாம் பாகத்தில் சிவகார்த்திகேயன் பட நாயகி

கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு கன்னடத்தில் உருவாகி தென்னிந்தியா முழுவதும் வரவேற்பை பெற்ற படம் 'காந்தாரா'. கன்னடத்தில் இருந்து வெளியான 'கேஜிஎப்' படத்தை தொடர்ந்து அடுத்ததாக மிகப்பெரிய வரவேற்பு பெற்ற காந்தாரா திரைப்படத்தின் மூலம் படத்தின் இயக்குனரும் ஹீரோவுமான ரிஷப் ஷெட்டியும் தென்னிந்தியாவைத் தாண்டி பாலிவுட் வரை பிரபலமான நடிகர் ஆகிவிட்டார். அடுத்ததாக அவர் 'காந்தாரா லெஜன்ட் ; சாப்டர் 1' என்கிற பெயரில் காந்தாரா படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க உள்ளார். இதற்கான பணிகளில் தற்போது … Read more

14 மில்லியன் பார்வைகளைக் கடந்த 'கங்குவா' டீசர்

சிவா இயக்கத்தில், தேவிஸ்ரீ பிரசாத் இசையமைப்பில், சூர்யா, திஷா படானி, பாபி தியோல் மற்றும் பலர் நடிக்கும் படம் 'கங்குவா'. இப்படத்தின் டீசர் நேற்று மாலை யு டியூபில் வெளியிடப்பட்டது. 24 மணி நேரத்திற்கு முன்பாக 14.5 மில்லியன் பார்வைகளை இந்த டீசர் கடந்துள்ளது. கடந்த வருடம் ஜுலை மாதம் வெளியிடப்பட்ட இப்படத்தின் அறிமுக டீசர் வீடியோ 24 மணி நேரத்தில் 22 மில்லியன் பார்வைகளைக் கடந்தது. நேற்று வெளியான டீசர் அந்த சாதனையைக் கடக்குமா என்பது … Read more

Retired electrical workers are protesting for incentives and arrears | ஊக்கம், நிலுவை தொகை கேட்டு ஓய்வு மின் ஊழியர்கள் போராட்டம்

மேட்டூர், மேட்டூர், 840 மெகாவாட் அனல்மின் நிலையத்தில், 25 ஆண்டுகளுக்கு மேல் பணி புரிந்து ஓய்வு பெற்ற முகவர், பொருத்துனர் உள்பட, 50க்கும் மேற்பட்ட ஊழியர்கள் ஓய்வு பெற்றுள்ளனர். அவர்களுக்கு ஊக்கத்தொகை, நிலுவை, போனஸ் உள்ளிட்ட அரசு வழங்க வேண்டிய தொகைகளை அனல்மின் நிலைய அலுவலர்கள், கணக்குகளை பராமரிக்காமல் நிலுவை வைத்துள்ளனர்.அத்தொகையை வழங்க கோரி நேற்று காலை, ஓய்வு பெற்ற ஊழியர்கள், மேட்டூர், தொட்டில்பட்டி அனல்மின் நிலைய நிர்வாக அலுவலகம் முன் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுடன் மின் … Read more

ராம்சரண் 16 பட பூஜையில் ஏஆர் ரஹ்மான்

தெலுங்குத் திரையுலகத்தில் மட்டுமல்லாது இந்தியத் திரையுலகத்திலும் அறியப்பட்ட ஒரு நடிகராக இருப்பவர் ராம் சரண். 'ஆர்ஆர்ஆர்' படம் மூலம் ஆஸ்கர் வரையிலும் புகழ் பெற்றவர். தற்போது ஷங்கர் இயக்கத்தில், 'கேம் சேஞ்சர்' படத்தில் நடித்து வருகிறார். கடந்த சில வருடங்களாக எடுக்கப்பட்டு வரும் இப்படம் எப்போது வெளிவரும் என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள். இப்படத்தை அடுத்து ராம் சரண் நடிக்க உள்ள அவரது 16வது படத்தின் பூஜை இன்று(மார்ச் 20) ஐதராபாத்தில் நடைபெற்றது. 'உப்பென்னா' படத்தை இயக்கிய … Read more