Congress accuses BJP of election papers issue | தேர்தல் பத்திரங்கள் விவகாரம் பா.ஜ., மீது காங்., குற்றச்சாட்டு

புதுடில்லி தேர்தல் பத்திர விபரங்கள் வெளியாகி இருப்பதன் வாயிலாக, பா.ஜ.,வின் ஊழல் தந்திரங்கள் அம்பலமாகி உள்ளன’ என, காங்கிரஸ் கட்சி குற்றஞ்சாட்டி உள்ளது. இது குறித்து காங்கிரஸ் பொதுச்செயலர் ஜெய்ராம் ரமேஷ் நேற்று கூறியதாவது: கடந்த 2019 முதல் இதுவரை, தேர்தல் பத்திரங்கள் வாயிலாக, 1,300 நிறுவனங்கள் மற்றும் தனி நபர்கள், 6,000 கோடி ரூபாய் அளவுக்கு பா.ஜ.,வுக்கு நன்கொடை அளித்துள்ளனர். இதன் வாயிலாக, பா.ஜ.,வின் ஊழல் தந்திரங்கள் வெளிப்பட்டுஉள்ளன. இதில், சில நிறுவனங்கள் பெரும் தொகை … Read more

பொன் ஒன்று கண்டேன் பட விவகாரம் – வேதனையுடன் வசந்த் ரவி போட்ட பதிவு

கண்ட நாள் முதல், கண்ணாமூச்சி ஏனடா போன்ற படங்களை இயக்கிய பிரியா, தற்போது இயக்கி வரும் படம் பொன் ஒன்று கண்டேன். அசோக் செல்வன், வசந்த் ரவி, ஐஸ்வர்யா லட்சுமி ஆகியோர் நடிக்கும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்க, ஒய்எஸ்ஆர் பிலிம்ஸ் மற்றும் ஜியோ ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் தயாரிக்கின்றன. ரொமாண்டிக் காதல் கதையில் உருவாகும் இந்த படத்தின் வெளியிட்டு தேதி விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது இந்த படம் நேரடியாக தொலைக்காட்சியில் … Read more

Indian-origin couple, daughter killed in Canada fire | கனடாவில் தீ விபத்தில் இந்திய வம்சாவளி தம்பதி, மகள் உயிரிழப்பு

ஒட்டாவா: கனடாவில் இந்திய வம்சாவளி தம்பதி மற்றும் அவரது மகள் தீ விபத்தில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. தீ விபத்தில் சந்தேகம் இருப்பதால், தீவிர விசாரணை நடந்து வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர். கனடா நாட்டில் உள்ள டொரன்டோ மாகாணத்தில் உள்ள ஒரு வீட்டில் தீ விபத்து ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு தீயணைப்பு படையினர் விரைந்தனர். நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர். இதையடுத்து தீயில் கருகி உயிரிழந்த 3 பேரின் உடலை மீட்டனர். போலீசார் … Read more

India hits back at US for criticizing Citizenship Act | குடியுரிமை சட்டம் குறித்து விமர்சனம் அமெரிக்காவுக்கு இந்தியா பதிலடி

புதுடில்லி, ‘குடியுரிமை திருத்த சட்டம் தொடர்பாக அமெரிக்காவின் கருத்து தவறானது; தேவையற்றது’ என, மத்திய அரசு தெரிவித்துள்ளது. சமீபத்தில், மத்திய அரசு குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்தியது. இது தொடர்பாக அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் விமர்சனங்களை முன்வைத்தன. குடியுரிமை திருத்த சட்டம் குறித்து அமெரிக்க வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மேத்யூ மில்லர் கூறுகையில், ”குடியுரிமை திருத்த சட்டம் இந்தியாவில் மத சுதந்திரத்தை பாதிக்கும். இது எங்களுக்கு கவலைஅளிக்கிறது. இந்த சட்டத்தையும், அமல்படுத்தும் முறையையும் கூர்ந்து கவனித்து … Read more

