சந்தைகளில் விற்பனைக்கு வரும் கொரோனா தடுப்பூசிகள்…!

புதுடெல்லி கொரோனா தடுப்பூசிகளான கோவிஷீல்டு, கோவாக்சினை சந்தையில் விற்க நிபந்தனையுடன் இந்திய மருந்து கட்டுப்பாட்டாளரால் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.  கோவாக்சின் தயாரிப்பாளரான பாரத் பயோடெக் மற்றும் கோவிஷீல்டு தயாரிப்பாளர் சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா ஆகியவை கொரோனா தடுப்பூசிகள் விற்பனைக்கு அனுமதி கோரி இருந்தன. மருத்துவ பரிசோதனைகளின் தரவுகளை இந்திய  மருந்து கட்டுப்பாட்டாளரிடம் அளித்தன. இது ஜனவரி 19 அன்று கொரோனா தொடர்பான நிபுணர் குழுவின் ஒப்புதலுக்குப் பிறகு சந்தை விற்பனைக்கு ஒப்புதல் அளித்தது.  இந்நிலையில் மத்திய … Read more

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் இறுதிப் போட்டியில் ஆஷ்லே பார்டி

மெல்போர்ன் கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்ன் நகரில் நடைபெற்று வருகிறது.  பெண்கள் ஒற்றையர் பிரிவின் இன்று நடைபெற்ற அரை இறுதி ஆட்டத்தில் ‘நம்பர் ஒன்’ வீராங்கனையான ஆஷ்லே பார்டி (ஆஸ்திரேலியா)- மேடிசன் கீஸ் (அமெரிக்கா) மோதினர். இதில், ஆஷ்லே பார்டி தன்னை எதிர்த்த மேடிசன் கீசை  6-1, 6-3 என்ற செட் கணக்கில் வெறும் 62 நிமிடங்களில் எளிதில் வீழ்த்தி உள்ளூர் ரசிகர்களை குதூகலப்படுத்தினார். இந்த வெற்றியின் மூலம் ஆஷ்லே பார்டி … Read more

ஓமைக்ரான் தோன்றிய ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து நுழைவதற்கான தடை நீக்கம்- ஐக்கிய அமீரகம்

துபாய், ஐக்கிய அமீரகத்தின் தேசிய அவசரகால நெருக்கடி மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையம், ஓமைக்ரான் தோன்றிய 12 ஆப்பிரிக்க நாடுகளைச் சேர்ந்த பயணிகளுக்கு நவம்பர் 2021 இல் விதிக்கப்பட்ட நுழைவுக் கட்டுப்பாடுகளை ஜனவரி 29-ம் தேதி முதல் நீக்குவதாக அறிவித்துள்ளது. இதுகுறித்து மேலாண்மை ஆணையம் தனது டுவிட்டர் பக்கத்தில்  “ஜனவரி 29 முதல், கென்யா, தான்சானியா, எத்தியோப்பியா, நைஜீரியா, காங்கோ குடியரசு, தென்னாப்பிரிக்கா குடியரசு, போட்ஸ்வானா, ஈஸ்வதினி, லெசோதோ, மொசாம்பிக், நமீபியா மற்றும் ஜிம்பாப்வே ஆகிய நாடுகளில் … Read more

தேசிய கொடியை இறக்க முயற்சித்தபோது கொடிகம்பத்தில் மின்சாரம் பாய்ந்து பள்ளிமாணவி பலி

ராய்பூர் சத்தீஸ்கரின் மகாசமுந்த் மாவட்டத்தில் பழங்குடியின பள்ளி மாணவிகள் தங்கும் விடுதி உள்ளது. அந்த விடுதியில் நேற்று குடியரசு தினம் விழா கொண்டாடப்பட்டது. விடுதி வளாகத்தில் மிகப்பெரிய உயரத்தில் இரும்பாலான கொடிகம்பத்தில் காலை தேசியக்கொடி ஏற்றப்பட்டது. அதன் பின்னர் மாலை தேசியக்கொடியை கொடிகம்பத்தில் இருந்து கழற்றி கொண்டுவரும் படி விடுதி காப்பாளர் மாணவிகளான கிரன் திவா மற்றும் காஜல் ஆகியோரிடம் கூறியுள்ளார். இதையடுத்து, இரு மாணவிகளும் கொடிகம்பத்தில் ஏற்றப்பட்டிருந்த தேசியக்கொடியை இறக்க முயற்சித்தனர். அப்போது, எதிர்பாராத விதமாக … Read more

இங்கிலாந்துக்கு எதிரான 3-வது 20 ஓவர் கிரிக்கெட் : வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி..!

பிரிட்ஜ்டவுன்,  வெஸ்ட் இண்டீசுக்கு சென்றுள்ள இயான் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரில் ஆடுகிறது.  முதல் ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் 9 விக்கெட் வித்தியாசத்திலும், 2-வது போட்டியில் இங்கிலாந்து ஒரு ரன் வித்தியாசத்திலும் வெற்றி பெற்று இருந்தது. இந்நிலையில்  3 வது 20 ஓவர் போட்டி நேற்று நடந்தது இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது . அதன்படி முதலில் களமிறங்கிய  வெஸ்ட் … Read more

மெக்சிகோவில் தொடரும் பத்திரிக்கையாளர்கள் கொலையை கண்டித்து நாடு தழுவிய போராட்டம்

மெக்சிகோ, மெக்சிகோவில் டிஜுனா நகரில் மூத்த பத்திரிக்கைளார் லூர்து மால்டோநாட்  என்பவர்  காரில் சென்ற போது மர்ம நபர்களால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் அந்நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  கொலை செய்யப்பட்ட மூத்த பத்திரிக்கையாளர் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பே தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக அந்நாட்டு அதிபரிடம் புகார் தெரிவித்து வந்திருந்தார். தற்போது அவர் கொலை செய்யப்பட்டுள்ளது  பத்திரிக்கையாளர்கள் மத்தியில்  கடும் அச்சத்தை  ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை … Read more

ஏர் இந்தியா நிறுவனம் டாடா குழுமத்திடம் ஒப்படைப்பு…!

புதுடெல்லி, மத்திய அரசு நிறுவனமான ஏர் இந்தியா நிறுவனம் தொடர்ந்து வருவாய் இழப்பில் இயங்கி வந்தது. அதனைத் தொடர்ந்து கடந்த சில ஆண்டுகளாகவே அந்நிறுவனத்தை விற்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வந்தது. எனினும் கடன் சிக்கலால் அந்நிறுவனத்தை வாங்க யாரும் முன்வரவில்லை. மேலும் கொரோனா பொதுமுடக்கக் காலத்தில் ஏற்பட்ட விமான சேவை பாதிப்பில் ஏர் இந்தியா நிறுவனத்தின் வருவாய் மேலும் சிக்கலுக்குள்ளானது. இதற்கிடையில், ஏர் இந்தியாவை விற்பனை செய்யும் முயற்சியை கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் … Read more

கிரிக்கெட்டில் மிகவும் கூர்மையான சிந்தனையாளர்களில் ஒருவர் டோனி – கிரேக் சேப்பல் கருத்து

கிரிக்கெட்டில் மிகவும் கூர்மையான சிந்தனையாளர்களில் ஒருவர்  டோனி  என இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளராக  பணியாற்றிய கிரேக் சேப்பல் கூறியுள்ளார்.   இந்திய அணியின் முன்னாள் கேப்டன் டோனி குறித்து அவர் கூறியதாவது ; கிரிக்கெட்டில் மிகவும் கூர்மையான சிந்தனையாளர்களில் ஒருவர் டோனி .இந்தியாவில் நான் பணிபுரிந்த, திறமையை வளர்த்துக் கொண்டு தமது பாணியில் விளையாடக் கற்றுக்கொண்ட சிறந்த பேட்ஸ்மேன்களில் டோனியும் ஒருவர்.  ஆரம்பத்தில் அதிக அனுபவம் வாய்ந்த வீரர்களுக்கு  எதிராக  விளையாடியதால் தனது  முடிவெடுக்கும் மற்றும் திறன்களை … Read more

உக்ரைனில் போர் பதற்றம்: அமெரிக்க மக்களை வெளியேற்ற தூதரகம் தீவிரம்

உக்ரைனில் போர்  பதற்றம்  நிலவி வருவதால் ஒவ்வொரு நாடும் தங்கள் நாட்டு மக்களை வெளியேற்ற முயன்று வருகிறது. அந்த வகையில்,  உக்ரைன் எல்லை பகுதியில் ரஷிய ராணுவம் நெருக்கடி கொடுத்து வருவதால் எந்த நேரத்திலும் போர் மூளும் அபாயம் இருப்பதால் அமெரிக்க தூதரகம் அந்நாட்டு குடிமக்களை இப்போதே புறப்பட தயாராக இருந்து கொள்ளுங்கள் என அறிவுறுத்தி உள்ளது. இந்த வார தொடக்கத்தில், உக்ரைனுக்கு பயணம் செய்ய வேண்டாம் என்று அமெரிக்கா தனது குடிமக்களை வலியுறுத்தியது குறிப்பிடத்தக்கது.

மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கருக்கு கொரோனா தொற்று உறுதி…!

புதுடெல்லி,  நாட்டில் கொரோனா பரவல் மீண்டும் வேகம் எடுத்துள்ளது. தொற்று பரவல் தினம் தினம் காட்டுத்தீ போல அதிகரித்து வருகிறது. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த இரவு ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கு போன்ற கட்டுப்பாடுகள் பல்வேறு மாநிலங்களில் அமல்படுத்தப்பட்டுள்ளன.   இதனிடையே கொரோனா பாதிப்பால் அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் உள்பட பல்வேறு தரப்பினரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய் சங்கருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டரில், “இன்று நான் … Read more