ரஜினி உடன் செல்பி எடுத்த நிக்கி கல்ராணி : வருத்தத்தில் ஆதி

ஜெயிலர் படத்தை அடுத்து தற்போது ஞானவேல் இயக்கும் வேட்டையன் படத்தில் நடித்த வருகிறார் ரஜினிகாந்த். அவருடன் அமிதாப்பச்சன், பஹத் பாசில், ராணா, மஞ்சு வாரியர், ரித்திகா சிங் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இதன் படப்பிடிப்பு தற்போது ஐதராபாத்தில் நடைபெற்று வருகிறது. இதற்காக அவ்வப்போது சென்னையிலிருந்து விமானம் மூலம் ஐதராபாத்துக்கு சென்று வருகிறார் ரஜினி. இந்த நிலையில் ரஜினி சென்ற அதே விமானத்தில் பயணித்த நடிகை நிக்கி கல்ராணி, ரஜினியுடன் செல்பி எடுத்து மகிழ்ந்திருக்கிறார். அதோடு, தனது விமான … Read more

Supreme Court refuses to ban appointment of new Election Commissioners | புதிய தேர்தல் கமிஷனர்கள் நியமனத்துக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு

புதுடில்லி, மத்திய அரசு இயற்றிய புதிய சட்டத்தின் கீழ், இரு தேர்தல் கமிஷனர்கள் நியமிக்கப்பட்டதற்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் நேற்று மறுத்துவிட்டது. நாட்டின் தலைமை தேர்தல் கமிஷனர் மற்றும் இரண்டு தேர்தல் கமிஷனர்கள் நியமனம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் நடந்த வழக்கில், கடந்த ஆண்டு மார்ச் 2ல் தீர்ப்பளிக்கப்பட்டது. புதிய சட்டம் அதில், ‘தேர்தல் கமிஷனர்களை நியமிக்க உயர்மட்ட குழு அமைக்க வேண்டும். பிரதமர் தலைமையிலான அந்த குழுவில், லோக்சபா எதிர்க்கட்சி தலைவர், உச்ச நீதிமன்ற … Read more

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் மாதம்பட்டி ரங்கராஜ்

விஜய் டிவியில் நான்கு சீசன்களாக ஒளிபரப்பாகி வந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் தாமு மற்றும் வெங்கடேஷ் பட் ஆகிய இருவரும் நடுவர்களாக இருந்தார்கள். இந்த நிகழ்ச்சியில் இருந்து தற்போது வெங்கடேஷ் பட் விலகிக் கொண்டதை அடுத்து குக் வித் கோமாளி சீசன் ஐந்தாவது நிகழ்ச்சியில் தாமுவுடன் இணைந்து புதிய நடுவராக மாதம்பட்டி ரங்கராஜ் இடம் பெறுகிறார். இவர் மெஹந்தி சர்க்கஸ், பென்குயின் போன்ற படங்களில் நடித்தவர். அதோடு கேட்டரிங் தொழிலும் நடத்தி வருகிறார். திரையுலகில் நடைபெறும் … Read more

Severe water shortage in Bengaluru, IT workers fleeing to their hometowns | பெங்களூரில் தீவிரமாகும் தண்ணீர் தட்டுப்பாடு : சொந்த ஊருக்கு ஓட்டம் பிடிக்கும் ஐ.டி., ஊழியர்கள்

பெங்களூரு :கர்நாடகாவின் பெங்களூரில் கடும் தண்ணீர் தட்டுப்பாடு நிலவு வதால், அங்கு பணிபுரியும் ஐ.டி., ஊழியர்கள் சொந்த ஊர் சென்று வீட்டில் இருந்து வேலை செய்ய முடிவு செய்துள்ளனர். அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர்கள் இயற்கை உபாதைகளை கழிப்பதற்கு ஷாப்பிங் மால்களுக்கு செல்லும் அவலம் ஏற்பட்டுள்ளது. தொடரும் பாதிப்பு கர்நாடகாவின் பெங்களூரில் கடந்த சில நாட்களாக கடுமையான தண்ணீர் தட்டுப்பாடு நிலவுகிறது. நிலத்தடி நீர் குறைவு, பருவமழை பற்றாக்குறை போன்ற காரணங்களால் பெங்களூரு நகரம் மட்டுமின்றி புறநகர் பகுதிகளில் … Read more